இந்தியாவில் தேசிய நூலாக இருக்க தகுதியுள்ள ஒரேநூல் திருக்குறள்தான் என்றும் தான் தமிழ் மாதாவுக்கு பிறந்தவன் என்றும் பா.ஜ. க எம்.பி தருண் விஜய் மதுரையில் பேசினார்.
பா.ஜ. க எம்.பி தருண் விஜய், திருவள்ளுவர் திருப் பயணத்தினை கன்னியாகுமரியில் துவக்கினார். பயணக் குழுவினர் நேற்றுமாலை மதுரை வந்துசேர்ந்தனர். பாரதியார் ஆசிரியராக பணியாற்றிய சேதுபதி மேல்நிலைப்பள்ளியில் அவர்களை வரவேற்கும் நிகழ்ச்சி நடந்தது.
மதுரையில் இயங் வரும் தமிழ் அமைப்புகள், கம்பன் கழகத்தினர், ஆன்மீக அன்பர்கள், பாஜகவினர் வரவேற்றார்கள். தஞ்சை சாஸ்திரா பல்கலைகழக பேராசிரியர் சீனிவாசன் பேசும்போது, ''கடந்த அறுபது வருடங்கள் நடந்த தமிழக அரசியலில் நாத்திகதமிழை வளர்த்து விட்டார்கள். இப்போது தான் ஆன்மிக தமிழை வளர்க்கும்நேரம் வந்துள்ளது. தமிழகத்தில் இனி ஆன்மீகமும் தமிழும் நன்குவளரும்.
தருண் விஜயை பார்க்கும் போது மீண்டும் திருவள்ளுவரும், பாரதியும் பிறந்து வந்தது போலுள்ளது. காரணம் இதற்குமுன் தமிழை வைத்து சிலர் வாழ்ந்து கொண்டார்கள். அவர்கள் தமிழர்களை இந்தியாவை எதிர்ப்ப வர்களாக, கடவுளை எதிர்ப்பவர்களாக, ஆக்கிவிட்டார்கள். இனி தருண்விஜய் மூலம் தமிழர்களை இந்திய தேசியர்களாக மாற்றுவோம்'' என்றார்.
பின்னர் பேசிய தருண் விஜய் ''ஆர்எஸ்எஸ்.சில் இருக்கும் போது அங்கு ஷாகாவில் பாடும் பிரார்த்தனை பாடலில் பலரை வணங்குவோம். அதில் கண்ணகி, ராஜேந்திரசோழன், கம்பர், வள்ளுவரை பற்றி போற்றிபாடுவோம். அப்போதுதான் நான் திருவள்ளுவரை அறியநேர்ந்தது.
இந்தியாவில் தேசிய நூலாக இருக்க தகுதியுள்ள ஒரேநூல் திருக்குறள்தான். சீனாவில் தமிழுக்கென்று ஒரு வானொலியை சிறப்பாக நடத்து கிறார்கள். மங்கோலியாவில் ஒரு மலைத்தொடருக்கு திராவிடன் மலை என்று பெயர் வைத்திருக்கிறார் கள். கிழக்காசியாவில் தமிழர்கள் கட்டிய கோயில்கள் உள்ளன.
இனி இந்தியாவில் அனைவர் வீட்டிலும் திருவள்ளுவர் படம் இருக்க வேண்டும். அனைத்து மாநிலங்களிலும் திருக்குறளை பாடமாக வைக்க வேண்டும். என்னை வடக்கத்திய எம்.பி. என்று நினைக்காதீர்கள். நான் தமிழ் மாதாவுக்கு பிறந்தவன். திருக்குறள் அரங்கேறிய மதுரையில் பேசுவதை பெருமையாக நினைக்கிறேன்.'' என்றார்.
புளிப்பு மாதுளை, இனிப்பு மாதுளை, இனிப்பும், புளிப்பும் கலந்த மாதுளை என்று மொத்தம் ... |
கருத்தரிப்பு என்பது வியாதியில்லை. அது ஒரு உடல் ரீதியான மாற்றம். இதைச் ... |
ஜீரணமாகாத காரணத்தால் புளிச்ச ஏப்பம், சாப்பிட்ட உணவு மேல் கிளம்பி விடுதல், வாயில் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.