அமெரிக்க அதிபர் ஒபாமாவின் இந்திய பயணத்தின்போது, பிரதமர் நரேந்திர மோடி அணிந்திருந்த கோட்-சூட், சூரத்தில் இன்று ஏலம் விடப்படுகிறது. இதில் கிடைக்கும் நிதி கங்கை தூய்மை திட்டத்துக்காக தரப்பட உள்ளது. குடியரசு தின விழாவில் பங்கேற்பதற்காக கடந்தமாதம் 25ம் தேதி அமெரிக்க
அதிபர் பாரக் ஒபாமா இந்தியா வந்திருந்தார். அப்போது, டெல்லி ஐதராபாத் இல்லத்தில் பிரதமர் மோடியும், ஒபாமாவும் தனிமையில் சுமார் 3 மணி நேரம் பேசினர். அந்த சந்திப்பின் போதும், பத்திரிகையாளர்கள் சந்திப்பின் போது, மோடி பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட கோட்-சூட் அணிந்திருந்தார். அவரது சூட் முழுவதிலும், 'நரேந்திர தாமோதர்தாஸ் மோடி' என மோடியின் முழு பெயர் பொறிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், மோடி யின் அந்த சூட் இன்று சூரத்தில் ஏலம்விடப்பட உள்ளது. மோடி, குஜராத் முதல்வராக இருந்தபோது தனக்கு அன்பளிப்பாக கிடைத்த பொருட்களை வருடத்துக்கு ஒருமுறை ஏலம் விடுவது வழக்கம்.
அதில்கிடைக்கும் பணத்தை, ஏழைபெண் குழந்தைகளுக்கு கல்விநிதி வழங்கும் திட்டத்துக்கு வழங்குவார். இதேபோல, தற்போது மோடிக்கு அன்பளிக்காக வந்த கோட்சூட் உட்பட 455 பொருட்கள் சூரத்தில் ஏலம்விடப்பட உள்ளன. 3 நாட்கள் நடக்கும் இந்த ஏலம்குறித்து சூரத் மாநகராட்சி கமிஷனர் மிலின்ட் தோரவனே கூறுகையில், 'ஏலம்விடப்படும் 455 பொருட்களும் வந்து சேர்ந்துள்ளன. இதில் கிடைக்கும் நிதி கங்கை தூய்மை திட்டத்துக்கு வழங்கப்பட உள்ளது. சூட்டின் அடிப்படைவிலை என எதுவும் நிர்ணயிக்கப்படவில்லை' என கூறி உள்ளார்.
கோவைக்கொடி இனத்தை சேர்ந்த இந்தமூலிகைக்கு பொதுவாக கருடன் கிழங்கு, பேய் சீந்தில், ... |
பற்களுடைய இலைகளையும் மிகச்சிறிய வெண்ணிற மலர்களையும் உடைய தரையோடு படரும் சிறு செடி. ... |
திராட்சையானது பத்திய உணவுக்கு ஏற்றது. பசியையும் தூண்டவல்லது. தொண்டை, முடி, தோல், கண்களுக்கு ... |
Leave a Reply
You must be logged in to post a comment.