தமிழ் புத்தாண்டு சித்திரை-1, இத்தரையில் அனைவருக்கும் அனைத்தும் கிடைக்க முத்திரையாய் மத்தியில் மோடி ஆட்சி செய்கிறார்….
நேரடி மானியம் மூலம் அனைவரின் வீட்டிலும் கேஸ் தங்கவும், பால் பொங்கவும், வழி வகுத்திருக்கிறார். விவசாயிகளுக்கு காப்பீடு அளித்து அவர்களை பாதுகாத்திருக்கிறார். செல்வமகள் சேமிப்புத் திட்டம் என பெண் குழந்தைகளைக் கொண்டாடி இருக்கிறார். அதே நல்லாட்சி தமிழகத்திலும் மலர வேண்டும். தமிழ் மக்கள் அனைவரும் நல்லாட்சியின் நன்மைகளை உணர வேண்டும். அதற்கு இப்புத்தாண்டு வழி வகுக்கட்டும்.
தமிழனின் தலை நிமிர்ந்திருக்கவும், யாரையும் சாராத உன்னத வாழ்க்கையை அடைந்திடவும் இப்புத்தாண்டு வழி வகுக்கட்டும்.
வளம் கூட்டும் வாழ்க்கை மலர்ந்து ஒளிகூட்டும் ஒளிமயமான வாழ்க்கையை தமிழருக்கு இப்புத்தாண்டு வழங்கட்டும். இந்திய தமிழர்களுக்கு மட்டுமல்ல இலங்கை தமிழர்களுக்கும் அதிகாரம் கிடைக்கட்டும்.
14.04.2015 அன்று அண்ணல் அம்பேத்கார் அவர்களது 125வது பிறந்த நாளை நாடு முழுவதும் மிகவும் சிறப்பாக கொண்டாடி மகிழ வேண்டும் என்று பாரதப் பிரதமர் திரு. நரேந்திரமோடி அவர்கள் நாட்டு மக்களையும் பா.ஜ.க வினரையும் கேட்டுக் கொண்டுள்ளார்.
சமுதாய ஏற்றத்தாழ்வை முடிவுக்குக் கொண்டுவர சமுதாய விலங்கை உடைத்தெறிய கல்வி கற்பதே ஒரே வழி என்று உணர்ந்து தாமும் கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கியதோடு மற்றவர்களுக்கும் கற்பித்தார்.
இந்திய அரசியல் சட்டத்தை உருவாக்கித் தந்த மாபெரும் வித்தகரான அவரை காங்கிரஸ் கட்சி பலவகையிலும் புறக்கணித்ததோடு, அவமானப்படவும் வைத்தது. காங்கிரஸிலிருந்து விலகினார். காங்கிரஸ் கட்சி; மற்றும் அதன் தலைவர்களின் குறைபாடுகளைத் துணிந்து விமர்சித்தார்.
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் அரசியல் சட்டத்தின் 370வது பிரிவை எதிர்த்தார்.
சமுதாயத்தில் நிலவிய ஏற்றத்தாழ்வுகளைக் கடுமையாகச் சாடிய அண்ணல் அம்பேத்கார், தீண்டாமையை எதிர்த்துப் போராடினார். தாழ்த்தப்பட்ட மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கான முன்னேற்றத்திற்குப் போராடிய அவர், அவர்கள் வேலை வாய்ப்பு, கல்வி போன்றவைகளில் இட ஒதுக்கீடு அவசியம் என்று அனைவரையும் உணர வைத்து தாழ்த்தப்பட்டவர்களின் முன்னேற்றத்திற்கு அடிகோலினார்.
அவரது 125வது பிறந்தநாளை நாடு முழுவதும் கொண்டாடி மகிழ்கின்றனர். அவரது புகழ் ஓங்குக, அவர் காட்டிய வழியில் சமதர்ம சமுதாயத்திற்கு பாடுபடுவோம் என்று அவரது பிறந்த நாளில் சபத மேற்போம்.
இப்படிக்கு
என்றும் மக்கள் பணியில்
(டாக்டர். தமிழிசை சௌந்தரராஜன்)
நான்கு இலைகளையும் ஒரு காலையும் கொண்டு நன்கு நீருள்ள இடங்களில் சிறப்பாக வளர்ந்து ... |
வல்லாரை, அம்மான் பச்சரிசி, ஓரிதழ் தாமரை, குப்பை மேனி, சிறியாநங்கை, வில்வம், துளசி, ... |
ஜீரணமாகாத காரணத்தால் புளிச்ச ஏப்பம், சாப்பிட்ட உணவு மேல் கிளம்பி விடுதல், வாயில் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.