இந்திய பிரதமர் நரேந்திர மோடி மீது தாக்குதல் நடத்த அல்கொய்தா தீவிரவாதிகள் குறி வைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்து அதன் தலைவன் உமர் பேசிய வீடியோ காட்சிகள் கசிந்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சிரியா, ஈராக், உள்ளிட்ட பகுதிகளில் அல்கொய்தாவின் உதவியுடன் ஐஎஸ் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதைத் தொடர்ந்து மேலும் உலகின்
பல்வேறு இடங்களிலும் ஐஎஸ் தீவிரவாதிகள் அந்தந்த நாடுகளில் உள்ள இளைஞர்களை மூளை சலவை செய்து தங்களது தாக்குதல்களுக்கு பயன்படுத்தி வருகின்றனர்.
இவ்வாறு பயிற்சி பெற்ற இளைஞ்ர்கள் கடந்த ஆண்டு பிரான்சின் உள்ள சார்லி ஹெப்டோ பத்திரிக்கை மீது நடத்திய கொலை வெறி தாக்குதலில் ஆசிரியர் உள்பட 12 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் உலகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதைத் தொடர்ந்து உலகம் முழுவதும் பரவலாக உள்ள அல் கொய்தா, ஐஎஸ் தீவிரவாதிகளை முறியடிக்க சர்வதேச நாடுகள் ஒன்று சேர வேண்டும் என்று பேச்சு வார்த்தை நடத்தப்பட்டது. குறிப்பாக வளர்ந்து வரும் நாடுகளான, அமெரிக்கா, ஜெர்மனி, பிரான்ஸ், ஆஸ்திரேலியா போன்ற நாடுகள் இந்த முறியடித்தலுக்கு ஒத்துழைப்பு அளிக்க முன்வந்தன. மேலும் பயங்கரவாத தாக்குதலால் அவ்வப்போது பாதிக்கப்படும் இந்தியாவும் இதற்கு துணை நிற்பதாக அறிவித்தது.
இந்த சூழலில் உலக அளவில் பயங்கரவாத அமைப்பாக கருதப்படும் அல் கொய்தா அமைப்பு தொடர்ந்து பல்வேறு நாடுகளிலும் தாக்குதலையும், எச்சரிக்கையையும் விடுத்து வருகிறது. இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு அல்கொய்தா அமைப்பின் தலைவர் ஆசிம் உமர் பேசியதாக வீடியோ காட்சிகள் இணையதளத்தில் கசிந்தன. அந்த வீடியோவில் ஆசிம் உமர் கூறுகையில், உலக வங்கி, பன்னாட்டு நிதியம் ஆகிய வற்றின் கொள்கைகளின் அடிப்படையில் உலகம் முழுவதும் உள்ள முஸ்லிம்களுக்கு எதிராக வளர்ந்த நாடுகள் தங்களது தாக்குதல்களை நடத்தி வருகின்றன.
அதே போல் சார்லி ஹெப்டோ போன்ற ஊடகங்களின் எழுத்துகள், அவிஜித்ராய் போன்றவர்களின் கருத்துகள், இந்திய பிரதமர் மோடியின் பேச்சுகள் போன்றவை முஸ்லிம்களுக்கு எதிராக உள்ளன. ஆள் இல்லா விமான தாக்குதல், மறைமுக போர் உள்ளிட்டவற்றின் மூலம் அந்த நாடுகள் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளுக்கு எதிராக சார்லி ஹெப்டோ தொடங்கி வங்க தேசம் வரையில் பதிலடி கொடுத்து வருகிறோம் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக வங்க தேசத்தில் உள்ள அமெரிக்க வலைத்தள எழுத்தாளரான அவிஜித் ராயை தீர்த்து கட்டினோம் என்றும் அதில் ஆசிம் உமர் தெரிவித்துள்ளான்.
எனவே, இதன் தொடர்ச்சியாக அல் கொய்தா தீவிரவாதிகள் பிரதமர் மோடிக்கு எதிராக சதியில் ஈடுபட்டுள்ளனரா என்று உளவுத்துறையினர் தீவிர பிசாரணையில் இறங்கியுள்ளனர். மேலும் ஆசிம் உமரின் வீடியோ பேச்சுகள் குறித்தும் ரகசிய ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. நாடு முழுவதும் உள்ள உளவுத்துறையினர் வலைத்தளம், தொலை பேசி உள்ளிட்ட பல்வேறு தொலை தொடர்பு ஊடகங்களையும் உன்னிப்பாக கவனித்து வருகின்றனர்.
அல்கொய்தா தீவிரவாத தலைவன் ஆசிம் உமரின் வீடியோவில் பிரதமர் மோடிக்கு எதிரான பேச்சுகள் இடம் பெற்றிருந்த விவகாரம் தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் தீவிரவாதிகள் சதி திட்டம் எதிலும் ஈடுபட வாய்ப்புள்ளதா என்று கோணத்திலும் ரகசிய விசாரணைகளும், கண்காணிப்புகளும் நாடு முழுவதும் தீவிரமாக முடுக்கி விடப்பட்டுள்ளன.
பீட்ரூட் சாறு புற்றுநோய்க்கு கொடுத்தால் குணமாகிவிடும். பீட்ரூட்டில் மேலும் பல மருத்துவ பயன்கள் ... |
கண்டிப்பாக Down Syndrome பற்றி எல்லோரும் தெரிந்து கொள்ள வேண்டும். ஒரு ... |
சிவப்பு சித்ர மூல வேர்ப்பட்டையை நன்கு உலர்த்தி பொடித்து தேன் அல்லது பாலில் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.