வீட்டுக்குள் பிளாஸ்டிக்கால் வினை எரிகிற கொள்ளிகளில் எந்தக் கொள்ளி நல்ல கொள்ளி?

நாம் உபயோகிக்கும் பிளாஸ்டிக் சாமான்களில் எது எதெல்லாம் தரமானவை? தரமில்லாதவை எவை? எப்படி அறிவது? எந்த பிளாஸ்டிக் பொருளுக்கும் அடிபாகத்தில் முக்கோண () வடிவில் குறியீடு ஒன்றும் அதனுள் 1 முதல் 7 வரை ஏதாவது ஒரு குறிப்பிட்ட எண்ணும் இருக்கிறது. பார்த்திருக்கவில்லை என்றால், இப்போது பார்க்கவும். இந்த சின்னம், அந்த பிளாஸ்டிக் மறுசுழற்சி செய்ய கூடியவை என்பதைக் குறிக்கிறது.

 

 

எண்கள் தான் உபயோகிக்கும் பொருள் எவ்வகையான பொருட்களால் செய்யப்பட்டது என்று குறிக்கின்றன.

எண் 1: குளிர்பானங்கள், ஜூஸ், தண்ணீர், டிட்டர்ஜெண்ட் எனப்படும் சோப்புத்தூள் மற்றும் வேர்க்கடலை வெண்ணெய் அடைக்கப்படும் பிளாஸ்டிக் பாட்டில்கள்.

எண் 2 : பால், ஷாம்பு பாட்டில்கள், சிலவகை பிளாஸ்டிக் பேக்குகள் – ஒளி புகாத தன்மையானவை.

எண் 3 : பிவிசி. சமையல் எண்ணெய், வெண்ணெய் மற்றும் கெட்செப் வரும் பிளாஸ்டிக் பாட்டில்கள்

எண் 4 : மளிகை, காய்கறிக் கடை, ஹோட்டல்களில் இருந்து வீட்டிற்கு வரும் பிளாஸ்டிக் பைகள்.

எண் 5 : குட்டிப் பாப்பாவின் பாட்டில்கள்.

எண் 6 : ஸ்டைரோபோம், உணவு பரிமாறப்படும் தட்டு, கிண்ணங்கள், அதில் செய்யப்பட உணவு, பார்சல் செய்ய உபயோகமாகும் பொருட்கள், பரிமாறும் பாத்திரங்கள்.

எண் 7 : பெரும்பாலான தண்ணீர் பாட்டில்கள்; பிளாஸ்டிக் சாமான்களில் எண் 7 போடப்பட்டு இருந்தால், சமயலறையில் உணவு சேமிக்கவோ பரிமாறவோ வேண்டாம். அவை பாலிகார்பனேட்டுகளால் ஆனவை. மறுபடியும் மறுபடியும் பிரயோகிக்கக் கூடியவை, எண் 2,4 மற்றும் 5 – இவைதாம் பாதுகாப்பானவை.

எண் 1: பெட் பாட்டில்களை, ஒரு முறைக்கு மேல் உபயோகிக்க எண்ண வேண்டாம். பெட் பாட்டில்கள் தண்ணீரை மறுபடியும் சேமிக்கவோ, பயணத்தின் போதோ எடுத்துச் செல்வதற்காகத் திரும்பத் திரும்ப உபயோகிக்கும்போது, புற்று உண்டாக்கக் கூடிய, ஹார்மோன்களைத் தடை செய்யும் குணமுடையவை.

எண் 3 : பிவிசி என எல்லோரும் அறிந்த ஒன்று. சுற்றுப்புறத்தை விஷமுடையதாக்குகிறது. புற்று உண்டாக்கக் கூடியது. கிரெடிட்கார்டு,பேகிங், போலி லெதர் பொருட்கள், கட்டுமானப் பொருட்கள், ஜன்னல் ப்ரேம்கள், கேபிள், பைப்கள், வால்பேப்பர், தரை, காரின் உட்புறம், பொம்மைகள், மெடிக்கல் பொருட்கள் என சகலத்திலும் வியாபித்துள்ளது பிவிசி.

எண் 6 : எடை குறைந்த, கசியாத ஸ்டைரோபோம் கொண்டு தயாரிக்கப்பட்ட கிண்ணங்கள், தட்டுகள், மிகவும் மோசமானவை. மன அழுத்தம், தோல் நோய், சுவாச முட்டாள், கிட்னி பிரச்சினை, நரம்பு மண்டலம் பாதிப்பு போன்றவை இதோடு தொடர்பு படுத்தப் படுகிறது. உணவை எத்தனை சீக்கிரம் அதிலிருந்து மாற்றி விடுகிறீர்களோ அத்தனை நல்லது. நாம் விழிப்படைந்து விட்டால் இலையிலோ, தொன்னையிலோ பாஸ்ட் புட் துரித உணவகங்களில் பரிமாறும் நாள் தூரத்தில் இல்லை.

நன்றி : விஜய பாரதம்
– பூமா, துவாக்குடி

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

இன்று மாலை 5 மணி முதல் போர் நிறு ...

இன்று மாலை 5 மணி முதல் போர் நிறுத்தம்; மே 12ல் பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை! இன்று மாலை 5 மணி முதல் போர் நிறுத்தத்தை ...

ராணுவத்திற்கு உதவ தயார்

ராணுவத்திற்கு உதவ தயார் பாகிஸ்தான் தாக்குதல் நடத்தி வரும் நிலையில் இந்திய ராணுவ ...

போரை நிறுத்துவதற்கு உதவ தயார் ; � ...

போரை நிறுத்துவதற்கு உதவ தயார் ; ஜெய்சங்கரிடம் அமெரிக்கா அமைச்சர் பேச்சு 'இந்தியா பாகிஸ்தான் இடையிலான போரை நிறுத்த உதவி செய்ய ...

போர் பதற்றம் உச்சம்; பிரதமர் மோ� ...

போர் பதற்றம் உச்சம்; பிரதமர் மோடியுடன் தேசிய பாதுகாப்பு துறை ஆலோசகர் ஆலோசனை போர் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், டில்லியில் பிரதமர் ...

பாகிஸ்தானின் சதித்திட்டங்களை � ...

பாகிஸ்தானின் சதித்திட்டங்களை தொடர்ந்து முறியடிப்போம்; இந்திய ராணுவம் உறுதி ''பாகிஸ்தானின் சதித்திட்டங்களை தொடர்ந்து முறியடிப்போம்'' என இந்திய ராணுவம் ...

ஊடகங்கள் பொறுப்புடன் செயல்பட வ� ...

ஊடகங்கள் பொறுப்புடன் செயல்பட வேண்டும் – ராஜ்நாத் சிங் 'இந்திய ராணுவம் மேற்கொண்டு வரும் பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் ...

மருத்துவ செய்திகள்

பழங்களின் நற்பலன்கள்

பழம் அல்லது பழச்சாறு உட்கொள்வதன் மூலம் உறுப்புகள் நீர்த்துவம் பெறும். நோயாளிகள் பழங்களை ...

தொட்டாற்சிணுங்கியின் மருத்துவக் குணம்

இதன் இலை, வேர் உபயோகப்படுகிறது. இதன் சுவை இனிப்பு, துவர்ப்பு, கார்ப்பு உடையது. ...

ஆடாதொடையின் மருத்துவ குணம்

ஆடாதொடை இலையை தேவையான அளவு எடுத்து ஒரு சட்டிக்கு வேடுகட்டி, ஒரு டம்ளர் ...