தமிழர்கள் இந்தியாவை வழிநடத்த கூடிய அளவிற்கு பெருமை படைத்தவர்கள்

 தமிழ் மக்கள் இந்தியாவை வழிநடத்த கூடிய அளவிற்கு பெருமை படைத்தவர்கள். இந்தியாவை ஒற்றுமையாக இருக்க வைக்க கூடிய அளவிற்கு திறமை படைத்தவர்கள் என்று பாஜக எம்பி தருண்விஜய் கூறினார்.

காரைக்குடியில் பா.ஜ.க. எம்.பி. தருண்விஜய்க்கு கம்பன் கழகம் சார்பில் விருது வழங்கப்பட்டது. விருதை பெற்றுக்கொண்ட பின்னர் எம்பி தருண்விஜய் புதுக்கோட்டைக்கு வந்தார். அவரை பாஜக.,வினர் வரவேற்றனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய எம்பி தருண்விஜய்,

காரைக் குடியில் புதன் கிழமை நடைபெற்ற கம்பன் விழாவில் எனக்கு அருந்தமிழ்க் காவலர் விருது அளிக்கப்பட்டது தமிழ்க் கலாச்சாரத்துக்கு கிடைத்த பெருமையாகவே கருதுகிறேன். மிகவும் தொன்மையான மொழி. திருக் குறளையும் திருவள்ளுவரையும் அகில இந்தியளவில் கொண்டுசெல்ல வேண்டும் என்ற எனது வேண்டுகோளை பிரதமர் மோடியும், மத்திய அமைச்சர் ஸ்மிருதிராணியும் ஏற்றுக்கொண்டு அனைத்து மாநிலங்களிலும் அதைப் பரவச் செய்துள்ளனர். வட மாநிலங்கள் மட்டும்மல்லாமல் வடகிழக்கு மாநிலங்களுக்கும் கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்படும். இதன் மூலம் தமிழ்மொழியிழ் கலாச்சாரமும் பெருமையும் மீட்டெடுக்க முடியும்.

கம்பனின் ராமகாவியம் நம்நாட்டுக்கு அளித்த ஈடில்லா பங்களிப்பு என்பதில் ஐயமில்லை. பண்பாட்டு அறிவும், ஒற்றுமையும் கொண்ட பழம் பெரும் இந்தியாவின் பெருமைக்குரிய அடையாளமாக கம்பனைக்கூறலாம் கம்பன் வாழ்ந்த இடத்தையும், நினைவிடத்தை புதுப்பிக்க சுற்றுலாத் துறை மூலம் உரிய முயற்சிகள் மேற்கொள்ளப்படும். காரைக்குடி கம்பன் கழகத்தில் தமிழ் ஆய்வுமையம் நிறுவ எம்பி. மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ. 5 லட்சம் ஒதுக்கியுள்ளேன். வட மாநிலங்களில் சுமார் 5 ஆயிரம் பள்ளிகளில் கம்பரின் படங்கள், அவரது படைப்புகள் இடம் பெறச் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். திருவள்ளுவரும், கம்பரும் ஒருமைப்பாட்டுக்கான உந்துசக்தி. இவர்களை தமிழக மட்டுமல்லாது, நாடுமுழுவதும் பரவச்செய்யும் பணியில் தீவிரமாக உள்ளேன். கடந்த 2 மாதங்களில் வடமாநிலங்களில் 2 லட்சம் மாணவர்கள் திருக்குறளைப் பற்றி அறிந்துள்ளனர். வரும் நாட்களில் 10 லட்சம் மாணவர்கள் திருக்குறளை பயில வைப்பதே இலக்கு.

வட மாநிலத்தவர்கள் இந்தியை மட்டுமே தெரிந்து வைத்திருக்கும் நிலையில், தென்மாநிலத்த வரையும் இந்தி பயிலவேண்டுமென நினைக்கின்றனர். நான் அவர்களிடம் ஏன் நீங்கள் தொன்மையான தமிழ் மொழியை படிக்கக்கூடாது எனக்கேட்டேன். அதன் தொடக்கமாகவே திருக்குறளை அவர்களிடம் கொண்டு சேர்த்திருக்கிறேன். தமிழர்கள் வீடுகளில் தாய்மொழியில் பேசுவது குறைந்து வருகிறது. தமிழ் தான் உங்கள் அடையாளம். ஆங்கிலம் என்பது வணிகத்துக்கும், தொடர்புக்கும் மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

தமிழர்கள் மதத்தையும், கலாச் சாரத்தையும் தீவிரமாகப் பின்பற்றும் குணமுடையவர்கள். அதைமாற்ற நினைப்பவர்களின் முயற்சி வெற்றிபெறாது. நான் தமிழைத் தீவிரமாக கற்று வருகிறேன். விரைவில் தமிழிலேயே முழுமையாக பேசுவேன். திருக்குறள் விருது பெறுவதற்காக ஏப்ரல்.5 ல் சிங்கப்பூர் செல்கிறேன். பூர்வ ஜென்மத்தில் நான் தமிழனாகப் பிறந்திருந்தால் தானோ என்னவோ தமிழ் மீதான பற்றும், ஆர்வமும் இந்தஜென்மத்தில் வந்துள்ளதாகக் கருதுகிறேன் என்றார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

இது மோதலுக்கான நேரமல்ல மோடி கயா ...

இது மோதலுக்கான நேரமல்ல மோடி கயானாவில் பேச்சு கர்பியன் நாடான கயானா சென்றுள்ள பிரதமர் மோடி, நேற்று ...

இந்தியாவின் செயல்பாட்டிலும் ஜ ...

இந்தியாவின் செயல்பாட்டிலும் ஜனநாயகம் உள்ளது. – மோடி பெருமிதம் '' இந்தியாவின் டி.என்.ஏ.,விலும், செயல்பாட்டிலும் ஜனநாயகம் உள்ளது,'' என ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிக ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை அர்ப்பனிக்லக்கிறேன் – மோடி நெகிழ்ச்சி '140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப் ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை ஏற்படுத்த இந்தியா ஆர்வம் – மோடி பல்வேறு துறைகளில் கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியா ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அத ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிஷ்டம் – மோடி பெருமிதம் பிரதமர் ஆக கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிர்ஷ்டம்,'' ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென் ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென்ற முதல் இந்தியப் பிரதமர் மோடி பிரேசிலில் ஜி20 மாநாட்டை முடித்த பின், கயானா அதிபர் ...

மருத்துவ செய்திகள்

இளநீரின் மருத்துவ குணம்

காலராவின்போது, வாந்திபேதி இருப்பதால் உடலிலுள்ள நீர்ச்சத்து குறையும். கூடவே முக்கியமான தாதுஉப்புகளும் வெளியேறிவிடும். ...

மூலநோய் குணமாக

தினமும் கடுக்காய்ச் சூரணம் செய்து வைத்துக்கொண்டு, உணவுக்குப் பின் திரிகடியளவு சுடுநீரில் கலந்து ...

சித்த மருத்துவம்

சித்தர்களுக்கு சாதி, மதம், இனம், மொழி, தேசம் என்ற பாகுபாடு இல்லை. அகத்தியர், ...