தமிழக அரசு இன்றைக்கு நொடிந்துபோய் உள்ளதாக தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் பத்திரிக்கை அவர் அளித்த பேட்டியில்,
தமிழகம் ஆக்கப் பூர்வமான அரசியலுக்கு முன்னேறவேண்டும். உணர்ச்சி அரசியலில் இருந்து வெளியேற வேண்டும். தமிழ் உணர்வு, மொழிபற்றில் நாங்கள் சளைத்தவர்கள் அல்ல. வளர்ச்சி பாதைதான் நமக்கு முக்கியம். தேசியகட்சிக்கு, மாநிலத்தின் மீது அக்கறை இருக்காது என்று சொல்கிறார்கள். எங்களுக்கு மாநிலத்தின் மீது அக்கறை உள்ளது . அந்தவகையில் மத்திய அரசு சார்ந்த மாநிலத்திற்கான திட்டங்களை கொண்டுவர வேண்டும் என்று விரும்புகிறோம்.
செல்வ மகள் சிறு சேமிப்பு திட்டம் மக்களிடத்தில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இது மட்டுமல்லாமல் பல்வேறு திட்டங்கள் மக்களிடத்தில் வரவேற்புபெற்று இருக்கிறது. மக்களுக்கான மத்திய அரசு என்ற திட்டத்தின் மூலம் மக்களைதேடி அவர்களின் பிரச்சனைகளை தீர்ப்பதற்காக குழுசெல்கிறது. இது 42 மாவட்டங்களில் மே 1-ந் தேதி முதல் ஒவ்வொரு சனிக் கிழமையும் செயல்படுத்தப்பட உள்ளது.
கூட்டணி முடிவு என்பது தனி நபர் நிர்ணயிப்பது அல்ல. கட்சியின் உயர்மட்ட குழு முடிவுசெய்யும். அதற்கான நேரத்தில் எங்கள் கருத்தை நாங்கள் தெரிவிப்போம். தமிழகத்தில் அ.தி.மு.க., தி.மு.க.வுக்கு மாற்று சக்தியாக வரவேண்டும் என்பதே எங்கள் லட்சியம். அந்த வகையில் பாரதீய ஜனதா பலம்வாய்ந்த கட்சியாக மாறி வருகிறது.
ஊழலற்ற நிர்வாகத்தை மக்களுக்கு கொடுக்கவேண்டும் என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். மக்களுக்கான அரசு நடக்கவேண்டும். தமிழகத்தில் பலதிட்டங்கள் கிடப்பில் போடப்பட்டுள்ளது. மெட்ரோ ரெயில் திட்டப் பணிகள் பாதியில் நிற்கிறது. நேர்மையான அதிகாரிகள் தமிழகத்தில் வேலைபார்க்க முடியாதோ? என்ற சந்தேகம் ஏற்பட்டு வருகிறது.
நொடிக்குநொடி மக்களுக்காக, மக்கள் நல பணிகளுக்காக செயல்படவேண்டிய தமிழக அரசு இன்றைக்கு நொடிந்துபோய் உள்ளது. வழக்கமாக நடக்க வேண்டிய மக்கள்பணி கூட, ஏதோ வழக்கை எதிர் நோக்கி தேங்கிநிற்கிறது. இது மாறவேண்டும என்றார்.
Stem Cord Cells (தொப்புள் கொடி உயிர் அணு) சேமிப்பு பற்றி இப்பொழுது ... |
கோழிமுட்டை தாது அதிகப்படும். தேகம் தலைக்கும். இரத்தம் உண்டாகும். இதை அதிகநேரம் வேகவைத்தால் கெட்டியாய்விடும்; ... |
பள்ளிக்குச் செல்லுகின்ற குழந்தைகளுக்கு நல்ல சத்தான ஆரோக்கியமான உணவு கிடைத்தால்தான் அந்தக் குழந்தைகள் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.