3 நாடுகளில் சுற்றுப் பயணம் மேற்கொள்ளும் பிரதமர் மோடி, நேற்று பிரான்ஸ் புறப்பட்டார். இந்த பயணத்தின்போது முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எரிசக்தி, பொருளாதார வளர்ச்சி இரண்டையும் நோக்கமாககொண்டு பிரான்ஸ், ஜெர்மனி, கனடா ஆகிய நாடுகளுக்கு சுற்றுப் பயணம் செல்வதாக பிரதமர் நரேந்திர மோடி அறிவித்திருந்தார்.
இந்தபயணத்தின் முதல் கட்டமாக நேற்று அவர் பிரான்ஸ் நாட்டின் தலை நகரான பாரீசுக்கு தனி விமானத்தில் புறப்பட்டுச் சென்றார். அவருடன் தேசியபாதுகாப்பு ஆலோசகர் அஜித்குமார் தோவல், மூத்த அதிகாரிகள் குழுவினரும் சென்றனர்.
பிரான்ஸ் நாட்டுடன் இந்தியாவுக்கு ராணுவம், அணு சக்தி, விண்வெளி உள்ளிட்ட துறைகளில் நல்லதொரு ஒத்துழைப்பு உள்ள நிலையில், பிரதமர் மோடியின் இந்தப்பயணம் அந்த ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதாக அமையும்.
இந்தப் பயணத்தின் போது, 'இந்தியாவில் தயாரிப்போம்' என்னும் 'மேக் இன் இந்தியா' திட்டத்தின் கீழ் இந்தியாவில் முதலீடுசெய்வது தொடர்பாக பிரான்ஸ் நிறுவனங்களுடன் ஒப்பந்தங்கள் செய்யப்படும்.
பாரீசில் அதிபர் மாளிகையில் இன்று (வெள்ளிக்கிழமை) பிரதமர் மோடிக்கு சம்பிரதாயப்பூர்வ முறையில் வரவேற்பு அளிக்கப்படுகிறது. மாலையில் பிரதமர் மோடி, அதிபர் பிராங்கோயிஸ் ஹாலண்டேயுடன் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்துகிறார். அதன் பின்னர் இரு தலைவர்களும் கூட்டாக நிருபர்களுக்கு பேட்டி அளிக்கின்றனர்.
பிரதமர் மோடியும், அதிபர் ஹாலண்டேயும் அங்குள்ள ஆற்றில் படகு சவாரி சென்று, கலந்துரையாடுகிறார்கள்.
முதல் உலகப்போரின்போது, பிரான்சில் வீரமரணம் அடைந்த 10 ஆயிரம் இந்திய வீரர்களின் நினைவாக லில்லிநகரில் அமைக்கப்பட்டுள்ள நினைவுச்சின்னத்தையும் பிரதமர் மோடி, பார்வையிடுகிறார்.
பாரீசில் அமைந்துள்ள யுனெஸ்கோ அமைப்பின் தலைமையகம், டூலூஸ் நகரில் அமைந்துள்ள ஏர்பஸ்விமான நிறுவனம், பிரெஞ்சு விண்வெளி நிறுவனம் ஆகியவற்றுக்கும் பிரதமர் மோடி செல்கிறார்.
பிரான்ஸ் பயணத்தை முடித்துக் கொண்டு, பிரதமர் மோடி 12–ந்தேதி ஜெர்மனி நாட்டில் உள்ள ஹனோவர் நகருக்கு செல்கிறார். மத்தியதொழில், வர்த்தகத் துறை மந்திரி நிர்மலா சீத்தாராமன் உள்ளிட்ட 5 மத்திய மந்திரிகள், இந்திய நிறுவனங்களை சேர்ந்த சுமார் 100 தலைமைசெயல் அதிகாரிகளும் பிரதமர் மோடியின் ஜெர்மனி பயணத்தில் இணைந்து கொள்கின்றனர்.
முதலில் பிரதமர் மோடி, அந்த நாட்டின் பிரதமர் ஏஞ்சலா மெர்க்கலுடன் சேர்ந்து, ஹனோவர் வர்த்தக கண் காட்சியை தொடங்கி வைக்கிறார். தொடர்ந்து முன்னணி ஜெர்மனி நிறுவனங்களின் தலைமைசெயல் அதிகாரிகளுடன் கலந்துரையாடுகிறார். அங்கு அவர் தேசப்பிதா காந்திசிலையை திறந்து வைக்கிறார்.
13–ந்தேதி 7 ஆயிரம் சதுரமீட்டர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள இந்திய பெவிலியனை திறந்துவைக்கிறார். அத்துடன் இந்திய ஜெர்மனி தொழில் அதிபர்கள் சந்திப்பில் பங்கேற்றுபேசுகிறார்.
14–ந்தேதி பெர்லினுக்கு செல்கிறார். அங்கு பிரதமர் மோடியும், ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலாமெர்க்கலும் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்துகிறார்கள். இந்தியாவில் வளர்ச்சித் திட்டங்களில் ஜெர்மனியின் பங்களிப்பு குறித்து அப்போது விரிவாக விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ரெயில்வேயை நவீன மயமாக்க வேண்டும் என்ற திட்டத்தை வைத்துள்ள பிரதமர் மோடி, பெர்லின் நகர் ரெயில் நிலையத்தை பார்வையிட திட்ட மிட்டுள்ளார்.
இதேபோன்று சீமென்ஸ் தொழில்நுட்ப கல்வி நிறுவனத்துக்கும் அவர் செல்ல உள்ளார. பயணத்தின் இறுதிக்கட்டமாக அவர் கனடா செல்கிறார். 42 ஆண்டுகளில் கனடா செல்லும் முதல் பிரதமர் என்ற பெயரை மோடி தட்டிச்செல்கிறார்.
14–ந்தேதி மாலை, பிரதமர் மோடி ஒட்டவா நகருக்கு சென்றடைகிறார். தொடர்ந்து டொராண்டோ, வான்கூவர் நகர்களுக்கும் அவர் செல்கிறார்.
கனடா பிரதமர் ஸ்டீபன் ஹார்பருடன் அணுசக்தி, வர்த்தகம், முதலீடு உள்ளிட்ட பல்வேறு துறைகள் தொடர்பாக அவர் விரிவான பேச்சுவார்த்தை நடத்துகிறார்.
அமெரிக்காவில் மேடிசன் நகரில் இந்தியர்கள் வரவேற்பு அளித்தது போன்று, கனடாவிலும் கனடாவாழ் இந்தியர்கள் பிரதமர் மோடிக்கு வரவேற்பு அளிக்கிறார்கள். அதில் அவர் கலந்து கொண்டு பேசுவதுடன், வான்கூவரில் உள்ள லட்சுமி நாராயண் கோவிலுக்கும் சென்று வழிபடுகிறார்.
16–ந்தேதி 3 நாடுகள் பயணத்தை முடித்துக்கொண்டு, பிரதமர் மோடி டெல்லிக்கு புறப்படுகிறார்.
Rh சோதனை செய்வது நல்லது. Rh ல் இருவகை உள்ளது. ஒன்று +ve (positive) ... |
தேன் மிகசிறந்த உணவு பொருளாகும். தேன் மூலம் எல்லா நோய்களையும் குணப்படுத்த முடியும். ... |
பழங்களில் உள்ள சர்க்கரைச்சத்து நம் உடலில் உள்ள தசைநார்களை உறுதிப்படுத்துகின்றன. ஆரஞ்சு, சாத்துக்குடி, ... |
Leave a Reply
You must be logged in to post a comment.