அரசு அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும்

 ஆந்திராவில் அப்பாவி தொழிலாளர்களை சுட்டுக் கொன்ற அரசு அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என தமிழிசை சவுந்தர ராஜன் கேட்டுக்கொண்டுள்ளார்.

தமிழக பா.ஜ.க. தலைமை அலுவலகத்தில், உறுப்பினர்சேர்க்கை மற்றும் 2016 தேர்தல் குறித்து மாநில நிர்வாகிகள் மற்றும் மாவட்டதலைவர்கள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு கட்சியின் தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தர ராஜன் தலைமை தாங்கினார்.

கூட்டத்தின் போது, டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் நிருபர்களிடம் கூறியதாவது:–

ஆந்திர வனப்பகுதியில் சுட்டுக் கொல்லப்பட்ட தமிழக தொழிலாளர்கள் உள்பட 20 பேருக்கும் மிகுந்த மனவருத்தத்துடன் அஞ்சலியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்தசம்பவம் வன்மையாக கண்டிக்கத் தக்கது.

மரம் கடத்தலுக்கு பின்னால் இருப்பவர்கள் தப்பிக்கும் வகையில், திசை திருப்புவதற்காகவே இது போன்ற சம்பவம் நடத்தப்பட்டுள்ளது. இந்தசம்பவத்தில் ஈடுபட்ட அரசு அதிகாரிகள் மீது, ஆந்திர அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும்.

தமிழக அரசு எச்சரிக்கையாக இருந்து, தொழிலாளர்கள் எல்லை தாண்டு வதை கண்காணித்திருக்க வேண்டும். இந்த செயல் பாடுகளை பார்க்கும்போது, தமிழக அரசு கண்காணிக்க தவறிவிட்டது என்று தோன்றுகிறது.

என்ன காரணத்துக்காக சுட்டு கொல்லப்பட்டார்கள் என்பது தெரியவில்லை என்றாலும், யாரும் சட்டம் ஒழுங்கை கையில் எடுத்திருக்க கூடாது. காட்டுக்குள் குருவிகளை சுட்டுக் கொல்வது போன்று தொழிலாளர்களை சுட்டுக்கொன்றவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். சுட்டுக் கொல்லப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ. 15 லட்சம் நிதி உதவி வழங்கவேண்டும்.

உண்மையில் நடந்தது என்ன என்பதை அரசியல் தலையீடு இன்றி, இருமாநிலங்களின் நட்புறவில் பாதிப்பு ஏற்படாத வண்ணம் இரு முதல்–அமைச்சர்களும் ஆலோசித்து நடவடிக்கை எடுக்கவேண்டும்.

தமிழக மீனவர் பிரச்சினை குறித்து பாஜக.வின் தேசிய ஆலோசனை கூட்டத்தில் பிரச்சினையை நிரந்தரமாக தீர்க்கும்வகையில், ஆழ்கடல் மீன்பிடி திட்டம் குறித்து வருகிற 28–ந்தேதி டெல்லியில் சிறப்பு கூட்டம் நடைபெற உள்ளது.

கூட்டம் முடிந்த பின் 29–ந் தேதி முழுமையான தகவல் அறிக்கை சுஷ்மா சுவராஜியிடம் தெரிவிக்கப்படும். தூக்குகயிற்றின் அருகில் சென்றவர்களை காப்பாற்றி கொண்டு வந்தது, மோடியின் அரசு. எனவே தமிழக மீனவர்கள் எங்கள் மீது நம்பிக்கை வைக்க வேண்டும்.

தமிழகம் முழுவதும் உறுப்பினர்கள் சேர்க்கை குறித்து மாநிலநிர்வாகிகள் மற்றும் மாவட்ட தலைவர்கள் கூட்டம் இன்று(நேற்று) நடைபெற்றது. தமிழகம் முழுவதும் ஒருமாத காலம் சுற்றப்பயணம் மேற்கொள்ள உள்ளேன். பொதுக் கூட்டங்கள், பிரசார இயக்கங்கள் நடத்தப்பட உள்ளன.

எந்தெந்த தொகுதிகளில் உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது என்பதை கண்டறிந்து, அதற்கு தகுந்தார்போல், பிரசார உத்திகளை மேற்கொள்வது மற்றும் 2016 தேர்தலில் போட்டியிடுவது குறித்து முடிவு செய்யப்படும்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

நாட்டில் ஊழலை முற்றிலும் ஒழிக் ...

நாட்டில் ஊழலை முற்றிலும் ஒழிக்க பாஜக உறுதிபூண்டுள்ளது மக்களிடம் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட பணத்தை திரும்பக் கொண்டு வருவதற்காக ...

ஆளுநராக இருந்த நான், உங்கள் அக் ...

ஆளுநராக இருந்த நான், உங்கள் அக்காவாக வந்திருக்கின்றேன் நாடாளுமன்ற தேர்தலில் பாஜக சார்பில் தென்சென்னை தொகுதியில் தமிழிசை ...

டீ குடிப்பது என்றாலும் சொந்தக் ...

டீ குடிப்பது என்றாலும் சொந்தக்காசில் குடிப்போம் 2019 தேர்தலில் அளித்த 295 வாக்குறு திகளையும் பாஜக ...

கன்னியாகுமரி மாவட்டத்தில் 48 ஆய ...

கன்னியாகுமரி மாவட்டத்தில் 48 ஆயிரம் கோடிக்கான திட்டங்களை  கொண்டுவந்துள்ளோம் தமிழகத்தில் அமைந்துள்ள தேசிய ஜனநாயக கூட்டணியின் வெற்றி, தமிழகத்தினுடைய ...

ஒரு லட்சம் பெண்களுக்கு வேளாண் ப ...

ஒரு லட்சம் பெண்களுக்கு வேளாண் பணி சார்ந்த ட்ரோன் மத்திய அரசு சார்பில் கடந்த2022-ம் ஆண்டு ‘நமோ ட்ரோன் ...

மருத்துவ செய்திகள்

தொப்புள் கொடி உயிர் அணு (Stem Cord Cells)

Stem Cord Cells (தொப்புள் கொடி உயிர் அணு) சேமிப்பு பற்றி இப்பொழுது ...

எலுமிச்சையின் மருத்துவக் குணம்

உடல்சூடு தணிக்கவும், பசித்தூண்டியாகவும் செயல்படுகிறது. பழச்சாறு, கரிசலாங்கண்ணிச்சாறு, பால் வகைக்கு அரைலிட்டர் வீதம் எடுத்து ...

நீரிழிவு நோயை கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள:

நீரிழிவுநோயைக் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளவும் அதன்மூலம் பாதிப்புகள் ஏற்படாவண்ணம் பாதுகாத்துக் கொள்ளவும் உதவக்கூடிய ...