2011ம் ஆண்டு நிலவர, சமூக பொருளாதார அடிப்படையிலான மக்கள் தொகை கணக்கெடுப்பை நிதிஅமைச்சர் அருண்ஜெட்லி இன்று வெளியிட்டார்.
நாட்டின் ஒட்டுமொத்த கிராமப்புற குடும்பங்களில் 4.6 சதவிகிதத்தினர் மட்டுமே வருமானவரி செலுத்துவதாக இந்த கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது. கிராமங்களில் மாதச்சம்பளம் பெறுவோரின் எண்ணிக்கை 10 சதவிகிதம் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.
தாழ்த்தப் பட்ட மக்கள் எண்ணிக்கையில் 3.49 சதவிகிதம் பேர் மட்டுமே வருமானவரி செலுத்தும் நிலையில், பழங் குடியினரில் அது 3.34 சதவிகிதமாக இருப்பதாகவும் கணக் கெடுப்பில் கூறப்பட்டுள்ளது.
சமூக பொருளாதார அடிப்படையிலான மக்கள் தொகை கணக்கெடுப்பின் மூலம் அரசின் நலத்திட்டங்களை சரியான திசையில் அமல்படுத்த முடியும் என அருண்ஜெட்லி தெரிவித்தார்.
கீரையில் இருக்கும் சத்துக்கள் அனைத்தும் வீணாகாமல் அப்படியே முழுமையாக கிடைக்க, முதலில் கீரைகளை ... |
வெள்ளரி காயை, தினசரி காலையில் எழுந்ததும் முகத்தில் தேய்த்துவர முகத்தில் அதிகமாக எண்ணெய் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.