தமிழகம் முழுவதும் சத்துணவு, அங்கன் வாடி மையங்களில் காலியாக உள்ள 40 ஆயிரம் பணியிடங்களை நிரப்பவேண்டும் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தர ராஜன் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக புதன் கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:
தமிழகம் முழுவதும் சத்துணவு, அங்கன்வாடி மையங்களில் காலியாக உள்ள 40 ஆயிரம் பணியிடங்களை நிரப்பவேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, மார்ச் 15-ம் தேதி முதல் கால வரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக ஊழியர் சங்கங்கள் அறிவித்துள்ளன. இதனால் அங்கன்வாடி மையங்களை நம்பியுள்ள குழந்தைகள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள். சத்துணவு வழங்குவதிலும் சிக்கல் ஏற்படும். எனவே, 40 ஆயிரம் காலிப் பணியிடங் களையும் உடனடியாக நிரப்பவேண்டும்.
1 முதல் 5-ம் வகுப்பு வரையுள்ள குழந்தைகளுக்கு சத்துணவுக்காக காய் கறி வாங்கவும் சமைக்கவும் தலா ரூ. 1.30-ம், 6 முதல் 10-ஆம் வகுப்புவரை தலா ரூ. 1.40-ம் தமிழக அரசு வழங்குகிறது.
இப்போதுள்ள விலை வாசியில் இநதத் தொகையில் காய்கறி வாங்கவோ, சமைக்கவோ முடியாது. இதனால் ஊட்டச் சத்து இல்லாமல் குறைகளோடு குழந்தைகள் வளரவேண்டிய நிலை ஏற்படும்.
சத்துணவு, அங்கன்வாடி மையங்கள் மிகச்சிறப்பாக செயல்படவும், குழந்தைகளுக்குப் போதிய ஊட்டச் சத்து கிடைக்கவும் காய்கறிகள் வாங்கவும், சமைக்கவும் ஒருகுழந்தைக்கு ரூ.5 ஒதுக்க வேண்டும். இதை செலவாகப் பார்க்காமல் ஏழை குழந்தைகளின் வளர்ச்சிக்கும், ஆரோக்கியத்துக்கும் செய்யும் முதலீடாகப் பார்க்கவேண்டும் என தமிழிசை சௌந்தரராஜன் கோரிக்கை விடுத்துள்ளார்.
கொத்துமல்லி, புதினா, போன்று கறிவேப்பிலையையும் நாம் வாசனைக்காக பல நூறு ஆண்டுகளாக பயன்படுத்தி ... |
நெல்லிக்காய் தினமும் ஒன்று சாபிட்டால் முடி கருமையாக வளரும். ஆலமரத்தின் இளம்பிஞ்சு ,வேர், காயவைத்து ... |
பள்ளிக்குச் செல்லுகின்ற குழந்தைகளுக்கு நல்ல சத்தான ஆரோக்கியமான உணவு கிடைத்தால்தான் அந்தக் குழந்தைகள் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.