மத்திய வேளாண்மை, விவசாயிகள் நலத்துறை அமைச்சர் சிவ்ராஜ் சிங் சௌகான், புதுதில்லியில் உள்ள டாக்டர் சி.சுப்பிரமணியம் அரங்கில் இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சிலின் 96-வது நிறுவன தினத்தையும், தொழில்நுட்ப தினத்தையும் 16.07.2024 அன்று தொடங்கி வைக்கிறார். மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு, பால்வளத்துறை அமைச்சர் ராஜீவ் ரஞ்சன் சிங், மத்திய வேளாண்மை, விவசாயிகள் நலத்துறை இணையமைச்சர்கள் பகீரத் சவுத்ரி, ராம் நாத் தாக்கூர், மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு, பால்வளம், சிறுபான்மையினர் நலத்துறை இணையமைச்சர் திரு ஜார்ஜ் குரியன், மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு, பால்வளம், பஞ்சாயத்து ராஜ் இணையமைச்சர் பேராசிரியர் எஸ்.பி. சிங் பாகெல் ஆகியோரும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வார்கள்.
கூட்டு ஆராய்ச்சியையும், தொழில்நுட்பத்தையும் வணிகமயமாக்கலுக்காக தொழில்துறை பிரதிநிதிகளுடன் இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சில் விஞ்ஞானிகளின் கலந்துரையாடல் கூட்டம் இன்று (15.07.2024) நடைபெற்றது. தானியங்கள், எண்ணெய் வித்துகள், தீவன பயிர்கள், கரும்பு உள்ளிட்ட 56 பயிர்களில் மொத்தம் 323 வகைகள் 2023-24-ம் ஆண்டில் விடுவிக்கப்பட்டன. இனப்பெருக்க விதைகளின் அடிப்படையில், 2023-24-ம் ஆண்டில் கோதுமை (13.0 மில்லியன் ஹெக்டேர்), நெல் (0.5 மில்லியன் ஹெக்டேர்), கம்பு (1.5 மில்லியன் ஹெக்டேர்), பயறு (0.50 மில்லியன் ஹெக்டேர்), கடுகு (1.0 மில்லியன் ஹெக்டேர்) உள்ளிட்ட பல்வேறு பயிர்களின் உயிரி செறிவூட்டப்பட்ட ரகங்கள் சுமார் 16.0 மில்லியன் ஹெக்டேர் பரப்பளவைக் கொண்டுள்ளன. பருவநிலை-நெகிழ்திறன் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவது, இயல்பிற்கு முரணான ஆண்டுகளில் கூட உற்பத்தியை அதிகரிக்க வழிவகுத்தது. இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகத்தின் முக்கிய கடமைகளில் ஒன்றான ரக மேம்பாடுகளும், உயர்தர ரகங்களின் தரமான விதைகளை மேம்படுத்த விவசாயிகளுக்கு கிடைக்கும் வாய்ப்பும் பண்ணை விளைபொருட்களின் உற்பத்தித்திறனையும், தரத்தையும் தொடர்ந்து அதிகரித்துள்ளன.
ஆண்டுக்கு ரூ.42,000 கோடிக்கும் அதிகமான ஏற்றுமதிக்கு பங்களிக்கும் உயர் விளைச்சல் தரும் சன்ன தானிய நறுமண பாஸ்மதி அரிசி வகைகள் குறிப்பிடத்தக்க சாதனைகளில் அடங்கும். இதில் 90%-க்கும் அதிகமான பங்களிப்பு நான்கு ஐ.சி.ஏ.ஆர் வகைகளான பூசா பாஸ்மதி 1121, பூசா பாஸ்மதி 1509, பூசா பாஸ்மதி 1401, பூசா பாஸ்மதி 1718 ஆகியவற்றுக்கு உரியதாகும்.
பால் உற்பத்தி 17.0 மில்லியன் டன்னிலிருந்து (1951) 230.6 மில்லியன் டன்னாக (2023) 13 மடங்கு அதிகரித்துள்ளது. இவ்வாண்டில் ஏழு புதிய கால்நடை இனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கவுன்சில் 4 தடுப்பூசிகள், 7 பரிசோதனைகள், 10 உணவு தொழில்நுட்பங்கள் ஆகியவற்றை உருவாக்கியுள்ளது.
இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கவுன்சிலின் நிறுவன தினம், தொழில்நுட்ப தினக் கொண்டாட்டங்களின் போது தொழில்நுட்ப கண்காட்சி, தொழில்துறை இடைமுகம் ஆகியவை முக்கிய ஈர்ப்பாக இருக்கும். நிலையானதும், பருவநிலை-நெகிழ்திறன் கொண்டதுமான விவசாயம், கண்காட்சியில் முக்கிய அங்கம் வகிக்கும். அரிசி, கோதுமை, மக்காச்சோளம், பருப்பு வகைகள், எண்ணெய் வித்துகள், தினை (ஸ்ரீ அன்னா) மற்றும் பிற வணிக பயிர்களுக்கான சுற்றுச்சூழலுக்கு உகந்த தொழில்நுட்பங்களும் கண்காட்சியில் முக்கியத்துவம் பெறும். இயந்திரமயமாக்கல், துல்லிய பண்ணையம், மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்கள் ஆகியவற்றிலும் கவனம் செலுத்தப்படும்.
ஜீரணமாகாத காரணத்தால் புளிச்ச ஏப்பம், சாப்பிட்ட உணவு மேல் கிளம்பி விடுதல், வாயில் ... |
தினமும் கடுக்காய்ச் சூரணம் செய்து வைத்துக்கொண்டு, உணவுக்குப் பின் திரிகடியளவு சுடுநீரில் கலந்து ... |
உங்களுக்கு நீரிழிவு என வைத்தியர் கூறியிருக்கிறார். இது உங்கள் மனத்தில் உங்கள் உடல்நிலை ... |