வட கிழக்கு மாநிலமான அருணாசல பிரதேசத்தை சீனா சொந்தம்கொண்டாடி வருகிறது. இந்தியாவின் அங்கமாக திகழும் அருணாசல பிரதேச எல்லையில் நடைபெறும் ரெயில் மற்றும் பஸ் போக்கு வரத்துக்கான உள் கட்டமைப்பு வசதிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்துவருகிறது.
இந்நிலையில் அருணாசல பிரதேச மாநிலம் உருவான தினம் தலைநகர் ஈட்டா நகரில் நேற்று முன்தினம் நடந்தது. அதில் பிரதமர் நரேந்திரமோடி கலந்து கொண்டார்.
இந்த விழாவில் அவர் பங்கேற்ற ஒருமணி நேரத்தில் சீனா இதற்கு எதிர்ப்பு தெரிவித்தது. பெய்ஜிங்கில் சீனாவுக்கான இந்தியதூதர் அசோக் காந்தாவை சீன வெளியுறவு துணைமந்திரி லியு ஷென்மின் நேரில் அழைத்து கண்டனம் தெரிவித்தார்.ரிவித்தது.
அதற்கு பதில் அளிக்கும் வகையில் இந்தியவெளியுறவு அமைச்சக அதிகாரி கிரன் ரிஜிஜு ஒரு அறிவிப்பு வெளியிட்டார். அதில் அருணாசல பிரதேசம் முழுவதும் இந்தியாவின் பகுதி, அங்கு இந்தியபிரதமர் செல்வதை யாரும் தடுத்து நிறுத்தமுடியாது.
அவ்வாறு இருக்கும்போது இந்திய பிரதமர் அவரது நாட்டில் உள்ள பகுதிக்கு செல்வதை பிரச்சினை ஆக்குவது ஏன் என கேள்வி எழுப்பினார். மேலும் சீனாவுக்கு பதிலடிகொடுக்கும் வகையில் அருணாசல பிரதேசத்துக்கு பிரதமர் நரேந்திரமோடி மீண்டும் செல்ல இருக்கிறார் என்றும் அவர் கூறினார்.
இலை கட்டி வீக்கம் கரைப்பதாகவும், நாடி நடை மிகுந்து வெப்பத்தைப் பெருக்குவதாகவும், பூ ... |
முடி அதிகம் கொட்டினால் உணவில் அதிகம் முருங்கைகீரைக்கு அதிகம் இடம் கொடுங்கள்.இரும்பு சத்து ... |
நீரிழிவுநோய் கட்டுப்பாட்டில்,உடற்பயிற்சி மிக முக்கிய இடத்தைப் பெறுகிறது. எனவே நீரிழிவுநோய் உடையவர்கள் தொடர்ந்து ... |
Leave a Reply
You must be logged in to post a comment.