தமிழர் பிரச்சினையை தீர்க்க 13வது அரசியல் சட்டதிருத்தத்தை அமல்படுத்த வேண்டும் என்ற பிரதமர் மோடியின் கோரிக்கை, பாராளுமன்ற தேர்தலுக்குபிறகு கவனிக்கப்படும் என்று இலங்கை அதிபர் சிறிசேனா அறிவித்துள்ளார் .
கடந்த வாரம் இலங்கை சென்றிருந்த பிரதமர் நரேந்திர மோடி தமிழர் பிரச்சினைக்கு தீர்வுகாண 13-வது அரசியல் சட்டதிருத்தத்தை விரைவில் முழுமையாக அமல்படுத்துமாறு அழைப்புவிடுத்தார்.
இந்நிலையில், கொழும்பில் உள்ள அதிபர் மாளிகையில் பத்திரிகை ஆசிரியர்கள் பங்கேற்ற கூட்டத்தில் அதிபர் சிறிசேனா பேசியதாவது:-
அதிபர் பதவிகாலத்தை 6 ஆண்டுகளில் இருந்து 5 ஆண்டுகளாக குறைப்பதற்கான 19-வது அரசியல் சட்டதிருத்தம் அடுத்தவாரம் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும். அதன்பிறகு, பாராளுமன்ற தேர்தலுக்கு அழைப்புவிடுப்பேன். எனவே, ஏப்ரல் 23-ந் தேதிக்கு பிறகு பாராளுமன்ற தேர்தல் நடத்தப்படும்.
அந்ததேர்தலுக்கு பிறகு, 'தமிழர் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கான 13-வது அரசியல் சட்ட திருத்தத்தை அமல்படுத்த வேண்டும்' என்ற பிரதமர் நரேந்திர மோடியின் வேண்டுகோள் கவனிக்கப்படும்.
அதேசமயத்தில், தமிழர் பிரச்சினைக்கு தீர்வுகாண்பது எனது அரசின் முன்னுரிமை பணிகளில் ஒன்றாக தொடர்ந்து இருக்கும்.
இது வரை இலங்கைக்கு எதிராக கருதப்பட்ட தமிழர் அமைப்புகள், இலங்கை அரசுடன் இணைந்து பணியாற்ற தயாராக உள்ளன. கடந்தவாரம் நான் லண்டனுக்கு சென்றிருந்தபோது, புலம் பெயர்ந்த சில தமிழர் அமைப்பினர் என்னை சந்திக்க வந்தனர். அவர்கள் சிங்களமொழியில் பேசினர். தமிழர் பிரச்சினைக்கு தீர்வு காண்பதில் எனது அரசுடன் இணைந்து பணியாற்ற ஆர்வமாக இருப்பதாக கூறினர்.
இலங்கை பற்றிய சர்வதேசகருத்தும் மாறி வருகிறது. இனப்பிரச்சினையில் இலங்கைக்கு முன்பு உள்ள சவால்களை நாம் சந்தித்தே ஆகவேண்டும். தேசிய அரசு அமைந்தால், அனைவரும் ஏற்கத்தக்க தீர்வை எட்டமுடியும்.
இப்பிரச்சினையில் மாறுபட்ட கருத்துகள் நிலவுவதை நாம் உணரவேண்டும். நமது வாழ்நாளில் இன்னொரு போர் வரவேண்டாம் என்று நாம் விரும்பினால், பிரச்சினைக்கு தீர்வுகாண்பதில் ஒருமித்த கருத்து உருவாக்க வழி தேடவேண்டும். அதற்கு ஊடகங்களும் தங்களது பங்கை ஆற்றவேண்டும் என்று சிறிசேனா பேசினார்.
பாகற்காய் எளிதில் செரிமானமாகும். மலத்தைத் தூண்டும். பசியைத் தூண்டும். இருமல், வயிற்று உப்புசம், ... |
தலைவலி, கண்நோய், காதுநோய், கபநோய், ஜுரம், தாது நஷ்டம், தாகம், மேக நோய், ... |
சாத்துக்குடி பழத்தின் சுளைகளை வாயிலிட்டு சுவைத்துத் தின்றால் பற்கள் வலுப்படும். வாய் சுத்தமாகும். ... |
Leave a Reply
You must be logged in to post a comment.