முஸ்லீம் சமூகத்தின் மீது கவனம் செலுத்தும் பா.ஜ.க; எதிர்க்கட்சிகள் கவலை

BJP’s Pasmanda Muslims outreach plan after PM message a new worry for Oppn: கடந்த வார இறுதியில் ஹைதராபாத்தில் நடைபெற்ற பாஜக தேசியசெயற்குழு கூட்டத்தில், அனைத்து சமூகங்களிலும் உள்ள “தாழ்த்தப் பட்ட மற்றும் பின் தங்கிய” பிரிவினரை அணுகுமாறு பிரதமர் நரேந்திரமோடி கேட்டுக் கொண்டதைத் தொடர்ந்து, பா.ஜ.க பாஸ்மாண்டா (பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்) முஸ்லிம்கள் மீது கவனம் செலுத்த திட்டமிட்டுள்ளதால், பா.ஜ.க.,வுக்கு எதிராக முஸ்லீம் சமூகம் பெருமளவில் வாக்களிக்கும் உத்தரப்பிரதேசம் மற்றும் பீகாரில் எதிர்க்கட்சிகளுக்கு இந்த திட்டம் ஒருபுதிய கவலையை ஏற்படுத்துகிறது.

உத்திர பிரதேச பா.ஜ.க வைச் சேர்ந்தவர்கள் கூறுகையில், சமீபத்தில் நடந்த மாநில சட்டமன்ற தேர்தலில் பிரதான எதிர்க் கட்சியான சமாஜ்வாதி கட்சி (SP) மற்ற OBC அடிப்படையிலான பிராந்திய கட்சிகளுடன் வலுவான கூட்டணியை கொண்டிருந்தாலும், கிட்டத்தட்ட 8 சதவீத வாக்காளர்கள் பாஜக.,வுக்கு ஆதரவாக இருந்ததால், பாஸ்மாண்டா முஸ்லிம்களின் ஆதரவை பெறுவதற்கான நம்பிக்கை அக்கட்சிக்கு அதிகரித் துள்ளது.

“சட்டமன்றத் தேர்தலில், பாராபங்கி மாவட்டத்தில் சமாஜ்வாதிவேட்பாளர் ஒருவர், பாஸ்மாண்டா முஸ்லிம்களின் வாக்குகள் பா.ஜ.க.,வை நோக்கி மாறுவது குறித கவலையை எழுப்பி, அவர்களிடம் பேசச்சொன்னார்” என்று லக்னோவில் உள்ள பாஸ்மாண்டா முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த சமாஜ்வாதி தலைவர் ஒருவர் கூறினார். மேலும், “நான் அங்குள்ள பாஸ்மாண்டா முஸ்லிம்களின் கிராமத்தை அடைந்த போது, ​​பா.ஜ.க ஆட்சியில் தங்களுக்கு வீடுகள், இலவசரேஷன்கள், கழிப்பறைகள், எல்பிஜி சிலிண்டர்கள், குறைந்த கட்டணத்தில் மருத்துவ வசதிகள் கிடைத்ததாகவும், மற்றகட்சிகள் தங்களுக்கு இதுபோன்ற விஷயங்களை வழங்க வில்லை என்றும் கிராம மக்கள் கூறினர். சமாஜ்வாதிக்கு வாக்களிக்கும்படி அவர்களை சமாதானப் படுத்த முயற்சித்தேன் ஆனால் தோல்வியடைந்தேன். அவர்கள் குறைந்த கல்வியறிவு பெற்றவர்கள், எனவே அத்தகைய திட்டங்கள் அவர்களிடம் தாக்கத்தை ஏற்படுத்தி யுள்ளது,” என்றும் அவர் கூறினார்.

பா.ஜ.க மீண்டும் வெற்றிபெற்றதை கண்ட தேர்தல் முடிவுகளுக்குப்பிறகு, முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான கட்சியின் புதியஅரசாங்கம் டேனிஷ் ஆசாத் அன்சாரியை (பாஸ்மாண்டா முஸ்லிம்) அதன் ஒரேமுஸ்லீம் அமைச்சராக ஏற்றுக்கொண்டது. முந்தைய ஆதித்யநாத் அமைச்சரவையில், ஒரே முஸ்லிம் அமைச்சராக இருந்தவர், முஸ்லீம்வகுப்பைச் சேர்ந்த மொஹ்சின் ராசா.

மேலும், உ.பி.யில் உள்ள சிறுபான்மையினர் தொடர்பான பல்வேறு வாரியங்கள் மற்றும் கல்விக் கூடங்களில், பா.ஜ.க அரசு தற்போது பாஸ்மாண்டா முஸ்லிம்களை நியமித்துள்ளதாக கட்சிவட்டாரங்கள் தெரிவித்தன.

சமீபத்தில் நடந்த உ.பி., சட்ட சபை தேர்தலில் மொத்தமுள்ள 34 முஸ்லிம் எம்எல்ஏ.க்களில், 30 பேர் பாஸ்மாண்டா முஸ்லிம்கள்.

பாஸ்மாண்டா முஸ்லீம்கள் என்பது சமூக, கல்வி மற்றும் பொருளாதாரத்தில் பின் தங்கியவர்களை உள்ளடக்கியது. நாட்டில் உள்ள முஸ்லிம் சமூகத்தில் பெரும் பான்மையானவர்கள் பாஸ்மாண்டாக்கள். பாஸ்மாண்டா தலைவர் ஒருவரின் கூற்றுப்படி, அன்சாரி, மன்சூரி, கஸ்கர், ரயின், குஜர், கோசி, குரேஷி, இத்ரிசி, நாயக், ஃபக்கீர், சைஃபி, அல்வி மற்றும் சல்மானி உள்ளிட்ட பலசாதிகள் பாஸ்மாண்டா முஸ்லிம் சமூகத்தின் ஒருபகுதியாக அடையாளம் காணப்பட்டுள்ளன. பாஸ்மாண்டாக்கள் பொதுவாக நிர்ணயிக்கப்பட்ட தொழில்களை செய்கிறார்கள், சிறியஅளவிலான சாலையோர வணிகங்களை நடத்துகிறார்கள் மற்றும் சிறிய வருமானத்தில் வாழ்கின்றனர், என்று அந்த தலைவர் கூறினார்.

உ.பி.,யின் சிறுபான்மை மோர்ச்சா தலைவர் குன்வர்பாசித் அலி, மாநிலத்தில் நான்கு கோடி பாஸ்மாண்டா முஸ்லிம்கள் உள்ளனர் என்றும், மோடி அரசு மற்றும் ஆதித்யநாத் அரசின் பல்வேறு நலத்திட்டங்களின் பலன்களை அவர்கள் பெற்றுள்ளதாகவும், ஆனாலும் பாஜக.,வால் அவர்களை அணுக முடியவில்லை என்றும், சட்டமன்றத்தேர்தலின் போது அவர்களின் வாக்குகளை விரும்பியபடி பெற முடியவில்லை என்றும் கூறினார். உத்திரபிரதேச பா.ஜ.க.,வின் சிறுபான்மை மோர்ச்சாவில், 70 சதவீதத்துக்கும் அதிகமான நிர்வாகிகள் பாஸ்மாண்டா முஸ்லிம்கள்.

ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங்கின் (ஆர்.எஸ்.எஸ்) துணை அமைப்புகளும் கல்வி மற்றும் நிதிப் பிரச்சனைகளால் ஒதுக்கப்பட்ட பாஸ்மாண்டா முஸ்லிம்கள் மீது கவனம்செலுத்த முயன்றதாக வட்டாரங்கள்தெரிவித்தன. உதாரணமாக, இத்தகைய அமைப்புகள் குறைந்தளவிலான விவசாயத்தில் ஈடுபட்டுள்ள வான்குஜர்கள், முஸ்லீம் ராஜ்புட்கள் மற்றும் முஸ்லீம் ஜாட்கள் போன்ற பாஸ்மாண்டாக்களை “முக்கிய நீரோட்டத்திற்கு கொண்டுவர” முயற்சியில் ஈடுபட்டுள்ளன என்று ஆதாரங்கள் கூறுகின்றன.

“பாஸ்மாண்டா முஸ்லீம் இளைஞர்களிடையே மதக் கடும் போக்குவாதிகள் உள்ளனர், அவர்கள் மத குருமார்களைப் பின்பற்றி அடிக்கடி வகுப்புவாத கலவரங்களில் பலியாகின்றனர். அவர்கள் தவறாக வழிநடத்தப் படுகிறார்கள், பின்னர் போலீஸ் நடவடிக்கையை எதிர்கொள்கிறார்கள். ஆனால் அவர்களில் ஒருபிரிவினர் அரசாங்கத் திட்டங்களின் பலன்களைப் பெற்றபிறகு கடுமையான கருத்துக்களை மாற்றி, இப்போது சமூகத்தின் முக்கிய நீரோட்டத்தில் சேரவிரும்புகிறார்கள், ”என்று ஒரு பா.ஜ.க தலைவர் கூறினார்.

உ.பி.யை தளமாகக் கொண்ட சமூக அமைப்பான பாஸ்மாண்டா முஸ்லிம் சமாஜ்தலைவர் அனிஸ் மன்சூரி கூறுகையில், உ.பி.யில் பாஸ்மாண்டா முஸ்லிம்கள் பெரும்பாலும் சமாஜ்வாதி கட்சியை ஆதரிக்கின்றனர். இருப்பினும், பீகாரில், லாலுபிரசாத் தலைமையிலான பிரதான எதிர்க்கட்சியான ஆர்.ஜே.டி.,யையும், முதல்வர் நிதிஷ்குமார் தலைமையிலான ஆளும் ஜே.டி(யு) கட்சியையும் பாஸ்மாண்டா சமூகம் ஆதரிக்கிறது, என்று கூறினார்.

 

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

100 நாளுக்கான செயல் திட்டத்தின் ம ...

100 நாளுக்கான செயல் திட்டத்தின் முக்கிய முன்முயற்சிகள் குறித்து மத்திய அமைச்சர் ஆய்வு மத்திய சமூகநீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சர் டாக்டர் ...

செங்கோடி 2024 பயிற்சியில் பங்கேற் ...

செங்கோடி 2024 பயிற்சியில் பங்கேற்ற இந்திய விமானப்படை ஜூன் 04 முதல் ஜூன் 14 வரை அமெரிக்க ...

பாதஹஸ்தாசனம் காணொளிக்காட்சிகள ...

பாதஹஸ்தாசனம் காணொளிக்காட்சிகளை மோடி பகிர்ந்துள்ளார் பாதஹஸ்தாசனம் அல்லது கைகளால் கால்களைத் தொடும் யோகா நிலை ...

ஜி 20 மாநாட்டில் மோடி- இன் உரை

ஜி 20 மாநாட்டில் மோடி- இன் உரை தொழில்நுட்பத்தை ஆக்கப்பூர்வமானதாக ஆக்குங்கள் என்றும்; அழிவுகரமானதாக அல்ல என்றும் ...

ஸ்மிரிதி வனம் இடம் பெற்றிருப்ப ...

ஸ்மிரிதி வனம் இடம் பெற்றிருப்பது குறித்து மோடி மகிழ்ச்சி 2001-ம் ஆண்டு ஏற்பட்ட துயர சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி ...

இந்தியா-வின் முற்போக்கான பாதை எ ...

இந்தியா-வின் முற்போக்கான பாதை என்ற தலைப்பில் நாளை நடக்கும் மாநாடு 2023 டிசம்பர் 25ந்தேதி. "பாரதிய நியாய சன்ஹிதா 2023", ...

மருத்துவ செய்திகள்

ஒழுங்கான உடற்பயிற்சியாலும் உணவு முறையாலும் கிடைக்கும் நன்மைகள்

ஒழுங்கான உடற்பயிற்சியாலும் ஆரோக்கியமான உணவு முறையாலும் கிடைக்கும் நன்மைகள் • சிறந்த ஆரோக்கியம் • பார்ப்பதற்கும், உணர்வதற்கும்

கண்களில் எவ்வகைக் கோளாறுகள் ஏற்படுகின்றன?

1. கண்பார்வைத்திறன் குன்றியிருத்தல் 2. கண்நோய் 3. மாலைக்கண் நோய் 4. கண்ணில் சதை வளருதல் 5. கண்ணின் ...

உடல் பலம் பெற

100 எறுக்கம் பூக்களை எடுத்து அதை நன்றாக உலர்த்தி, லவங்கம், சாதிக்காய், சாதிப்பத்திரி ...