கஜகஸ்தான் சென்றுள்ள பிரதமர் நரேந்திரமோடி அந்நாட்டு பிரதமர் கரீம் மோசிமோவ், அதிபர் நூர்சுல் தான் நஜார்பாயே ஆகியோரை சந்தித்து இருதரப்பு உறவுகள் குறித்து பேச்சு வார்த்தை நடத்தினார். உஸ்பெகிஸ்தான் பயணத்தை முடித்து, கஜகஸ்தான் சென்றடைந்த பிரதமர் மோடிக்கு அந்நாட்டு தலை நகர் அஸ்தானா விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு தரப்பட்டது.
கஜகஸ்தான் பிரதமர் கரீம் மோசி மோவ் நேரில் சென்று பிரதமர் மோடியை வரவேற்றார். இதனை தொடர்ந்து இரு தலைவர்களும் சந்தித்து இருநாட்டு உறவுகள் குறித்து ஆலோசனை நடத்தினர். இதனைத்தொடர்ந்து இன்று கஜகஸ்தான் அதிபர் நூர்சுல் தான் நஜார்பாயேவை பிரதமர் மோடி சந்தித்து பேசினார். இச்சந்திப்பின் போது இந்திய ஆன்மீகத் தலைவர்களின் நூல்களை பரிசாக அளித்தார். கஜகஸ்தான் பயணத்தை நிறைவு செய்துவிட்டு ரஷ்யாவின் உஃபா நகருக்கு பிரதமர் செல்கிறார். அங்கு பிரிக்ஸ் மற்றும் சாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் மாநாடுகளில் அவர் பங்கேற்க உள்ளார்.
இதன் இலை, வேர் உபயோகப்படுகிறது. இதன் சுவை இனிப்பு, துவர்ப்பு, கார்ப்பு உடையது. ... |
எந்த வகை விஷத்தையாவது, சாப்பிட்டு விட்டதாகத் தெரிந்தால், துளசி இலையைக் கொண்டு வந்து ... |
மணம் உள்ளது. சாம்பார், குழம்பு, இரசம், கூட்டு முதலியவைகளில் இதை வாசனைக்காகச் சேர்ப்பது ... |
Leave a Reply
You must be logged in to post a comment.