அதிமுக-பாஜக இடையே நட்பு எதுவும் இல்லை

 அதிமுக-பாஜக இடையே நட்பு எதுவும் இல்லை என்று பாஜக தேசிய பொதுசெயலாளர் முரளிதர் ராவ் கூறியுள்ளார்.

பாஜக தேசிய பொதுசெயலாளர் முரளிதர் ராவ், சென்னை தியாகராய நகரில் உள்ள பாஜக மாநில தலைமையகமான கமலாலயத்தில் நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

அப்போது முரளிதர்ராவ் கூறியதாவது:-

தமிழக மீனவர்கள் பிரச்சினையை பாஜக உன்னிப்பாக கவனித்துவருகிறது. மீனவர்கள் கொல்லப் படுவதை தடுக்கவும், கைது செய்யப்பட்ட மீனவர்களையும், கைப்பற்றப் பட்ட படகுகளையும் விடுவிக்கவும் தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது.

விரைவில், தமிழக மீனவர் பிரச்சினைக்கு தீர்வுகாணப்படும். தமிழக மீனவர் பிரச்சினை தொடர்பாக, தமிழக பாஜக சார்பில் டெல்லியில் 27ம் தேதி கருத்தரங்கம் நடைபெறுகிறது. இதில், தமிழக மீனவ பிரதிநிதிகள் பங்கேற்று தங்களது கருத்துக்களை தெரிவிக்க உள்ளனர்.

இறுதியில் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகுறித்து, 29ம் தேதி மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜை மீனவபிரதிநிதிகள் சந்தித்து தெரிவிப்பார்கள். இவ்வாறு முரளிதர் ராவ் கூறினார். பின்னர் செய்தியாளர்கள் கேட்டகேள்விகளும், அதற்கு முரளிதர் ராவ் பதிலளித்தார்.

கேள்வி:- ஆந்திராவில் 20 தமிழக தொழிலாளர்கள் சுட்டுக் கொல்லப்பட்டது குறித்து?

பதில்:- அந்த சம்பவத்திற்கு பாஜக கடும்கண்டனம் தெரிவித்துள்ளது. ஆந்திர காவல் துறையினர் தற்காப்புக்காக கொலை செய்ததாக கூறுவது நம்பும் படியாக இல்லை. உண்மையான குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டதாக நாங்கள் நினைக்க வில்லை. இந்த விஷயத்தில் ஆந்திர அரசு தெளிவான நிலைப் பாட்டை எடுக்க வேண்டும்.

கேள்வி:- மேகதாது குறுக்கே அணை கட்ட கர்நாடக அரசு முயன்று வருகிறதே?

பதில்:- மேகதாதுவில் அணைகட்ட கர்நாடக அரசு மத்திய சுற்றுச் சூழல் அமைச்சகத்திடம் எந்த அனுமதியும் பெறவில்லை. இதுதொடர்பாக, தமிழக விவசாயிகள் கொண்டுள்ள கவலையில் நியாயம் உள்ளது. பாஜக சரியான நிலைப் பாட்டை எடுக்கும்.

கேள்வி:- நிலம் கையகப்படுத்தும் மசோதாவை பாஜக வில் உள்ள கூட்டணி கட்சிகளே எதிர்த்த நிலையில் அதிமுக ஆதரித்துள்ளதே?

பதில்:- அதில் உள்ள நன்மைகருதி அதிமுக ஆதரித்தது. பாஜக கூட்டணியில் உள்ள சிவசேனா உள்ளிட்ட கட்சிகளே எதிர்ப்புதெரிவித்த நிலையில், அதிமுக ஆதரித்தது. இருந்தாலும், அதிமுக – பாஜக இடையே நட்பு எதுவும்கிடையாது. எங்கள் கூட்டணியிலும் அவர்கள் இல்லை. இவ்வாறு முரளிதர் ராவ் கூறினார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

கோழிக்கறியின் மருத்துவக் குணம்

சேவல் இறைச்சி அதிக சூடு உண்டாக்கும். அன்றியும் தாது நஷ்டம் உண்டாகும். ஆகையால் ...

உயர் இரத்த அழுத்தம் உருவாக காரணம்

உயர் மன அழுத்தம் நாம் தினமும் சாப்பிடும் உணவின் தன்மை . எளிதில் உணர்ச்சி வசப்படுதல். மது ...

அமுக்கிரா கிழங்கு

இதன் இலையை உண்டால், உடல் வெப்பம் நீங்கும், காய் உண்டால் சிறு நீர் ...