இஸ்ரேல் அதிபர் ரூவன் ரிவ்லினை, பிரதமர் நரேந்திர மோடி சிங்கப்பூரில் ஞாயிற்றுக் கிழமை சந்தித்துப் பேசினார்.
இந்தியா – இஸ்ரேல் இடையேயான நல்லுறவு குறித்து அப்போது விவாதிக்கப் பட்டது. இது குறித்து இந்திய வெளியுறவு துறையின் செய்தித்தொடர்பாளர் சையது அக்பருதீன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
மறைந்த சிங்கப்பூர் முன்னாள் பிரதமர் லீ குவான் யூ-வின் இறுதிச் சடங்கில் பங்கேற்பதற்காக பிரதமர் சிங்கப்பூருக்கு ஞாயிற்றுக் கிழமை காலை சென்றார். அந்நாட்டின் முன்னாள் பிரதமர் கோசோக் தாங், துணை பிரதமர் தர்மன் சண்முகரத்தினம் ஆகியோரை சந்தித்த மோடி, லீ குவான் யூ மறைவுக்கு தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொண்டார். லீ-யின் நிர்வாக திறமையையும், அவரது நல்லாட்சியையும் அப்போது மோடி நினைவுகூர்ந்தார்.
சிங்கப்பூரில் லீ மேற்கொண்ட பல்வேறு செயல்திட்டங்களால் தாம் கவர்ந்திழுக்கப் பட்டதாகவும், அதன் தாக்கமாகவே இந்தியாவில் வீட்டு வசதித்திட்டம், தூய்மை இந்தியா திட்டம் ஆகியவற்றை அமல்படுத்தியதாகவும் மோடி தெரிவித்தார்.
இருநாடுகளும் ஒருங்கிணைந்து பல்வேறு திட்டங்களை செயல்படுத்த வேண்டும் என்று மோடி விருப்பம் தெரிவித்தார்.
இஸ்ரேல் அதிபர் ரூவன் ரிவ்லினை சந்தித்துப்பேசிய மோடி, இந்தியா இஸ்ரேல் இடையேயான நல்லுறவை மேலும் மேம்படுத்துவது குறித்து விவாதித்தார்.
இஸ்ரேல்பிரதமராக அண்மையில் தேர்ந்தெடுக்கப்பட்ட பெஞ்சமின் நெதன்யா குவுக்கு அவர் வாழ்த்துதெரிவித்தார்.
இஸ்ரேல் நாட்டில் அரசு முறைப் பயணம் மேற்கொள்ளுமாறு மோடிக்கு, அந்நாட்டு பிரதமர் நெதன்யாகு அழைப்பு விடுத்திருந்தார். சுற்று பயண தேதி, அதற்கான நடை முறைகள் ஆகியவை முறைப்படி முடிவுசெய்யப்படும் என்று சையது அக்பருதீன் தெரிவித்தார்.
பத்மாசனம் தியானத்தில் இருக்கும் போது பத்மாசன நிலையே நல்லது. இது தியானங்களுக்கும், மன ஒருமைப்பாட்டுக்கும் ... |
முட்டையில் அதிக அளவு கொழுப்பு மற்றும் புரத சத்து நிறைந்துள்ளது முட்டையின் . ... |
வேப்பமரத்தின் பூக்கள் உடலுக்கு உரமளிக்கும். வயிற்று வலியைக் குணப்படுத்தும். குடற்புழுக்களைக் கொல்லும். இரத்தத்தைச் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.