வங்கதசே அரசு முன்னாள் பிரதமர் வாஜ்பாய்க்கு போர்விடுதலை விருதை வழங்கியது. அவரது சார்பில் விருதைபெற்ற பிரதமர் மோடி அதை வாஜ்பாயின் குடும்பத்தாரை சந்தித்து ஒப்படைத்தார். பிரதமர் நரேந்திரமோடி கடந்த வாரம் வங்கதேசத்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டார்.
அப்போது வங்கதேச சுதந்திர போராட்டத்தில் அதிக ஈடுபாடுகாட்டிய முன்னாள் பிரதமர் வாஜ்பாய்க்கு அந்நாட்டு அரசு போர்விடுதலை விருதை வழங்கியது. விருதை வாஜ்பாய் சார்பில் மோடி பெற்றுக்கொண்டார். வங்கதேசத்தின் உயரிய விருது வாஜ்பாய்க்கு வழங்கப் பட்டுள்ளது. இந்நிலையில் அந்தவிருதை எடுத்து கொண்டு மோடி வாஜ்பாயின் வீட்டிற்குசென்று அவரின் குடும்பத்தாரிடம் ஒப்படைத்தார். இதுகுறித்து மோடி ட்விட்டரில் கூறியிருப்பதாது,
அடல்ஜியை சந்தித்தேன். வங்கதேச அரசு வழங்கிய போர்விடுதலை விருதை அவரது குடும்பத்தாரிடம் அளித்ததில் மகிழ்ச்சி அடைகிறேன் என்று தெரிவித்து புகைப் படத்தையும் வெளியிட்டுள்ளார்.
மோடியிடம் இருந்து விருதை வாஜ்பாயின் வளர்ப்புமகள் நமீதா பட்டாச்சாரியா மற்றும் அவரது கணவர் ரஞ்சன் பட்டாச்சாரியா ஆகியோர் பெற்று கொண்டனர். மோடியுடன் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜும் வாஜ்பாயின் வீட்டிற்கு சென்றிருந்தார்.
ஜாதிக்காய், சுக்கு, துளசி விதை, கடுக்காய், இவைகளை ஒரே அளவாக எடுத்து உரலில் ... |
அறுகம்புல் ஒரு இராஜ மூலிகையாகும் , அறுகம்புல் நோய்களை வேருடன் அறுப்பதால் இதற்குச் ... |
நாகப்பட்டை, அத்திப்பட்டை, ஆவாரம்பட்டை மூன்றையும் ஒரு பிடி வீதம் எடுத்து மண் சட்டியிலிட்டு ... |
Leave a Reply
You must be logged in to post a comment.