அரசு உதவி வழக்கறிஞர் பணிக்கு நடந்த தேர்வை கைவிட்டு, மறுதேர்வு நடத்த வேண்டும்’ என, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
அரசு உதவி வழக்கறிஞர் பணியில் காலியாக உள்ள, 51 காலி பணியிடங்களை நிரப்புவதற்காக, தமிழக அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் முதல்நிலை தேர்வு, நேற்று பிற்பகல் நடப்பதாக அறிவிக்கப்பட்டது. இந்த தேர்வுக்கு, 4,000க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் விண்ணப்பித்து இருந்தனர்.
இந்நிலையில், பல மையங்களில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக, வழக்கறிஞர்கள் தேர்வு எழுத முடியாத சூழல் ஏற்பட்டதாகவும், விண்ணப்பித்த பலரின் பெயர்கள் தேர்வு மையங்களில் விடுபட்டிருப்பதாகவும் தெரிகிறது.
வழக்கறிஞர்களுக்கான தேர்வு ஏற்பாடுகளையே முறையாக மேற்கொள்ளவில்லை என்றால், தேர்வாணையம் நடத்தும் இதர தேர்வுகளை நம்பி, அரசு பணிக்கான தேர்வுகள் எழுத காத்திருக்கும் பல லட்சம் இளைஞர்கள் கதி என்ன?
அரசு பணிக்கான தேர்வுகளை, இத்தனை அலட்சிய போக்கில் கையாளும் தி.மு.க., அரசை கண்டிக்கிறேன். முறையான மறுதேர்வு நடத்த வேண்டும்.
1. கண்பார்வைத்திறன் குன்றியிருத்தல் 2. கண்நோய் 3. மாலைக்கண் நோய் 4. கண்ணில் சதை வளருதல் 5. கண்ணின் ... |
குடிமயக்கத்தைத் தெளிய வைக்க அவர்கள் வாயில் தாராளமாகத் தேனை ஊற்றலாம். சிறிது சிறிதாக ... |
நீரிழிவு நோய் குறித்த விழிப்புணர்வை அனைவரும் பெறவேண்டும். ஒருவருக்கு அதிக தாகம்... அதிக பசி... ... |