ஜம்மு-காஷ்மீர் மாநிலங்களவை தேர்தலில் பாஜ சார்பில் 2 பேர் போட்டி

 ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் பிப்ரவரி 7ல் நடைபெற விருக்கும் மாநிலங்களவை தேர்தலில் பாஜ சார்பாக ஷம்சர் சிங் மன்ஹாஸ் மற்றும் சந்தர்மோகன் சர்மா ஆகிய 2 பேர் போட்டியிடுகின்றனர். அவர்கள் இன்று வேட்புமனு தாக்கல் செய்கின்றனர் என்று பாஜவின் அகில இந்திய தலைவர் அமித்ஷா நேற்றிரவு புதுடெல்லியில் கூறினார்.

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் பாஜவுக்கு 25 இடங்களும், முப்தி முகமது சயீத்தின் மக்கள் ஜனநாயக கட்சிக்கு 28 இடங்களும் கிடைத்தன. எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காததால், அங்கு ஆட்சி அமைப்பதில் சிக்கல் நிலவி வருகிறது.

இந்நிலையில், ஜம்மு -காஷ்மீர் மாநிலத்தில் இருந்து ராஜ்யசபாவுக்கு ஏற்கெனவே தேர்ந்தெடுக்கப்பட்ட காங்கிரசை சேர்ந்த குலாம் நபி ஆசாத் மற்றும் சயீப் உத் தீன் சோஸ் ஆகிய இருவரின் பதவிக் காலம் பிப்ரவரி 10-ம் தேதியும், தேசிய மாநாட்டு கட்சியை சேர்ந்த குலாம் நபி வானி மற்றும் முகமது சபி ஆகியோரின் பதவிக் காலம் 15-ம் தேதியும் முடிவு பெறுகிறது.எனவே, இந்த 4 ராஜ்யசபை உறுப்பினர்களுக்கான தேர்தல் வரும் 7-ம் தேதி நடைபெறுகிறது. இத்தேர்தலில் போட்டியிடுவதற்கு வேட்பு மனு தாக்கல் செய்வதற்கு இன்று கடைசி நாளாகும்.

இந்நிலையில், ஜம்மு -காஷ்மீர் மாநிலத்தில் இருந்து ராஜ்யசபாவுக்கு போட்டியிடும் 2 வேட்பாளர்களை நேற்றிரவு பாஜ தலைமை அறிவித்தது.பாஜவின் தேசிய செயற்குழுவின் உறுப்பினரும் அம்மாநில முன்னாள் தலைவருமான ஷம்சர்சிங் மன்ஹாஸ் மற்றும் அம்மாநில முன்னாள் யுவ மோர்ச்சா தலைவவரும் மூத்த பாஜ உறுப்பினருமான சந்தர் மோகன் சர்மா ஆகிய 2 பேரும் பாஜ சார்பாக போட்டியிடுகின்றனர். அவர்கள் இன்று வேட்புமனு தாக்கல் செய்வார்கள் என்று பாஜவின் அகில இந்திய தலைவர் அமித்ஷா நேற்றிரவு புதுடெல்லியில் கூறினார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

இந்தியாவை அறிந்து கொள்ளுங்கள் ...

இந்தியாவை அறிந்து கொள்ளுங்கள் வினாடி வினாவில் கலந்து கொள்ள மோடி வலியுறுத்தல் இந்தியாவை  அறிந்துகொள்ளுங்கள் வினாடி வினாவில் பங்கேற்குமாறுபுலம்பெயர்ந்த இந்தியர்களையும், மற்ற நாடுகளைச் ...

5-நாள் அரசு முறைப்பயணத்தில் 31 தல ...

5-நாள் அரசு முறைப்பயணத்தில் 31 தலைவர்களை  மோடி சந்தித்தார் பிரதமர் நரேந்திர மோடி, அரசு முறை பயணமாக மூன்று ...

இது மோதலுக்கான நேரமல்ல மோடி கயா ...

இது மோதலுக்கான நேரமல்ல மோடி கயானாவில் பேச்சு கர்பியன் நாடான கயானா சென்றுள்ள பிரதமர் மோடி, நேற்று ...

இந்தியாவின் செயல்பாட்டிலும் ஜ ...

இந்தியாவின் செயல்பாட்டிலும் ஜனநாயகம் உள்ளது. – மோடி பெருமிதம் '' இந்தியாவின் டி.என்.ஏ.,விலும், செயல்பாட்டிலும் ஜனநாயகம் உள்ளது,'' என ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிக ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை அர்ப்பனிக்லக்கிறேன் – மோடி நெகிழ்ச்சி '140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப் ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை ஏற்படுத்த இந்தியா ஆர்வம் – மோடி பல்வேறு துறைகளில் கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியா ...

மருத்துவ செய்திகள்

உடற்பயிற்சியின் அவசியம்

கொழுப்புச்சத்தைக் குறைத்து உடலை சிக்கென்று ராணுவ வீரர் போல ஆக்க வேண்டுமா? ஜிம்முக்கு ...

முருங்கை கீரை , முருங்கை கீரையின் மருத்துவ குணம்

முருங்கை கீரையால் உட்சூடு, மந்தம், தலைநோய், மூர்ச்சை, வெறிநோய், கண்ணோய் போன்ற நோய்கள் ...

கொய்யாவின் மருத்துவ குணம்

கொய்யா மரத்தின் இலைகளைக் கொண்டு வந்து லேசாக வதக்கி ஒரு டம்ளர் தண்ணீர் ...