சமூகத்தில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் யோகா ஒரு மதத்துக்கானது அல்ல.. ஆன்மா, உடலை ஒருங்கிணைக்கும் அறிவியல் என்று நியூயார்க்கில் ஐ.நா. சபையில் நடைபெற்ற சர்வதேச யோகா தின விழாவில் வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் தெரிவித்துள்ளார்.
நியூயார்க்கில் ஐக்கிய நாடுகள் சபை நடத்திய சர்வதேச யோகா தின விழாவில் நேற்று அவர் கலந்து கொண்டார்.
ஒட்டுமொத்த உலகமும் ஒரே குடும்பம்தான். அதை யோகாவால் நாம் இணைக்கமுடியும். இன மோதல்கள், வன்முறை ஆகியவை மனித சமூகத்துக்கான அச்சுறுத்தலாக திகழுகிறது. இத்தகைய சூழ்நிலையில் மக்களிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்து வதற்கான வழியாக யோகா விளங்கமுடியும். யோகா என்பது மதம்சார்ந்தது அல்ல. அது ஆன்மாவையும், உடலையும் ஒருங்கிணைக்கும் அறிவியல்.
இந்தியாவில் 5,000 ஆண்டுகளுக்கு முன்பே யோகா தோன்றி விட்டது. யோகா என்பது இந்தியாவின் ஆன்மபலத்தை வெளிப்படுத்துகிறது. இதே ஐ.நா. சபையில் யோகாவை அங்கீகரிப்பதற்காக பிரதமர் நரேந்திரமோடி முயற்சி மேற்கொண்டார். அடுத்த 75 நாள்களில் தீர்மானம் நிறைவேற்றப் பட்டது. சர்வதேச யோகா தினமாக ஜூன் 21-ந் தேதியை அறிவிக்கவேண்டும் என்ற தீர்மானத்தை வெற்றி பெறச்செய்ததற்காக 177 நாடுகளுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
அதற்கு எந்த விதமான ஆதாரமும் இல்லை. நான் எந்த ஒரு ஊட்டச்சத்து மாவையும் ... |
ஒழுங்கான உடற்பயிற்சியாலும் ஆரோக்கியமான உணவு முறையாலும் கிடைக்கும் நன்மைகள் • சிறந்த ஆரோக்கியம் • பார்ப்பதற்கும், உணர்வதற்கும் |
உங்களுக்குத் தெரியுமா? அலோபதி மருத்துவம் என்பது மேல்நாடுகளில் இருந்து இறக்குமதியான மருத்துவமுறை.இந்த மருத்துவமுறையின் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.