இந்திய நாட்டின் பெருமையை பல விதங்களில் உலகம் அறியசெய்து வருகிறார் பிரதமர் நரேந்திர மோடி என பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் இல. கணேசன் தெரிவித்துள்ளார்.
வேலூர் கிழக்கு மாவட்ட பாஜக சார்பில் தொரப் பாடியில் மத்திய பாஜக அரசின் ஓராண்டு சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் நடைபெற்றது இதில் கலந்துகொண்டு இல.கணேசன் பேசியது:
சர்வதேச தினமாகக் கொண்டாடப்பட்ட யோகாகலை அறிவியல்பூர்வமானது, ஒருகுறிப்பிட்ட கட்சிக்கோ, மதத்துக்கோ உரியதல்ல. இந்திய நாட்டின் பாரம்பரியத்தை தாங்கி நிற்பது என்ற நிலையை எதிர்க் கட்சிகளாக இருப்பினும் சில தலைவர்கள் மனம்திறந்து பாராட்டியுள்ளதை பாஜக வரவேற்கிறது. உலகளவில் நம் நாட்டுக்கு பெருமைசேர்த்த இந்த யோகா வரலாற்றில் முக்கிய அம்சமாக பதிந்துள்ளது.
ஆயுள் காப்பீடு, விபத்துக் காப்பீட்டுத் திட்டங்கள் மூலம் ஏழைகளுக்கு பிரதமர் மோடி நம்பிக்கை யூட்டியுள்ளார். இதன் மூலம் இது சாமானி யருக்கான அரசு என்பதை மக்கள் உணர்ந்துள்ளார்கள். பசி, பட்டினியை தனது இளமை பருவத்தில் சந்தித்தவர் மோடி.
அதனால் ஏழைமக்களின் நிலை அவருக்கு நன்குதெரியும். அதனால்தான் ஏழை, எளியவர்கள் என்றைக்கும் ஏழைகளாக இருக்கக்கூடாது என்பதற்காக சில திட்டங்களை அவர் செயல்படுத்த தொடங்கியுள்ளார்.
50 ஆண்டுகளாக ஏழ்மையை ஒழிப்போம் என பெயரளவில் சொல்லி கொண்டிருந்தவர்கள் இந்தநாட்டில் இருக்கிறார்கள். ஆனால் அந்த கோஷத்தை எழுப்பாமல் இந்த நாட்டின் ஏழ்மையை ஒழிப்பதற்கான பணிகளை அவர் செய்துவருகிறார்.
அவர் எந்த நாட்டுக்குச் சுற்றுப் பயணம் மேற்கொண்டாலும் அந்நாட்டின் மூலம் இந்தியாவின் தேவைகளை கௌரவமாக நிறைவேற்றி வருகிறார். அவரது சுற்றுப் பயணங்கள் காரணமாக இன்றைக்கு அன்னிய நாட்டு முதலீடு 112 சதவீதம் அதிகரித்துள்ளது. இந்திய நாட்டின் பெருமையை பல விதங்களில் உலகம் அறியச் செய்துவரும் நரேந்திர மோடி கடந்த ஓராண்டாக லஞ்ச, லாவண்யம் இல்லா அரசை மக்களுக்கு தந்துள்ளார்.
இன்றைக்கு தமிழகத்தில் ஊழலற்ற நிர்வாகத்தை பாஜக தலைமையிலான ஆட்சியால் மட்டுமே தரமுடியும். அதற்கு மக்கள் உறுதுணை புரிய வேண்டும் என்றார் இல.கணேசன்.
இதை உண்பதால், வயிற்றுவலி, பேதி, சீதபேதி, அஜீரணபேதி, மூத்திரத் தொடர்புடைய நோய்கள், மூலவியாதி, ... |
கொத்துமல்லி, புதினா, போன்று கறிவேப்பிலையையும் நாம் வாசனைக்காக பல நூறு ஆண்டுகளாக பயன்படுத்தி ... |
மரம் , செடி, கொடி, புல், பூண்டு என்று இயற்கையின் கொடையான அனைத்து ... |
Leave a Reply
You must be logged in to post a comment.