மீத்தேன் திட்டம் ரத்து குறித்து வைகோ வின் கண்ணீர் பேட்டி (கற்பனை காமடி)
வைகோ: நான் நேரடியாவே விசயத்துக்கு வரேன். என்னய்யா நெனச்சுக்கிட்டு இருக்காரு அந்த மோடி…
திருக்குறள் தினம்னு ஒன்ன அறிவிச்சு, வடக்கே எல்லா பள்ளிகள்லயும் திருக்குறள சொல்லிக்குடுப்பாராம், இதுல அந்த தருண்விஜய் திருவள்ளுவரு, பாரதியாருன்னு சொல்லி நம்ம ஊருக்குள்ளயே வலம் வர்றார் . பொங்கலுக்கு தமிழ்ல வாழ்த்து வேற, யாராது கேட்டாங்களா? அப்புறம் சமஸ்கிருத திணிப்பு, தமிழ் புறக்கணிப்புன்னு நாங்க எப்படி பிழைப்பு நடத்துறது.
சரி அது போட்டுன்னு விட்டா, தமிழக மீனவர்கள் 5 பேர தூக்கிலிருந்து காப்பாற்றி வீட்டுக்கு கொண்டு வர்ராரு. இது தேவையா இவருக்கு? மீனவர்களையும், படகுகளையும் உடனடியாக விடுவிக்க வைக்கிறாரு.
சரி இலங்கை போனாரே, சிறிசேனாவ சந்திச்சமா, கை குலுக்குனமா, புத்தர் கோவிலுக்கு போனமான்னு வரவேண்டியது தானே?? எதுக்குயா யாழ்பாணம் போகணும், தமிழர்கள் வீட்டுக்கெல்லாம் போகணும்?? இதெல்லாம் போதாதுன்னு இலங்கை நாடாளுமன்றத்துல போய் " சிங்கள தீவினுக்கோர் பாலமமைப்போம்"னு பாரதியார் பாட்டு வேற…
சரி போகட்டும் அதான் மீத்தேன் இருக்கேன்னு விட்டா.. இப்போ திடுதிப்புன்னு மீத்தேன் திட்டத்தையும் ரத்து பண்ணபோறதா அறிவிச்சுருக்காரு.. இதெல்லாம் திட்டமிட்டு எங்கள் வயிற்றுப்பிழைப்பை கெடுக்கவேண்டும் என்ற நோக்கில் செய்த செயல்… இதுக்கு கொஞ்சம் மண்ண அள்ளிப்போட்டு என்ன மூடிக்கிட்டு போயிருக்கலாமே??
இப்படி மொழி, மீனவர்கள், இலங்கை, மீத்தேன்னு எங்க மூலதனத்துலயே, கை வெச்சா நாங்க எங்கய்யா போவோம்.
இப்போ எங்களுக்கு இருக்குற ஒரே நம்பிக்கை நியூட்ரினோ மட்டும் தான். அதுலயும் கைய வெச்சா அப்புறம் மகாராஷ்ட்ரா, ஆந்திரா பக்கமா போய் முறுக்கு சுத்தி பிழைக்கிறத தவிர வேற வழியே இல்ல .. இத மோடிக்கு ஒரு எச்சரிக்கையா நான் சொல்லிக்கிறேன்..
தம்பி சீமானையும், தம்பி திருமுருகனையும் நெனச்சா தான் என் கண்ணே கலங்குது…..
பழம் அல்லது பழச்சாறு உட்கொள்வதன் மூலம் உறுப்புகள் நீர்த்துவம் பெறும். நோயாளிகள் பழங்களை ... |
வாரம் ஒருமுறை மருதாணி இலையை அரைத்து தலையில்தேய்த்து குளித்து வந்தால், கூந்தல் பளபளப்பாகவும், ... |
Leave a Reply
You must be logged in to post a comment.