நிலம் கையகப்படுத்துதல் சட்டம்குறித்து காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் மேற்கொண்டிருக்கும் பொய் பிரசாரத்தை முறியடிக்க பாஜக திட்டமிட்டுள்ளதாக மத்திய வர்த்தகம், தொழில்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
இது குறித்து பெங்களூரில் செய்தியாளர்களிடம் சனிக் கிழமை அவர் கூறியதாவது:
முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் கொண்டுவரப்பட்ட நிலம் கையகப் படுத்துதல் சட்டத்தில் விவசாயிகளின் நலன்கருதி 9 திருத்தங்கள் மேற்கொள்ளப் பட்டுள்ளன. இது குறித்து எதிர்க் கட்சிகளுடன் விவாதிக்க மத்திய அரசு தயாராகவே உள்ளது.
நிலம் கையகப் படுத்துதல் சட்டம்குறித்து காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க் கட்சிகள் மேற்கொண்டிருக்கும் பொய் பிரசாரத்தை முறியடிப்போம். இந்த விவகாரத்தில் அரசின் நிலைப்பாடு குறித்து பிரதமர் நரேந்திரமோடி விளக்கமளித்துள்ளார். இதற்கான மசோதாவை, மாநிலங்களவையில் நிறைவேற்றுவோம் என்ற நம்பிக்கை உள்ளது.
விவசாயிகளின் நலன்காப்பதற்காக நிலம் கையகப்படுத்துதல் சட்டத்தை வலிமையாக்க முயன்றுள்ளோம். இந்த சட்டத்தில் தேவையான மாற்றங்களை செய்துகொள்ள மாநிலங்களுக்கு உரிமையுள்ளது.
இது குறித்து கிராமங்கள் தோறும் சென்று விவசாயிகளிடையே விளக்கமளிக்க பாஜக முடிவுசெய்துள்ளது. வளர்ச்சி திட்டங்களைச் செயல்படுத்துவது விவசாயிகளுக்கு நன்மை விளைவிக்கும். வளர்ச்சி திட்டங்களைச் செயல் படுத்தாமல் விவசாயிகளின் மேம்பாடு சாத்தியமாகாது.
விவசாயிகளின் நலனுக்கு எதிராக எப்போதுமே பாஜக செயல்படாது. சட்ட திருத்தத்தில் தேசியநலன் அடங்கியிருப்பதை மக்களிடம் விளக்குவோம்.
ஆர்எஸ்எஸ். கொள்கைகளை நிறை வேற்றுவோம்: ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் பிரிக்கமுடியாத அங்கம் பாஜக. பாஜக.,வின் கொள்கைகளுக்கு ஆர்.எஸ்.எஸ்.அமைப்பின் கொள்கைகளே அடிப்படை யானதாகும். ஆர்.எஸ்.எஸ்., பாஜக.,வின் பொதுவான கொள்கைகளை நிறைவேற்ற முயற்சி மேற் கொள்வோம். ஆர்எஸ்எஸ். கொள்கைகளை நிறைவேற்றுவதில் பின்வாங்க மாட்டோம் என்றார் நிர்மலா சீதாராமான்.
நீரிழிவுநோய் உடையவர்களுக்கு இந்த அட்டவணையில் சில மாற்றங்களைச் செய்து கொள்ள வேண்டும். அதற்கு ... |
கருஞ்செம்பை இலையை மைபோல அரைத்து கட்டியின் மேல் கனமாகப் பூசி வைத்தால், கட்டி ... |
முருங்கை வேரின் சாருடன் பாலை சேர்த்து அதை கொதிக்க வைத்து அளவாக அருந்தினால் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.