நேபாளத்தில் இன்று ஏற்பட்ட கடும் நில நடுக்கத்தால் ஏராளமான கட்டடங்கள் இடிந்துவிழுந்து மிகப்பெரிய அளவில் பொருள்சேதம் ஏற்பட்டுள்ளது. ஏராளமானோர் இடிபாடுகளில் சிக்கி படுகாயம் அடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், சுமார் 500பேர் வரை பலியாகி இருக்கலாம் என ஏஜென்சிசெய்திகள் தெரிவிக்கின்றன.
முதலில் இந்த நில நடுக்கம் ரிக்டர் அளவு கோலில் 7.4 என்ற அளவில் பதிவானதாக தகவல் வெளியானது. அதன் பின்னர், மக்கள்தொகை அதிகம் உள்ள தலை நகர் காட்மாண்டுவை உலுக்கிய நில நடுக்கம், ரிக்டர் அளவு கோலில் 7.9 ஆக பதிவாகியிருந்தது தெரியவந்தது. குடியிருப்புகள் மற்றும் கட்டடங்கள் குலுங்கியதால் பொது மக்கள் அலறியபடி வெளியேறி சாலைகளில் குழுமினர்.
எங்கு திரும்பினாலும் ஆம்புலன்ஸ் வாகனங்கள் சைரன் ஒலி எழுப்பிய படி சென்றன. அரசு ஹெலி காப்டர்கள் வானில் வட்டமடித்தபடி மீட்புபணிகளில் ஈடுபட்டுள்ளன.
காட்மாண்டுவில் இருந்த 19ம் நூற்றாண்டு பழமையான 9 மாடிக் கட்டடமான "தரகரா" டவர் முழுமையாக இடிந்துவிழுந்தது. அக்கட்டடத்தில் இருந்த 400 பேர் மண்ணோடு மண்ணாக புதையுண்டிருக்கலாம் என்று அஞ்சப்படுகின்றது. ஒருவரின் உடல் மட்டும் கிடைத்துள்ளது.
பீஸ்மன் டவர் என்றும் அழைக்கப்படும் இக்கட்டடம் 61.88 மீட்டர் உயரமானது. காட்மாண்டுவின் சுந்தரா என்னும் மையப் பகுதியில் 1832ம் ஆண்டில் கட்டப்பட்ட இக்கட்டடம் அதன் கட்டடக்கலைக்காக யுனோஸ்கோவால் அங்கீகரிக்கப்பட்டதாகும்.
இதனிடையே மீண்டும் நிலநடுக்கம் ஏற்படலாம் என்ற எச்சரிக்கை விடுக்கப் பட்டிருப்பதால், காட்மாண்டுவில் உள்ள விமானநிலையம் மூடப்பட்டுள்ளது.
பழைய காட்மாண்டு நகரில் உள்ள ஒருபகுதியில் குறுகிய சந்தில் உள்ள வீடுகள் ஒன்றின் மேல் ஒன்று விழுந்து நொறுங்கின. உயிரிழப்பு தொடர்பான தகவல் வெளியாக வில்லை. மேலும் பல நில அதிர்வுகள் ஏற்படவாய்ப்பு உள்ளதால் பொதுமக்கள் வீடுகளுக்கு செல்லாமல் வெளியில் இருக்கும்படி நேபாளத்தின் தேசிய வானொலி எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஒழுங்கான உடற்பயிற்சியாலும் ஆரோக்கியமான உணவு முறையாலும் கிடைக்கும் நன்மைகள் • சிறந்த ஆரோக்கியம் • பார்ப்பதற்கும், உணர்வதற்கும் |
இரத்த அழுத்தம் அதிகமுள்ளவர்கள் கீழ்காணும் உணவுகளைக் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும். |
உங்கள் கன்னம் அழகாக இருக்க வேண்டுமா? உங்களது முகம் மற்றவர்களை-வசீகரிக்க வேண்டுமா? கவலை ... |
Leave a Reply
You must be logged in to post a comment.