புள்ளி விவரங்களை கொண்டு இந்தியாவை தீர்மானிக் காதீர்

 இதற்கு முன் இருந்து புள்ளி விவரங்களை கொண்டு இந்தியாவை தீர்மானிக் காதீர்கள். தற்போதைய அரசின் செயல் பாடுகள் இந்தியாவை உலகரங்கில் முன்னிலைப் படுத்துவதாக அமைந்துள்ளது என்று பிரதமர் மோடி குறிப்பிட்டார்.

பாரிஸில் உள்ள யுனெஸ்கோ மையத்தில் வெளி நாடுவாழ் இந்தியர்களுக்கு மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி ஆற்றிய உரை: பருவநிலை மாற்றம் என்பது சர்வதேச நாடுகளுக்கு எழுந்திருக்கும் மிகமுக்கியமான சவால். அடுத்த 7 ஆண்டுக்குள் 1,75,000 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்திசெய்வதே எனது அரசின் இலக்கு. எங்களது வளர்ச்சியை, வெறும் புள்ளிவிவரங்களை கொண்டு அல்லாமல், மக்களிடம் நம்பிக்கையை ஏற்படுத்தி நாங்களே தீர்மானிப்போம்.

அனைவருக்கும் வீடு, ஒவ்வொரு வீட்டிலும் மின்சாரவசதி, அனைவருக்கும் சுகாதாரமான குடிநீர் வசதி, வாழும் நம்பிக்கையை அனைத்து குழந்தைகளிடத்திலும் ஏற்படுத்துதல், சுத்தமான ஆறு, சுவாசிப் பதற்கு தூய்மையான காற்று, பறவைகள் நிறைந்தகாடுகளை உறுதிசெய்தல் ஆகிய இந்த திட்டங்களுக்கு எனது அரசு முக்கியத்துவம் தந்து வருகிறது. இந்த இலக்கை அடையவேண்டும் என்றால், சரியான கொள்கைகள், வளங்கள் மட்டும் இருந்தால் போதாது. அதற்கும் மேலாக அறிவியலின் சக்தி நம்மிடம் இருப்பது அவசியம். இதற்கு முன்பு இருந்த புள்ளி விவரங்களை கொண்டு இந்தியாவை தீர்மானிக்காதீர். தற்போதைய அரசின் செயல்பாடுகள், உலகரங்கில் இந்தியாவை முன்னிலைப் படுத்துவதாக உள்ளது. இதற்கு நாட்டுமக்களின் பங்களிப்பும் பெரியளவில் உள்ளது. வெளிநாட்டு வாழ் இந்தியர்களும், அரசின் முயற்சிகளுக்கு துணை நிற்கவேண்டும். இவ்வாறு மோடி பேசினார்.

பிரான்சில் 4 நாட்கள் பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் நரேந்திரமோடி, நேற்று அந்நாட்டு தொழிலதிபர்களை சந்தித்துபேசினார். அப்போது, மேக் இன் இந்தியா திட்டத்தை பற்றியும், இந்தியாவில் முதலீடுசெய்வதால் ஏற்படும் லாபங்கள் குறித்தும் அவர் விளக்கினார். குறிப்பாக, நாட்டின் உள் கட்டமைப்புபணிகள், பாதுகாப்புத் துறை ஆகியவற்றில், பிரான்ஸ் முதலீடுசெய்ய வேண்டும் என்று, தொழில்நுட்ப உதவிகளை வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார். இந்த சந்திப்பின் போது, மகாராஷ்டிர மாநிலம் ஜெய்தாப்பூரில், பிரான்ஸ் அணு உலை அமைப்பது, நீண்ட காலமாக பேசப்பட்டு வரும் ரபேல் போர்விமான விவகாரத்தில் முடிவை எட்டுவது உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட்டது.

பிரான்ஸ் நாட்டைசேர்ந்த அரேவா என்ற நிறுவனம், மகாராஷ்டிர மாநிலம் ஜெய்தாப்பூரில் 6 அணு உலைகளை அமைக்க உள்ளது. இதன்மூலம் 10 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படக் கூடும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

சந்தனத்தின் மருத்துவக் குணம்

சிறுநீர் பெருக்கியாகவும், உடல் பலம் பெருக்கியாகவும் செயல்படுகிறது.

சித்த மருத்துவம்

சித்தர்களுக்கு சாதி, மதம், இனம், மொழி, தேசம் என்ற பாகுபாடு இல்லை. அகத்தியர், ...

முடி உதிர்தல் குறைய

வேப்பிலை கிருமிநாசினி . இது சிரிது எடுத்து நீரில் வேகவைத்து . வேகவைத்த ...