இந்தியா – அமெரிக்கா நல்லுறவு, சீனாவுக்கு அச்சுறுத்தல் அல்ல

 இந்தியா – அமெரிக்கா இடையேயான நல்லுறவு, சீனாவுக்கு எந்தவகையிலும் அச்சுறுத்தல் அல்ல . அதே நேரத்தில், வியட்நாம், பிலிப்பைன்ஸ் போன்ற சிறியநாடுகளை, சீனா அச்சுறுத்த கூடாது,'' என, அமெரிக்க அதிபர் ஒபாமா தெரிவித்துள்ளார்.

அமெரிக்க அதிபர் ஒபாமா, கடந்தமாதம் இந்திய சுற்று பயணம் மேற்கொண்டார். இது குறித்து , கருத்துதெரிவித்த சீன அரசு, 'அமெரிக்காவின் வலையில், இந்தியா விழுந்து விடக் கூடாது' என, கூறியது.

சீனாவின் கருத்துக்கு பதில் அளிக்கும் விதமாக , அதிபர் ஒபாமா கூறியுள்ளதாவது:இந்தியா – அமெரிக்கா இடையே நல்ல உறவுள்ளது. இந்த உறவு குறித்து, சீனா விமர்சித்துள்ளது வியப்பாக இருக்கிறது. இந்தியா – அமெரிக்கா இடையேயான உறவால், சீனாவுக்கு எந்தவிதமான அச்சுறுத்தலும் இருக்காது. அதே நேரத்தில், கடல்சார் பிரச்னைகளுக்காக, பிலிப்பைன்ஸ், வியட்நாம் போன்ற சிறிய நாடுகளை, சீனா அச்சுறுத்த கூடாது.கடந்த ஆண்டு நவம்பரில், சீனபயணம் மேற்கொண்டிருந்தேன். அப்போது, சீன அதிபர் ஜிங்ஜின்பிங்கை சந்தித்துப் பேசினேன். அவருடன் நடத்திய பேச்சுவார்த்தைகள் வெற்றிகரமாக அமைந்தன.

ஒவ்வொரு நாடும், மற்றொரு நாட்டுடன் ஒருங்கிணைந்து செயல் படுவதன் மூலம், தங்கள் நாட்டு மக்களின் வாழ்க்கையை மேம்படுத்த அக்கறைகாட்டி வருகின்றன. அதற்காக, ஒருபொதுவான விதி முறைகளுக்கு கட்டுப்பட்டு நடக்கின்றன. இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடன் நான் நடத்திய பேச்சும், இந்த அடிப்படையிலேயே அமைந்தது.சீனா சிதறுவதால், ஏழ்மை நிலைமையை அடைவதால், சீர்குலை வதால் எங்களுக்கு என்ன லாபம். அதே நேரத்தில், சீனா சிறப்பான நிலையை அடைந்தால், அது எங்களுக்கு சாதகமே. அதனால், சீனா அமைதியான முறையில் வளர்ச்சியடைய வேண்டும் என்பதே, அமெரிக்காவின் விருப்பம். அதேநேரத்தில், மற்ற நாடுகளை பாதிக்கச்செய்து, சீனா வளர்ச்சி அடைய கூடாது. இதை, அமெரிக்க அதிபராக பதவியேற்றது முதல், நான் கூறி வருகிறேன். அத்துடன், எந்த நாட்டையும் சீனா அச்சுறுத்தக்கூடாது. நாடுகளுக்கு இடையேயான பிரச்னைகளை, சர்வதேச சட்டவிதிகளுக்கு உட்பட்டு, அமைதியான முறையில் பேசி தீர்க்கவேண்டும்.என்று , ஒபாமா கூறினார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

நீரிழிவு நோயை கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள:

நீரிழிவுநோயைக் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளவும் அதன்மூலம் பாதிப்புகள் ஏற்படாவண்ணம் பாதுகாத்துக் கொள்ளவும் உதவக்கூடிய ...

ஆடாதொடையின் மருத்துவ குணம்

ஆடாதொடை இலையை தேவையான அளவு எடுத்து ஒரு சட்டிக்கு வேடுகட்டி, ஒரு டம்ளர் ...

மஞ்சளின் மருத்துவக் குணம்

பசித் தூண்டியாகவும், நோய் தணித்தல், குடல் வாயு அகற்றியாகவும், தாது அழுகல் நீக்கியாகவும், ...