இலங்கை அதிபர்தேர்தலில் மகிந்த ராஜபக்சே படு தோல்வியைத் தழுவியுள்ளார். ராஜபக்சேவை எதிர்த்து போட்டியிட்ட 49 எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளரான மைத்ரிபால ஸ்ரீசேன சுமார் 3 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றியைநோக்கி பயணித்து கொண்டிருக்கிறார்.
மைத்ரிபாலவுக்கு 52.2%; ராஜபக்சேவுக்கு 46.5% வாக்குகள் கிடைத்துள்ளன. இலங்கை அதிபர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று நடைபெற்றது. அதிபராக உள்ள மகிந்த ராஜபக்சேவும் அவரை எதிர்த்து 49 எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக மைத்ரிபால ஸ்ரீசேனவும் போட்டியிட்டனர்.
இலங்கையில் இது வரை இல்லாத வகையில் 72% வாக்குகள் பதிவாகின. இத்தேர்தலில் பெரியளவில் வன்முறை சம்பவங்கள் நடை பெறவில்லை. பதிவான வாக்குகள் அனைத்தும் நேற்று இரவு முதல் எண்ணப்பட்டு வருகின்றன. முதல்கட்டமாக தபால் வாக்குகளும் பின்னர் மக்கள் அளித்த வாக்குகளும் எண்ணப்பட்டன. தமிழர்வாழும் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் மகிந்த ராஜபக்சேவுக்கு மிகமிக குறைவான வாக்குகளே கிடைத்தன.
மைத்ரிபால ஸ்ரீசேனவுக்கு மிக அதிகளவில் தமிழர்கள் வாக்களித்துள்ளனர். சிங்களர் வாழும் பகுதிகளிலும் கூட ராஜபக்சே தோல்வியை சந்தித்துள்ளார். அங்கும் மைத்ரி பால ஸ்ரீசேனவுக்கே அதிக வாக்குகள் கிடைத்திருக்கின்றன.
இதனால் இலங்கையின் புதிய அதிபராக மைத்ரி பால ஸ்ரீசேன வெற்றிபெற்றுள்ளார். அதிபர் தேர்தலில் தோல்வி அடைந்ததைத்தொடர்ந்து அதிகாரப்பூர்வமான இல்லமான அலரி மாளிகையைவிட்டு மகிந்த ராஜபக்சே இரவோடு இரவாக வெளியேறி விட்டார். தற்போதைய நிலையில் மைத்ரிபாலவுக்கு 52.2% வாக்குகளும் ராஜபக்சேவுக்கு 46.5% வாக்குகளும் கிடைத்துள்ளன.
இதய நோய் இந்த இதழ்களைச் சாப்பிடுவதால் இருதய நோய்கள் நீங்கும். தொடர்ந்து சாப்பிட ஆண்மை ... |
முற்றிய வேப்பிலையையும் வில்வ இலையையும் இடித்துச் சாறு எடுத்து காலையும் மாலையும் ஒரு ... |
குளிர்ச்சியின் காரணத்தால் ஏற்படும் சுரம், இருமல், அஜீரணத்தால் ஏற்படும் தொல்லைகள், வயிற்று உப்பிசம், ... |
Leave a Reply
You must be logged in to post a comment.