திரிகோணமலை எண்ணெய் டாங்குகளை வசப்படுத்திய மோடி

 இந்தியாவுக்கு நெருக்கடிதந்த, திரிகோணமலை எண்ணெய் டாங்குகள் விவகாரத்துக்கு, முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. கடந்த மாதம், இந்திய பிரதமர், நரேந்திர மோடி இலங்கை சென்றிருந்த போது, திரிகோணமலையில் உள்ள எண்ணெய் டாங்குகளை, இந்தியாவின் ஐஓசி., நிறுவனம் மூலமாக புனரமைப்பதற்கு, இந்தியாவும், இலங்கையும் ஒப்பந்தத்தில் கையெழுத் திட்டுள்ளன. இதனால், திரிகோணமலை அன்னிய நாடுகளின் கைகளுக்குமாறுவது, அடியோடு தடுக்கப்பட்டுள்ளது.

ரணில் விக்கிரமசிங்கே, 13 ஆண்டுகளுக்கு முன், இலங்கை பிரதமராக ஆட்சியிலிருந்த போது, இலங்கை அரசுடன், இந்தியா செய்திருந்த ஒப்பந்தப்படி, அந்நாட்டின் வட கிழக்கே அமைந்துள்ள, திரிகோணமலை எண்ணெய் டாங்குகளின் மீதான கட்டுப்பாட்டை, இந்தியா இப்போது, தன்வசம் எடுத்துக்கொண்டுள்ளது. அப்போது, திருகோண மலை எண்ணெய் டாங்குகளை புனரமைத்துப் பயன்படுத்துவதற்கு, 35 ஆண்டுகால குத்தகை உடன்பாட்டில், ஐஓசி., நிறுவனத்துடன் இலங்கை அரசு கையெழுத்திட்டிருந்தது. இதையடுத்தே, ஐ.ஓ.சி., நிறுவனம், இலங்கையில் தன் செயல் பாடுகளுக்காக, 'லங்கா ஐ.ஓ.சி.,' என்ற, துணை நிறுவனத்தை உருவாக்கி, அங்கு எரிபொருள் மொத்தவிற்பனை மற்றும் வினி யோகத்தில் இறங்கியது. இதற்காக, திரிகோணமலையில் உள்ள, 99 எண்ணெய் டாங்குகளில், 15 எண்ணெய் டாங்குகளை மட்டும், சீரமைத்து பயன் படுத்தி வந்தது. இவை கீழ் நிலை எண்ணெய் டாங்குகளாகும். ஆனால், தற்போது செய்துகொண்டுள்ள ஒப்பந்தத்தின்படி, ஐ.ஓ.சி., நிறுவனம், மேல்நிலை எண்ணெய் டாங்குகளையும் புனரமைக்கும். இதன் மூலமாக, இலங்கையில், இந்தியாவின் ஐ.ஓ.சி., நிறுவனம், அழுத்தமாக காலூன்றிஉள்ளது.

கடந்த, 1930களில், பிரிட்டிஷ் அரசால் அமைக்கப்பட்ட, இந்த பிரமாண்ட எண்ணெய் சேமிப்புதொகுதி, பாதுகாப்பு ரீதியாக, தெற்காசியப் பிராந்தியத்தில் மிகமுக்கியத்துவம் வாய்ந்தது. இரண்டாம் உலகப் போருக்கு முன்னதாக அமைக்கப்பட்ட, 101 எண்ணெய் டாங்குகளில், தற்போதும், 99 டாங்குகள், பயன்படுத்தக் கூடிய நிலையில் உள்ளன. தலா, 12,100 மெட்ரிக் டன் எரிபொருளை, இந்த எண்ணெய் டாங்குகள் ஒவ்வொன்றிலும் சேமிக்கலாம். இவற்றை, தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வருவதற்கு, அமெரிக்கா, சீனா, பாகிஸ்தான் உள்ளிட்ட பலநாடுகள் போட்டியிட்டு வந்தன.இதனால் தான், இந்தியா எப்போதுமே, திரிகோண மலையின் மீது ஒரு கண் வைத்திருந்தது. 2002ம் ஆண்டு ஒப்பந்தத்தையடுத்து, ஐ.ஓ.சி., நிறுவனம், 15 மில்லியன் டாலரை செலவிட்டு, 15 கீழ்நிலை எண்ணெய் டாங்குகளை மட்டும் புனரமைத்திருந்தது. எஞ்சிய எண்ணெய் டாங்குகளையும் புனரமைத்துப் பயன்படுத்தும் திட்டத்தை, இந்தியா, 2013ம் ஆண்டு முன்வைத்த போது, மஹிந்த ராஜபக் ஷே அரசு அதை நிராகரித்திருந்தது.

விடுதலைப் புலிகளுக்கு எதிரானபோர் முடிவுக்கு வந்த பின்னர், சீனாவுடன் நெருக்கமான மஹிந்த ராஜபக் ஷே அரசு, இந்தி யாவிடம் இருந்து, கொஞ்சம் கொஞ்சமாக விலக ஆரம்பித்தது. திருகோண மலை எண்ணெய் டாங்குகள் தொடர்பான ஒப்பந்தத்தை விரிவாக்க மறுத்ததுடன், ஏற்கனவே செய்து கொள்ளப்பட்ட, 35 ஆண்டு குத்தகை ஒப்பந்தத்தை ரத்துச்செய்யப் போவதாகவும் மிரட்டியது. 'ரணில் விக்ரமசிங்கேவின் அரசு முறையற்ற வகையில், எண்ணெய் டாங்குகள் அமைந்துள்ள நிலத்தை, இந்தியாவுக்கு குத்தகைக்கு கொடுத்துள்ளது. அவற்றைக் குத்தகைக்கு கொடுக்க அதிகாரமில்லை' என, மஹிந்த ராஜபக் ஷே அரசு கூறியது.

இப்போது, இலங்கையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளதால், திருகோண மலை எண்ணெய் டாங்குகளை புனரமைக்கும் ஒப்பந்தத்தில், இந்தியா கையெழுத்திட்டுள்ளது. இந்தியாவைப் பொறுத்த வரையில், திருகோணமலையில் உள்ள, 99 எண்ணெய் டாங்குகளையும் பயன் படுத்தும் அளவுக்கு, இலங்கையில் அதற்கு வர்த்தக சந்தை வாய்ப்பில்லை. இருந்தும், இந்தியா இந்த எண்ணெய் டாங்குகளின் கட்டுப்பாட்டை தன்வசம் எடுத்துக் கொள்வதற்குக் காரணம், சீனா உள்ளிட்ட அயல் நாடுகளின் கைகளுக்கு அவை சென்று விடக் கூடாது என்பதற்காகத்தான்.

மோடி, தன் இலங்கைப் பயணத்தின்போது, தெற்காசியப் பிராந்தியத்தின் எண்ணெய் மையமாக திருகோணமலையை மாற்ற விரும்புவதாக குறிப்பிட்டார். இந்தியாவை பொறுத்தவரை, திருகோணமலை மீதான கட்டுப்பாட்டை உறுதிப்படுத்தியிருப்பது, சீனாவுக்கு எதிரான அதன் நடவடிக்கைகளில் ஒருமுக்கியமான கட்டம். ஏனென்றால், பாதுகாப்பு ரீதியாக, திருகோணமலையின் இடஅமைவு, மிக முக்கியத்துவம் வாய்ந்தது. இந்தியகடற்படை செயல்பாடுகளை கண்காணிக்கவும், இந்திய கடல் வணிகத்தை சிதைக்கவும், இந்திய துறை முகங்களின் ஏற்றுமதியை குறைக்கவும், சீனா போட்ட சதித் திட்டங்கள், இப்போது தவிடு பொடியாகி விட்டன. இந்த சதிகளை, இந்திய பிரதமர் நரேந்திர மோடி தன் பயணத்தின் மூலம் முறியடித்து விட்டது பாராட்டத்தக்கது.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

அதிகாரப்பசி கொண்ட கட்சிகளை மக் ...

அதிகாரப்பசி கொண்ட கட்சிகளை மக்கள் நிராகரித்து விட்டனர் –  மோடி  'பார்லியில் மக்களுக்காக என்றுமே காங்., பேசியதில்லை. அதிகாரப் பசி ...

சிட்டுக்குடுவிக்களின் எண்ணிக் ...

சிட்டுக்குடுவிக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது – மோடி “நாட்டில் குறைந்து வரும் சிட்டுக்குருவிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க பல்வேறு ...

தேசிய மாணவர் படையில் இணையுங்கள ...

தேசிய மாணவர் படையில் இணையுங்கள் – பிரதமர் மோடி அழைப்பு  'என்.சி.சி.,யில் அதிகமான இளைஞர்கள் இணைய வேண்டும். வளர்ந்த இந்தியாவை ...

இந்தியாவை அறிந்து கொள்ளுங்கள் ...

இந்தியாவை அறிந்து கொள்ளுங்கள் வினாடி வினாவில் கலந்து கொள்ள மோடி வலியுறுத்தல் இந்தியாவை  அறிந்துகொள்ளுங்கள் வினாடி வினாவில் பங்கேற்குமாறுபுலம்பெயர்ந்த இந்தியர்களையும், மற்ற நாடுகளைச் ...

5-நாள் அரசு முறைப்பயணத்தில் 31 தல ...

5-நாள் அரசு முறைப்பயணத்தில் 31 தலைவர்களை  மோடி சந்தித்தார் பிரதமர் நரேந்திர மோடி, அரசு முறை பயணமாக மூன்று ...

இது மோதலுக்கான நேரமல்ல மோடி கயா ...

இது மோதலுக்கான நேரமல்ல மோடி கயானாவில் பேச்சு கர்பியன் நாடான கயானா சென்றுள்ள பிரதமர் மோடி, நேற்று ...

மருத்துவ செய்திகள்

கூந்தல் பளபளப்பாகவும் மிருதுவாகவும் இருக்க

வாரம் ஒருமுறை மருதாணி இலையை அரைத்து தலையில்தேய்த்து குளித்து வந்தால், கூந்தல் பளபளப்பாகவும், ...

கல்லீரல் நோய்கள் (கல்லீரல் அழற்சி)

பல்வேறு காரணங்களினால் கல்லீரல் பாதிக்கப்பட்டு நோய் ஏற்படும். இவைகளில் முக்கியமானது வைரஸ் கிருமியால் ...

துளசியின் மருத்துவக் குணம்

எந்த வகை விஷத்தையாவது, சாப்பிட்டு விட்டதாகத் தெரிந்தால், துளசி இலையைக் கொண்டு வந்து ...