அரசு அதிகாரிகளின் செயல்பாடுகளில், அரசியல் தலையீடு அவசியமே ; குறுக்கீடுகள் தான் கூடாது. ஜனநாயக நடவடிக்கைகளுக்கு, அரசு அதிகாரிகளின் குண நலன்களும், அரசியல் தலையீடும் தடைக்கற்களாக இருப்பதாக பொதுவாக தெரிவிக்கப்பட்டு வருகிறது. ஜனநாயக நாட்டில், அரசு அதிகாரிகளும், அரசியல் தலையீடும் ஒன்றோடு ஒன்று கைகோத்து செல்லக் கூடியவை. இதுதான் ஜன நாயகத்தின் சிறப்பம்சம்.
நமது நாட்டை நாம் தொடர்ந்து நிர்வகிக்க வேண்டும் என்றால், அரசியல் குறுக்கீடு தான் இருக்க கூடாது. ஆனால், அரசியல் தலையீடு அவசியம். அது தவிர்க்க முடியாதது. அரசியல் தலையீடு இல்லையெனில், ஜனநாயகம் செயல்படாது. அரசியல் குறுக்கீட்டுக்கும், தலையீட்டுக்கும் இடையே வித்தியாசம் உள்ளது. முந்தையது, ஜனநாயக அமைப்பையே சீர்குலைத்துவிடும். இரண்டாவது, ஜனநாயக நாட்டுக்கு அத்தியாவசிய மானது, தவிர்க்க முடியாதது.
தடைக்கற்கள் போன்ற வார்த்தைகளையும், அரசு அதிகாரிகள் அமைப்பில் இருக்கும் பிரச்னைகளையும் நீக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. ஒருதுறையில் பணிபுரிந்து கொண்டிருக்கிறபோது, அந்தப் பணியை வேறு எங்கோ இருப்பவர் தடுத்து நிறுத்துவார். என்ன நடந்தது என நீங்கள் கேள்வி எழுப்புவீர்கள். அப்போது, அரசு அதிகாரிகளின் செயல்பாடு எப்போதும் இப்படித்தான் இருக்கும் என தெரிவிக்கப்படும். அதேபோன்றுதான், சில வேலைகள் எங்காவது தடைப்பட்டு கிடந்தால், அதற்கு அரசியல் தலையீடுதான் காரணம் எனத் தெரிவிப்போம்.
அரசு அதிகாரிகள், பொறுப்புணர்வுகளுடனும், நம்பகத்தன்மையுடனும் செயலாற்றவேண்டும். ஒவ்வொரு பிரச்னைக்கும், தீர்வு உண்டு. நம்பகத்தன்மை, பொறுப்புணர்வு, வெளிப்படைத் தன்மை ஆகிய இந்த 3 அம்சங்களும் நல்ல நிர்வாகத்துக்கு அடிப்படையாகும்.
இந்த நேரத்தில், நமது முதல் உள்துறை அமைச்சரான சர்தார் வல்லபபாய் படேல், நாட்டுக்கு ஆற்றிய பங்களிப்புகள் நினைவுக்கு வருகிறது. நாட்டின் ஒருங்கிணைப்புக்காக அவர் சேவையாற்றினார். இன்றைய தினத்தில், சமூக பொருளாதார ஒருங்கிணைப்பு நமக்கு அவசியமாகிறது. மக்கள் ஒருவருக்கொருவர் மிகவும் நெருங்கி பணியாற்றுவதற்காக ஒருங்கிணைப்புக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில், ஒரு முன்மாதிரியை ஏற்படுத்துவது குறித்து அரசு ஆலோசித்து வருகிறது.
பணிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் நேரத்தில், தங்களது வாழ்க்கை முறை குறித்து அரசு அதிகாரிகள் சிந்திக்க வேண்டும். இல்லையெனில், அலுவலகத்தில் இருக்கும் கோப்புகளை பார்ப்பது போன்று, வாழ்க்கையும் விருப்பமில்லாததாகத்தான் இருக்கும். வாழ்க்கை முழுவதும் பதற்றமாக இருந்தால், எதையும் உங்களால் சாதிக்க முடியாது.
ஆட்சி நிர்வாகத்தில் நீங்கள் சிறப்பானவராக இருப்பீர்கள். ஆனால், உங்களது குடும்பத்தினருடன் போதிய நேரத்தை செலவீட்டுள்ளீர்களா? இதுகுறித்து சிந்தித்துப் பார்க்கவேண்டும்.
இயந்திரத்தனமான வாழ்க்கையை நீங்கள் வாழக்கூடாது. குடும்பத்தினருடன் குறிப்பிட்ட நேரத்தை நீங்கள் செலவிடவேண்டும். இயந்திரத்தனமான வாழ்க்கையை நீங்கள் வாழ்ந்தால், ஒட்டுமொத்த அரசும், அதன் அமைப்பும்தான் பாதிக்கப்படும். துடிப்பு மிக்க அதிகாரிகள்தான் எனக்குத் தேவைப்படுகிறார்கள். துறைகளை நிர்வகிப்பதுமட்டும், அரசின் பணியல்ல . நமது துறைகளில் புதியனவற்றை கண்டுபிடிப்பவராகவும், நவீனத்துவத்தை புகுத்துவராகவும் நாம் இருத்தல்வேண்டும் என்றார் பிரதமர் மோடி.
தில்லி விஞ்ஞான் பவனில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற இந்திய குடிமைப் பணி அதிகாரிகள் தின நிகழ்ச்சியில் பேசியது:
அதிகமாக உணவை உண்ணுதல், காலம்தவறி உண்ணுதல் ஆகியவற்றை தவிர்க்கவேண்டும் சரியான விருந்தை சாப்பிட்டால், குளிர்ந்த ... |
கரிசலாங்கண்ணியானது பித்தநீர்ப் பெருக்கியாகவும் மலமகற்றியாகவும் செயல்படுகிறது. |
Leave a Reply
You must be logged in to post a comment.