கன்னியாகுமரி முதல் திருவனந்தபுரம் வரை போக்குவரத்து நெரிசலை தவிர்க்க 4 வழிச் சாலைகள்

 நாகர்கோவில் கோட்டார் குறுந் தெருவில் உள்ள சிறுவர் பூங்காவில் ரோட்டரி கிளப்சார்பில் அமைக்கப்பட்ட சோலார் மின் விளக்கை திறந்து வைத்து மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் பேசியதாவது.

கன்னியாகுமரி முதல் திருவனந்தபுரம் வரை 4 வழிச் சாலை அமைக்கும் பணி தொடர்பாக நிலம் கையகப்படுத்துவது மற்றும் சிலபிரச்சனைகள் இருந்து வருகிறது. கன்னியாகுமரி முதல் திருவனந்தபுரம் செல்லும்வழியில் சுசீந்திரம், மார்த்தாண்டம், பார்வதிபுரம் ஆகிய பகுதிகளில் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது.

இதைபோக்க அந்த பகுதிகளில் மேம்பாலம் அமைக்கப்பட உள்ளது. இதற்காக ரூ.129 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தற்போது சாலைபாதுகாப்பு வார விழா கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

இந்தியாவில் ஆண்டிற்கு 1 லட்சத்திற்கு 37 ஆயிரம்பேர் மரண மடைகிறார்கள். 3 லட்சம் பேர் உடல் உறுப்புகளை இழக்கின்றனர். 4 லட்சம்பேர் விபத்தில் காயமடைகின்றனர். இந்தவிபத்துகளால் ஆண்டிற்கு மத்திய அரசுக்கு ரூ.55 கோடி இழப்பு ஏற்படுகிறது.

இது இந்தியாவின் வளர்ச்சியில் 4 சதவீதம் இழப்பாகும். கடந்த இந்தியாவின் வளர்ச்சி 4.5 சதவீதம். தற்போது 5.7 சதவீதத்தை எட்டியுள்ளது. 6.5 சதவீத வளர்ச்சியை எட்டும் நிலையில் இந்தியா உள்ளது. சாலை விபத்துக்கள் நடக்கவில்லை என்றால் இந்தியாவின் வளர்ச்சி 9 சதவீதத்தை எட்டி இருக்கும்.

சாலை விதிமுறைகளை அனைவரும் கடைபிடிக்கவேண்டும். சாலை விபத்துக்கள் 78 சதவீதம் ஓட்டுநர்களால் ஏற்படுகிறது. 1 சதவீதம்தான் சாலைகளால் ஏற்படுகிறது. சாலை விதி முறைகளை கடைபிடித்து விபத்தில்லா இந்தியாவை உருவாக்க வேண்டும் என்று அவர் பேசினார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

இது மோதலுக்கான நேரமல்ல மோடி கயா ...

இது மோதலுக்கான நேரமல்ல மோடி கயானாவில் பேச்சு கர்பியன் நாடான கயானா சென்றுள்ள பிரதமர் மோடி, நேற்று ...

இந்தியாவின் செயல்பாட்டிலும் ஜ ...

இந்தியாவின் செயல்பாட்டிலும் ஜனநாயகம் உள்ளது. – மோடி பெருமிதம் '' இந்தியாவின் டி.என்.ஏ.,விலும், செயல்பாட்டிலும் ஜனநாயகம் உள்ளது,'' என ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிக ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை அர்ப்பனிக்லக்கிறேன் – மோடி நெகிழ்ச்சி '140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப் ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை ஏற்படுத்த இந்தியா ஆர்வம் – மோடி பல்வேறு துறைகளில் கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியா ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அத ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிஷ்டம் – மோடி பெருமிதம் பிரதமர் ஆக கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிர்ஷ்டம்,'' ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென் ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென்ற முதல் இந்தியப் பிரதமர் மோடி பிரேசிலில் ஜி20 மாநாட்டை முடித்த பின், கயானா அதிபர் ...

மருத்துவ செய்திகள்

முட்டைக்கோசுவின் மருத்துவக் குணம்

முட்டைக்கோசில் அஸ்கார்பிக் (வைட்டமின் 'சி') உள்ளது. ஒரு கிளாஸ் முட்டைக்கோசு சாறு குடித்தாலே ...

கருத்தரித்த முதல் 3 மாதங்களில் என்ன செய்யலாம், என்ன செய்யக் கூடாது ?

கருத்தரிப்பு என்பது வியாதியில்லை. அது ஒரு உடல் ரீதியான மாற்றம். இதைச் ...

கரிசலாங்கண்ணி இலையின் மருத்துவக் குணம்

கரிசலாங்கண்ணியானது பித்தநீர்ப் பெருக்கியாகவும் மலமகற்றியாகவும் செயல்படுகிறது.