சென்னை ஈக்காட்டு தாங்கலில் உள்ள தனியார் டி.வி. நிறுவனம் மீது நடந்த தாக்குதல் தொடர்பாக இந்து முன்னணியினர் மீது பொய் வழக்கு போடப்பட்டு இருப்பதை கண்டித்து சென்னை சிந்தாதிரிப் பேட்டையில் இந்து முன்னணி சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடந்தது.
போராட்டத்தில் இந்துமுன்னணி மாநில அமைப்பாளர் ராம கோபாலன் கலந்துகொண்டார். அவர் நிருபர்களிடம் கூறியதாவது:–
இந்துக்களை வேண்டும் என்றே கொச்சைப் படுத்தி பேசியும், எழுதியும் வருகிறார்கள்.
ஆண்டாள், திருநாவுக்கரசர், காரைக்கால் அம்மையார் இவர்களை பற்றியெல்லாம் எவ்வளவு இழிவுப்படுத்த முடியுமோ அவ்வளவு இழிவுபடுத்தி எழுதினார்கள். இப்போது இந்துபெண்களுக்கு தாலி தேவையா? என்று விவாதம் வைக்கிறார்கள். தீபாவளி தேவைதானா என்கிறார்கள்.
இந்துக்களை எவ்வளவு அவமானப்படுத்த முடியுமோ அவ்வளவு அவமானப் படுத்துகிறார்கள். இதைப்பற்றி ஒரு முற்போக்கு வாதிகள்கூட பேசவில்லையே ஏன்? ஒரு குறிப்பிட்ட மதத்தை மட்டும் குறிவைத்து உள் நோக்கத்தோடு தாக்குவது ஏன்? இதுதான் கருத்துசுதந்திரமா?
ஈக்காட்டு தாங்கலில் உள்ள தனியார் டி.வி. நிறுவனம் நிகழ்ச்சியை கண்டித்து நாங்கள் போராட சென்ற போது 1 கிலோ மீட்டர் முன்பே போலீசார் தடுத்து நிறுத்தி சுட்டனர்.
ஆனால் எங்கள் மீது கேமராமேனை அடித்து கேமிராவை உடைத்ததாக பொய் வழக்கு போட்டு உள்ளனர். அதே நிறுவனத்தில் யாரோ டிபன் பாக்ஸ் குண்டு வீசியதை அறிந்ததும் கண்டித்தோம். கருத்தை கருத்தால் மோதி தீர்ப்பவர்கள் நாங்கள்.
தொடர்ந்து இந்துக்களை கேவலப்படுத்தி வருவதால் பொறுமை இழந்து போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளோம். ஏதோ ஒரு நாட்டில் நடந்த சம்பவத்திற்காக சென்னையில் போராட்டம் நடத்தி இயல்பு வாழ்க்கையையே ஸ்தம்பிக்க செய்தார்கள். ஆனால் அதையெல்லாம் எந்த முற்போக்கு வாதிகளும் கண்டு கொள்ளவில்லை. இந்துக்களை இழிவு படுத்துவதை தட்டிக்கேட்டால் வன்முறையில் ஈடுபடுவதாக கூறுகிறார்கள்.
நாங்கள் ஏமாளிகள் அல்ல. வீதிகள் தோறும், வீடுகள் தோறும் சென்று இந்துக்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளையும், அவமானங்களையும் எடுத்துச் சொல்வோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதன் சுவை இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு. இது குளிர்ச்சியை உடலுக்கு உண்டாக்கும். சிறுநீரை ... |
கீரையில் இருக்கும் சத்துக்கள் அனைத்தும் வீணாகாமல் அப்படியே முழுமையாக கிடைக்க, முதலில் கீரைகளை ... |
அதற்கு எந்த விதமான ஆதாரமும் இல்லை. நான் எந்த ஒரு ஊட்டச்சத்து மாவையும் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.