நாடுமுழுவதும் மத்திய அரசின் கட்டுப்பட்டில் உள்ள பள்ளிகளில் 6-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்புவரை பயிலும் மாணவர்களுக்கு யோகா கட்டாய பாடமாக்கப் பட்டுள்ளதாக மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சர் ஸ்மிருதி இராணி தெரிவித்துள்ளார்.
டெல்லியில் தேசிய யோகாபயிற்றுநர்கள் மாநாட்டில் அவர் பேசும் போது, "நாடுமுழுவதும் மத்திய அரசு நடத்தும் பள்ளிகளில் 6-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்புவரை பயிலும் மாணவர்களுக்கு யோகா கட்டாய பாடமாக்கப்பட்டுள்ளது.
மாணவர்களுக்கு மட்டுமல்லாமல் மேலும், ஆசிரியர் பயிற்சி திட்டங்களிலும் யோகாபயிற்சி சேர்க்கப்படவுள்ளது.
யோகாவை கட்டாய மாக்குவதால் மாணவர்களுக்கு எவ்வகையிலும் சுமை ஏற்படாது. ஏனெனில் 80% மதிப்பெண் செயல் முறை தேர்வில் வழங்கப்பட்டுவிடும். யோகாவை மாணவர்கள் முழுமையான ஈடுபாட்டுடன் செய்யவேண்டும் என விரும்புகிறேன்.
யோகா பாடத்தில் பட்டயப்படிப்பு, இளங்கலை, முதுகலை படிப்புகளும் அறிமுகப்படுத்தப்படுகிறது. அடுத்த ஆண்டு (2016), டெல்லியில் தேசியளவிளான யோகா போட்டி நடத்தப்படும். இதில் வெற்றிபெறும் மாணவருக்கு ரூ.5 லட்சம் ரொக்கப்பரிசு வழங்கப்படும்" என்றார்.
பேரீச்சை ஊட்டச்சத்து நிரம்பியது. 'டானிக்'காக செயல்படும். சிறந்த மலமிலக்கியும் கூட. அதிகாலையில் பாலுடன் ... |
1. மஞ்சள் கரிசலாங்கன்னித் தழைகள் கைப்பிடி அளவு 2. புதினாத் தழைகள் இரண்டு கைப்பிடி ... |
தண்ணீர் இல்லாமல் இந்த உலகில் மரம், செடி, விலங்கு எதுவும்மே இல்லை. மேலும் தண்ணீர் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.