தற்போது அறிவிக்கப்பட்ட தேர்தல் தேதியை மாற்றி அறிவிக்க வேண்டும்; பொன் ராதாகிருஷ்ணன்

தற்போது அறிவிக்கப்பட்ட தேர்தல் தேதியை மாற்றி மே மாதத்தில் நடைபெறும் வகையில் அட்டவணையை மாற்றி-அறிவிக்க வேண்டும் என்று , தமிழக பாரதிய ஜனதா தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது

தமிழகதேர்தல் வரும் ஏப்ரல் 13ந் தேதி நடைபெறும் என்ற தேர்தல் ஆணையத்தின் அறிக்கை தமிழக மக்களின் மனஉயர்வை புரிந்து கொள்ளாமல் அறிவித்ததாகவும் .

 

தமிழகம் எங்கும் தமிழ்-புத்தாண்டு ஏப்ரல் 14ந்-தேதி அதாவது சித்திரை 1ந் தேதி வர இருக்கிறது . தமிழக அரசு தமிழ் புத்தாண்டுதினத்தை தை1ந் தேதிக்கு அரசின்-அறிக்கையின் வாயிலாக மாற்றி இருந்தாலும் தமிழக மக்கள் இன்றும் சித்திரை 1ந் தேதியையே தமிழ் புத்தாண்டாக கொண்டாடி வருகின்றனர் .

எனவே தமிழ்-புத்தாண்டிற்கான முன் தயாரிப்புகளை ஒரு சில நாட்களுக்கு முன்பாகவே துவக்குவார்கள். மக்களின் உணர்வோடு-கலந்துவிட்ட இந்த தமிழ் புத்தாண்டிற்காக வீடுகளை-தயார்படுத்தவும் வழி பாட்டுத்தலங்களை தயார் படுத்துவதிலும் மும்முரமாக இருக்கும் ஏப்ரல் 13ந் தேதி தமிழக சட்டசபை தேர்தல் சித்திரை விழாவை சீர்குலைக்கும் செயல் என்று கருதுகிறேன்.

தேர்தல் ஆணைய அறிக்கைப்படி ஏப்ரல் 13ந்தேதி நடக்கும் தேர்தலின் வாக்கு-எண்ணிக்கை மே 13ந்-தேதி வைத்துள்ளது. வாக்கு பதிவு எந்திரத்தை ஒருமாதகாலம் காக்க வேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்தியுள்ளது . இந்த கால இடைவெளியில் தவறுகள் நடைபெற அதிக வாய்ப்பு உண்டு . தேர்தல் பிரசார ஒலி பெருக்கிகளும் பிரச்சனை தரும் மாணவர்களின் கவனத்தை படிப்பில் இருந்து திசை திருப்பும்.

இவ்வாறு பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

அகத்திக் கீரையீன் சிறப்பு

அகத்தை சுத்த படுத்துவதால் அகத்தி என பெயரை வைத்துள்ளனர்..சுமார் 50பது ஆண்டுகளுக்கு முன்பு ...

விளையாட்டு வீரர்களுக்கான உணவு முறைகள்

விளையாட்டு வீர்கள் ஒரு குறிப்பிட்ட உணவுகளை விரும்பி உண்டால் உணவில் மேற்கூறியபடி பல்வேறு ...

குடல்வால் தேவையா?

மனிதனின் உடலில் சிறுகுடல் மற்றும் பெருங்குடல் இணையும் இடத்தில் குடல்வால் எனும் ஒரு ...