உலக மக்கள் தொகை தினத்தையொட்டி குடும்ப நலத்துறை அமைச்சர் ஜே பி நட்டா விவாதம்

உலக மக்கள் தொகை தினத்தையொட்டி, மத்திய சுகாதாரம், குடும்ப நலத்துறை அமைச்சர் ஜெகத் பிரகாஷ் நட்டா குடும்பக் கட்டுப்பாடு குறித்து மாநிலங்கள்/ யூனியன் பிரதேசங்களுடன் காணொலி காட்சி மூலம் இன்று விவாதித்தார். “தாய்-சேய் நலனுக்காக ஆரோக்கியமான காலமும், கருவுறுதலில் இடைவெளியும்” என்ற மையப்பொருளில்  நடைபெற்ற இந்த நிகழ்வுக்கு மத்திய சுகாதாரம், குடும்பநலத்துறை இணையமைச்சர்  அனுப்பிரியா பட்டேல் முன்னிலை வகித்தார்.

உலக மக்கள் தொகையில் 5-ல் ஒரு பங்கினை இந்தியா கொண்டிருப்பதை எடுத்துரைத்த  அவர், மக்கள் தொகையை கட்டுப்படுத்துவதற்கான பணிகளை  மறுஉறுதி செய்யும் வகையில், உலக மக்கள் தொகை தினம் கடைப்பிடிக்கப்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்.  சிறு குடும்பங்கள் என்ற நெறிமுறையை சாதித்து இந்தியாவில் உள்ள குடும்பங்களை ஆரோக்கியமாக  பராமரிப்பதன் மூலமே,  வளர்ச்சியடைந்த இந்தியா என்ற இலக்கை எட்ட முடியும் என்று  அவர் கூறினார்.

குடும்பக்கட்டுப்பாடு செய்துகொள்வதற்கான தெரிவு பெண்களின் உரிமை என்பதை உறுதி செய்வதற்கும், விருப்பமில்லாத கருவுறுதல் சுமையை உருவாக்காமல் இருப்பதற்கும் மத்திய-மாநில அரசுகள், கூட்டாக பணியாற்ற வேண்டும் என்பதை அமைச்சர் வலியுறுத்தினார். மத்திய அரசின் வெற்றிகரமான திட்டங்களில் ஒன்றான குடும்ப நல இயக்கம் என்பது பற்றி பேசிய திரு நட்டா, இது முதலில் 7 மாநிலங்களின் 146 உயர் முன்னுரிமை மாவட்டங்களில் தொடங்கப்பட்டதாகவும், பின்னர் இந்த மாநிலங்களின் அனைத்து மாவட்டங்களுக்கும், 6 வடகிழக்கு மாநிலங்களுக்கும் விரிவாக்கப்பட்டதாகவும் தெரிவித்தார். குடும்பக் கட்டுப்பாடு குறித்த தகவலை கடைக்கோடி பகுதி வரை பரவலாக்கிய சுகாதார, முன்கள, பல்வேறு துறைகளைச் சேர்ந்த பணியாளர்களின் அர்ப்பணிப்பையும் அயராத உழைப்பையும் டாக்டர் நட்டா பாராட்டினார்.

இந்த நிகழ்வில் பேசிய மத்திய இணையமைச்சர் அனுப்பிரியா பட்டேல், மத்திய அரசின் குடும்ப நலத்திட்டம் ஏற்கனவே இரண்டு நிலைகளில் நடத்தப்பட்டதாகவும், தற்போது தயாரிப்பு கட்டம், சமூகப் பங்கேற்பு, சேவை வழங்குதல் என்ற  3 நிலைகளில் நடத்தப்படுவதாகவும் கூறினார்.

இந்த நிகழ்வின் போது, சுகம் என்ற குடும்பக்கட்டுப்பாடு மாதிரி வடிவம் காட்சிப்படுத்தப்பட்டதோடு, உலக மக்கள் தொகை தினம் 2024-க்கான நடப்பாண்டின் மையப்பொருள் குறித்த சுவரொட்டிகளும் வெளியிடப்பட்டன.

இந்த நிகழ்வில் காணொலிக் காட்சி மூலம் பங்கேற்ற மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின்  சுகாதாரத்துறை, முதன்மை செயலாளர்கள் தங்களின் அனுபவங்களையும், தாங்கள் சந்தித்த சவால்களையும் எடுத்துரைத்தனர்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

தமிழகத்தை மீட்போம் நாட்டை காப் ...

தமிழகத்தை மீட்போம் நாட்டை காப்போம் பாசத்துக்குரிய பாஜக.,வின் என் அருமைத் தாமரை சொந்தங்களே உங்கள் ...

தமிழக மக்களிடம் தொடர்பில் இல்ல ...

தமிழக மக்களிடம் தொடர்பில் இல்லாத முதல்வர் – அண்ணாமலை ''முதல்வர் ஸ்டாலின் தமிழக மக்களிடமிருந்து Out of contactல் ...

ஏப்ரல் 22-ல் சவுதி அரேபியா செல்கி ...

ஏப்ரல் 22-ல் சவுதி அரேபியா செல்கிறார் பிரதமர் மோடி சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானின் ...

துணை ஜனாதிபதியை சந்தித்து கவர் ...

துணை ஜனாதிபதியை சந்தித்து கவர்னர் ரவி ஆலோசனை டில்லி சென்றுள்ள கவர்னர் ரவி, துணை ஜனாதிபதி ஜெகதீஷ் ...

யுனேஸ்கா பதிவேட்டில் பகவத் கீத ...

யுனேஸ்கா பதிவேட்டில் பகவத் கீதை பிரதமர் மோடி பெருமிதம் 'யுனெஸ்கோ' உலக நினைவகப் பதிவேட்டில், ஸ்ரீமத் பகவத் கீதை ...

எலான் மஸ்குடன் பிரதமர் மோடி ஆலோ ...

எலான் மஸ்குடன் பிரதமர் மோடி ஆலோசனை அமெரிக்க தொழிலதிபரும், உலகப் பணக்காரர்களில் ஒருவருமான எலான் மஸ்க் ...

மருத்துவ செய்திகள்

உடற்பயிற்சியின் அவசியம்

கொழுப்புச்சத்தைக் குறைத்து உடலை சிக்கென்று ராணுவ வீரர் போல ஆக்க வேண்டுமா? ஜிம்முக்கு ...

தரைப்பசலையின் மருத்துவக் குணம்

தரைப்பசலைக் கீரையை அரைத்து, கொட்டைப் பாக்களவு எடுத்து, மறுபடி அதே அளவு சீரகத்தையும் ...

அகத்திக் கீரையீன் சிறப்பு

அகத்தை சுத்த படுத்துவதால் அகத்தி என பெயரை வைத்துள்ளனர்..சுமார் 50பது ஆண்டுகளுக்கு முன்பு ...