பிரதமரின் வெளி நாட்டுப் பயணங்களின் மூலம், ஏராளமான அன்னியமுதலீடுகள் குவிந்து வருகின்றன,'' என்று தமிழக பா.ஜ.க, தலைவர் தமிழிசை சவுந்தர ராஜன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து, மேலும் அவர் கூறியதாவது:மத்தியில், பிரதமர் நரேந்திரமோடி தலைமையிலான, பாஜக., அரசு பொறுப்பேற்று, ஓராண்டு நிறைவடைவதை ஒட்டி, மத்திய அரசின் பல்வேறு சாதனைகளை, பொது மக்களிடம் தெரியப்படுத்தும் வகையில், சிறப்பு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதற்காக, 'மகா மக்கள்தொடர்பு இயக்கம்' மூலம், மத்திய அரசின் சாதனைகள், அச்சிடப்பட்ட காகிதங்கள் மூலம், மக்கள்மத்தியில் கொண்டு செல்லப்படும். கட்சி உறுப்பினர்கள், பொது மக்களை நேரடியாக தொடர்புகொண்டு, பாஜக., அரசின் சாதனைகளை எடுத்துரைப்பர்.
பிரதமரின் வெளிநாட்டு பயணங்களின் மூலம், ஏராளமான அன்னியமுதலீடுகள் குவிந்து வருகின்றன. மத்திய அரசின், 'மேக் இன் இந்தியா' திட்டத்தின் மூலம், இருலட்சம் இளைஞர்கள் பயனடைவர்.
மத்திய அரசின் திட்டங்களால், பிரதமர் மோடி, நாட்டை குழிதோண்டி புதைக்க முயல்வதாக, எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன. உயர்ந்தகோபுரம், மாளிகை கட்டுவதற்கு, ஆழமான அஸ்திவாரம் தேவை. தற்போது, வறுமையில் சிக்கித்தவிக்கும் நாட்டை, மாடமாளிகையாக மாற்றுவதற்கு தேவையான, அஸ்திவாரக் குழியைதான், பிரதமர் மோடி தோண்டுகிறார்.
தமிழக மீனவர் பிரச்னைகளை தீர்க்கும்வகையில், மத்திய அரசு தொடர்ந்து பல நடவடிக்கைகளை எடுத்துவருகிறது.குழந்தை தொழிலாளர் குறித்த சட்டத் திருத்தத்தை எதிர்க்கும், மதிமுக., தலைவர் வைகோ, அவர் எம்.பி.,யாக இருந்தபோது, சிவகாசி பட்டாசு தொழிற்சாலையில் பணியாற்றும், குழந்தை தொழிலாளர்களை காப்பாற்ற, என்ன முயற்சி செய்தார்?
அவர், பாஜக., அரசின் அனைத்து செயல்பாடுகளையும், கண்மூடித்தனமாக எதிர்ப்பதையே வழக்கமாக கொண்டுள்ளார்.தற்போதைய அரசியல் சூழலில், தமிழகத்தில் கூட்டணி குறித்து, எந்த முடிவும் எடுக்கமுடியாது; எனினும், எந்தநேரத்திலும் தேர்தலை சந்திக்க தயார் இவ்வாறு, அவர் கூறினார்
கோவை இலையை சாறு எடுத்து, நான்கு தேக்கரண்டியளவு சாற்றை ஒரு டம்ளரில் விட்டு ... |
சோற்றுக்கற்றாழை – மடல்களைக் கொண்டு வந்து, மேல் தோலை நீக்கி, நன்கு கழுவி ... |
காரட்டிலுள்ள கால்சியம் எளிதில் செரிமானம் ஆகக்கூடியது. தினமும் கொஞ்சம் காரட் சாப்பிட்டாலே ஒரு ... |
Leave a Reply
You must be logged in to post a comment.