இந்தியாவின் ஆற்றல் மையத்தின் சமநிலையை மாற்றும் செயல்பாடுகளை எப்படி சீனா எதிர்கொள்ளும்?

 இரண்டு மையங்கள்
கடந்த வருடம் சீனாவுக்குப் பயணம் வந்த ஜப்பானின் கப்பற்படைத் தளபதி இந்தியா ஆசிய பசிபிக் பிராந்தியத்தின் சிக்கலான அரசியல் சார்ந்த விசயங்களில் பார்த்து பார்த்து முடிவெடுக்கும் நிலையைக் கடுப்போடு, 'இந்திய அரசியல் மிகவும் சிக்கலானது' என்று குறிப்பிட்டார்.

அட்மிரல் கட்சுடோஷி கவனோ இந்திய – அமெரிக்க மலபார் பாதுகாப்புப் பயிற்சிகளில் தங்களையும் இணைத்துக் கொள்ள இந்தியா ஒப்புக்கொள்ளாததைப் பாற்றிப் பேசும்பொழுது இப்படி புலம்பினார்.

ஜப்பானிய தளபதி ஒபாமாவின் வருகைக்குப் பிறகு ஆசிய பசிபிக் பகுதிக்கான தெளிவான, தைரியமான தொலைநோக்கு ஒன்றை இந்தியா வெளியிட்டிருப்பதால் இந்தியா வருவதற்கு ஆவலாக இருப்பார் என்று உறுதிபடச் சொல்லலாம்.

சீனா இந்த அமெரிக்க – இந்திய கூட்டுப் பாதுகாப்புத் தொலைநோக்கை ரசிக்கவில்லை என்றும் சொல்லலாம்.

ஆசிய பசிபிக் பகுதியின் அரசியல் சதுரங்கத்தில் இந்தியா அமெரிக்காவோடு இணைந்து செயல்படுவதை எப்படிப் பார்க்கிறது என்பதைப் பொறுத்தே அடுத்தடுத்த காய் நகர்த்தல்கள் இருக்கும்.

இரண்டு நாடுகளும் கடல் பாதுகாப்பை உறுதி செய்வதன் தேவையை அழுத்திச் சொன்னதோடு, ஆசிய பசிபிக் பகுதி முழுக்கச் சுதந்திரமாகக் கடற்பயணம் மேற்கொள்ளவும், குறிப்பாகத் தென் சீனக் கடற்பகுதியில் தடையின்றிப் பயணிக்கவும் உறுதி பூண்டுள்ளதாக அறிவித்தனர்.

சீனாவும் சும்மா இருக்கவில்லை. தென் சீனக் கடல் பிரச்சனைகளை அதில் சம்பந்தப்பட்ட கட்சிகள் மட்டுமே தீர்த்துக்கொள்ள வேண்டும் என்று எதிர்வினை ஆற்றியது. பெரிய நகர்வாக இந்தியா பல்வேறு நாடுகளோடு இணைந்து இந்தப் பகுதியில் பணியாற்ற இதுவரை யோசித்து வந்ததைக் கைவிட்டு உள்ளது.

சீனாவைக் காயப்படுத்தாமல் செயல்பட வேண்டும் என்று இந்தியா இதுவரை இயங்கி வந்ததே ஜப்பானிய தளபதியை அப்படிப் புலம்ப வைத்தது.

இந்தாத் தயக்கங்களைக் கூட்டுத் தொலை நோக்கி உடைத்திருக்கிறது. அடுத்த ஐந்து வருடங்களில் முத்தரப்பாக இன்னொரு நாட்டை இணைத்துக் கொண்டு இப்பகுதியில் இந்தியா, அமெரிக்கா முதலீடு செய்து இயங்கும் என்று ஜப்பானை சூசகமாக இணைத்து பேசியுள்ளார்கள்.

இந்தியா சீனாவின் மைதானத்தில் தன்னுடைய இருப்பை ஆழப்படுத்திக் கொள்வதற்காக எந்த வருத்தமும் தெரிவிக்காவிட்டாலும் இவையனைத்தும் பீஜிங்கை நேரடியாக குறிவைத்து தாக்கும் நோக்கிலானவை இல்லை என்று தெளிவுபடுத்தவும் மோடி விரும்புகிறார்.

ஜனவரி 31 துவங்கி சீனப் பயணத்தை மேற்கொள்ள உள்ள வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் இந்தப் பணியைச் செய்வார். அப்பொழுது சீனாவுடன் பொருளாதாரத் தளத்தில் இன்னமும் தெளிவான, பலமான உறவுகளையே இந்தியா விரும்புவதாகக் குஜராத்தில் ஜின் பின்கை மோடி வரவேற்ற பொழுது சொன்னதையே மீண்டும் உறுதிபடுத்துவார்.

இந்த இந்தியாவின் சாமர்த்தியமான ஆற்றல் மையத்தைச் சமநிலையில் வைத்துக்கொள்ளும் முயற்சியை எப்படிச் சீனா எதிர்கொள்ளும் என்பதைப் பொறுத்திருந்து பார்க்க வேண்டி இருந்தாலும் சீனா இந்தியப் பெருங்கடலில் தன்னுடைய இருப்பை இன்னமும் புதிய வேகத்தோடு பலப்படுத்துவதை இந்தியா எதிர்கொள்ள வேண்டி இருக்கும். இந்தியா டுடேவிடம் பேசிய சீன வெளியுறவுத் துறை அதிகாரி ஒபாமாவின் இந்திய வருகை தங்களை ஒன்றும் அச்சுறுத்தவில்லை என்று தெரிவித்துள்ளார். "பனிப்போர் போன்ற சூழல் உலகமயமாக்கப்பட்ட இக்காலத்தில் சாத்தியம் என்று நாங்கள் நினைக்கவில்லை" என்றும் அவர் குறிப்பிட்டார்.

இந்தியப் பெருங்கடலில் இந்தியாவைச் சுற்றி இலங்கை, வங்கதேசம், மியான்மர், மாலத்தீவுகளில் புதிய துறைமுகங்கள், சாலைகளைத் தன்னுடைய 'கடல் பட்டு சாலை'யின் முக்கிய நிறுத்தங்களை உருவாக்க சீனா கட்டும். இந்தியாவின் இந்த உற்சாகம் மிகுந்து புதிய அறிவிப்பு அதே அளவுக்குத் தீவிரமான செயல்பாடுகளால் முன்னெடுக்கப்பட வேண்டும்.

ஒபாமாவின் விமானம் இந்தியாவை விட்டு கிளம்பிய ஜனவரி 28 அன்று இருபத்தி இரண்டு மில்லியன் டன் கச்சா எண்ணெய்யைக் கொண்டு சேர்க்கும் பைப் லைனை வங்காள விரிகுடாவில் உள்ள மியான்மரின் துறைமுகத்தில் சீனா திறந்த நாளிலேய அந்நாட்டின் மிகப்பெரிய எண்ணெய் நிறுவங்களில் ஒன்றான ஹையாங் ஷியோயு தொடர்ந்து இந்திய பெருங்கடலில் இயங்கும் என்று அறிவித்துள்ளது என்று ஊடகங்கள் குறிப்பிட்டன.

"அடித்து ஆடிவிடுவது என்பதைச் சீனாவும் இந்தியாவும் விரும்பாவிட்டாலும் மேற்கின் தாக்கத்தில் இந்தியா அப்படியொரு நிலையை நோக்கி விழுந்துகொண்டிருக்கிறது" என்று சீன கம்யூனிஷ்ட் கட்சி நடத்தும் குளோபல் டைம்ஸ் இதழ் எச்சரித்துள்ளது.

நன்றி : இந்தியா டுடே
– அனந்த் கிருஷ்ணன்

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

அதிகாரப்பசி கொண்ட கட்சிகளை மக் ...

அதிகாரப்பசி கொண்ட கட்சிகளை மக்கள் நிராகரித்து விட்டனர் –  மோடி  'பார்லியில் மக்களுக்காக என்றுமே காங்., பேசியதில்லை. அதிகாரப் பசி ...

சிட்டுக்குடுவிக்களின் எண்ணிக் ...

சிட்டுக்குடுவிக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது – மோடி “நாட்டில் குறைந்து வரும் சிட்டுக்குருவிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க பல்வேறு ...

தேசிய மாணவர் படையில் இணையுங்கள ...

தேசிய மாணவர் படையில் இணையுங்கள் – பிரதமர் மோடி அழைப்பு  'என்.சி.சி.,யில் அதிகமான இளைஞர்கள் இணைய வேண்டும். வளர்ந்த இந்தியாவை ...

இந்தியாவை அறிந்து கொள்ளுங்கள் ...

இந்தியாவை அறிந்து கொள்ளுங்கள் வினாடி வினாவில் கலந்து கொள்ள மோடி வலியுறுத்தல் இந்தியாவை  அறிந்துகொள்ளுங்கள் வினாடி வினாவில் பங்கேற்குமாறுபுலம்பெயர்ந்த இந்தியர்களையும், மற்ற நாடுகளைச் ...

5-நாள் அரசு முறைப்பயணத்தில் 31 தல ...

5-நாள் அரசு முறைப்பயணத்தில் 31 தலைவர்களை  மோடி சந்தித்தார் பிரதமர் நரேந்திர மோடி, அரசு முறை பயணமாக மூன்று ...

இது மோதலுக்கான நேரமல்ல மோடி கயா ...

இது மோதலுக்கான நேரமல்ல மோடி கயானாவில் பேச்சு கர்பியன் நாடான கயானா சென்றுள்ள பிரதமர் மோடி, நேற்று ...

மருத்துவ செய்திகள்

மிக அழகான தோல் வேண்டுமா?

மிக அழகான தோல் தனக்கு வேண்டும் என விரும்பாதவர்களை இவ் உலகில் காண்பது ...

சித்த மருத்துவம்

சித்தர்களுக்கு சாதி, மதம், இனம், மொழி, தேசம் என்ற பாகுபாடு இல்லை. அகத்தியர், ...

பால் தரும் தாய்மார்கள் உணவில் கவனிக்க வேடியவை

பால் தரும் தாய்மார்கள் நல்ல ஆரோக்கியமாகவும், உடல் நலத்துடனும் இருந்தால்தான் 'பால்' நன்றாகச் ...