மத்திய அரசின் நுகர்வோர் விவகாரங்கள் அமைச்சகத்தின் கீழ் உள்ள நுகர்வோர் விவகாரங்கள் துறை வாகனங்ளைப் பழுதுபார்க்கும் நடைமுறைகளை எளிதில் மக்கள் அறிந்து கொள்ளும் வகையில், பழுதுபார்ப்பதற்கான உரிமை ( https://righttorepairindia.gov.in/ ) என்ற இணையதளத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
நுகர்வோரின் உரிமைகளை நிலைநிறுத்தவும், சிக்கல் இல்லாமல் வாகனப்பழுதுபார்ப்பை மேற்கொள்ளும் வகையிலும் இந்த தளம் அறமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக வாகன நிறுவனங்கள் பங்கேற்ற கூட்டம் மத்திய நுகர்வோர் விவகாரங்கள் துறை செயலாளர் நிதி காரே தலைமையில் புதுதில்லியில் நடைபெற்றது. இதில் வாகன தொழில்துறை சங்கங்கள் மற்றும் வாகன உற்பத்தி நிறுவனங்கள் பங்கேற்றன. இந்த நிறுவனங்கள் இந்த தளத்தில் இணைய வேண்டும் என்று இந்தக் கூட்டத்தின்போது கேட்டுக் கொள்ளப்பட்டது.
பழுது பார்ப்பு தொடர்பாக அனைவரும் அணுகக்கூடிய பழுதுபார்ப்பு கையேடுகள் மற்றும் வீடியோக்களை அதிகம் வெளியிட வேண்டியதன் அவசியத்தை செயலாளர் திருமதி கரே வலியுறுத்தினார். நெடுஞ்சாலைகளில் பழுது பார்ப்பு சேவைகளை வழங்குதல், எளிதில் பழுதுபார்க்கும் சூழலை ஏற்படுத்துதல், உதிரி பாகங்கள் உரிய முறையில் கிடைப்பது, சுய பழுதுபார்ப்பு குறித்த விரிவான கையேடுகளை வெளியிடுதல் போன்றவை அவசியம் என்று அவர் வலியுறுததினார்.
இந்தக் கூட்டத்தில் ஏசிஎம்ஏ, எஸ்ஐஏஎம் போன்ற வாகனத் தொழில்துறை சங்கங்களின் பிரதிநிதிகள் மற்றும் டாடா மோட்டார்ஸ், மஹிந்திரா, டிவிஎஸ், ராயல் என்ஃபீல்டு, ரெனால்ட்ஸ், போஷ், யமஹா மோட்டார்ஸ் இந்தியா, ஹோணடா கார் இந்தியா உள்ளிட்ட நிறுவனங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
அரச இலைக் கொழுந்தை விழுதாக அரைத்து நெல்லிக்காய் அளவும் பாலில் கரைத்து, காலையில் ... |
வயிற்றில் பூச்சியா - குழந்தையின் வயிற்றில் பூச்சி இருக்கிறது என்ற சந்தேகம் வந்தவுடனேயே ... |