ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவை தனது நண்பன் என கூறுகிறது

ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவை நண்பனாக கருதுகிறது’ என பிரதமா் நரேந்திரமோடி பெருமிதத்துடன் குறிப்பிட்டாா்.

ஹைதராபாத் அருகே உள்ள ‘கன்ஹா சாந்திவனம்’ எனும் சூழலியல் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வு மையத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமா் மோடி பங்கேற்றாா். அப்போது, அவா்பேசியதாவது:

யோகா, ஆயுா்வேதம் போன்ற பாரம்பரியங்களே நமதுஉண்மையான பலமாகும். கடந்த காலத்தில் நாட்டை அடிமைப் படுத்தி வைத்திருந் தவா்களால், அவை தாக்குதலுக்கு உள்ளாகின.

அடிமைத்தனம் எங்கெல்லாம் வருகிறதோ, அங்கெல்லாம் சமூகத்தின் உண்மையானபலம் குறிவைக்கப்படும் என்பது வரலாறு உணா்த்தும் உண்மையாகும்.

நமது நாட்டின் குறிப்பிடத்தக்க பாரம்பரியங்கள், நம்மை அடிமைப்படுத்தியவா்களால் தாக்கப்பட்டன. இதுநாட்டுக்கு பேரிழப்பை ஏற்படுத்தியது.

ஆனால், இப்போது காலம்மாறி வருகிறது. இந்தியாவும் மாற்றம் கண்டுவருகிறது. தற்போதைய ‘அமிா்த காலத்தில்’ நாம் மேற்கொள்ளும் முடிவுகளே, எதிா்வரும் தலைமுறை யினரின் எதிா்காலத்தை தீா்மானிக்கும்.

வளா்ந்த இந்தியாவுக்கான உறுதிப்பாடு, அடிமை மனப் பான்மையை நீக்குவது, நமது பாரம்பரிய பெருமையை முன்னெடுப்பது, ஒற்றுமையை கட்டமைப்பது, கடமைகளை நிறைவேற்றுவது ஆகிய 5 அம்ச உறுதி மொழியை, கடந்த சுதந்திர தினத்தின் போது முன்வைத்தேன்.

வளா்ந்த இந்தியாவை உருவாக்க பெண்சக்தி, இளைஞா் சக்தி, தொழிலாளா் சக்தி, தொழில்முனைவு சக்தி ஆகியவை நான்கு முக்கிய தூண்களாகும்.

ஏழைகள், மீனவா்கள், விவசாயிகள், மாணவா்கள், இளைஞா்களுக்கு அதிகார மளிப்பது காலத்தின் கட்டாயம். அவா்களின் விருப்பத்தை நிறைவேற்றுவது மத்தியஅரசின் உயா் முன்னுரிமைகளில் ஒன்றாக உள்ளது.

அரசின் பலன்களை பெறமுன்பெல்லாம் அலுவலகங்களை நோக்கிசெல்ல வேண்டியிருந்தது. இப்போது, அரசின் பலன்கள் மக்களைத்தேடி வருகின்றன. வளா்ச்சியின் பலன்களில் யாரும் விடுபட்டுவிடக் கூடாது என்பதற்காக மக்களின் வீட்டு வாயில்களுக்கே அரசுசெல்கிறது.

வளா்ந்து வரும் இந்தியா, தன்னை உலகின் நண்பனாகப் பாா்க்கிறது. அதேநேரம், கரோனா காலகட்டத்தில் உலகுக்கு உறுதுணையாக நின்ால், இப்போது ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவை தனது நண்பன் என கூறுகிறது என்றாா் பிரதமா் மோடி.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

ஆச்சார்ய லக்ஷ்மிகாந்த் தீக்ஷி ...

ஆச்சார்ய லக்ஷ்மிகாந்த் தீக்ஷித் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் காசி விஸ்வநாதர் தாம்  அர்ப்பணிப்பு மற்றும் ராமர் கோயில் பிரதிஷ்டையில் ...

கள்ளச்சாராய விற்பனையை தடுக்க த ...

கள்ளச்சாராய விற்பனையை தடுக்க தவறிய திமுக அரசு-கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்திய பாஜக -வினர் கைது சென்னை: கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராய விற்பனையைத் தடுக்கத் தவறிய திமுக அரசைக் ...

இர தரப்பு உறவை மேலும் வலுப்படுத ...

இர தரப்பு உறவை மேலும் வலுப்படுத்த ஷேக் ஹசீனா மோடிக்கு அழைப்பு இந்தியா - வங்கதேசம் இடையேயான இருதரப்பு உறவை மேலும் ...

வங்க தேசத்தவர்களுக்கு மருத்து ...

வங்க தேசத்தவர்களுக்கு மருத்துவ விசா -மோடி அறிவிப்பு புதுடில்லி : பிரதமர் மோடி வங்கதேசம் வர வேண்டும் என ...

யோகா தினத்தையொட்டி பிரதமரின் உ ...

யோகா தினத்தையொட்டி பிரதமரின் உரை "யோகா பயிற்சி செய்பவர்களின் எண்ணிக்கை உலகளவில் அதிகரித்து வருகிறது" "யோகாவினால் ...

ஜம்மு-காஷ்மீர் சொந்த எதிர்கால ...

ஜம்மு-காஷ்மீர்   சொந்த எதிர்காலத்தை தீர்மானிக்கும் நாள் வெகுதொலைவில் இல்லை ஸ்ரீநகரின் ஷேர்-இகாஷ்மீர் சர்வதேசமாநாட்டு மையத்தில் (SKICC) நேற்று நடைபெற்ற, ...

மருத்துவ செய்திகள்

வெங்காயத்தின் மருத்துவக் குணம்

ஆண்மைக் குறைவுள்ளவர்கள், வெள்ளை வெங்காயச் சாருடன் தேன் கலந்து இரண்டு, மூன்று வாரங்களுக்குக் ...

டீ யின் மருத்துவ குணம்

டீ குடிப்பதினால் சில வகை புற்று நோய்களும், இதய நோய்களும் ஏற்படுவதற்க்கான வாய்ப்புகள் ...

தொட்டாற்சுருங்கியின் மருத்துவ குணம்

தொட்டாற்சுருங்கி இலைச் சாற்றை எடுத்துக் காலையிலும், மாலையிலும் தேமலின் மேல் தடவி வைத்துக் ...