பெண்கள் மேம்பாட்டுக்கு தமிழகம் சிறந்த உதாரணமாக திகழ்வதாக மத்திய வர்த்தகம், தொழில்துறை தனிப்பொறுப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.
சென்னை நுங்கம்பாக்கம் கல்லூரிசாலையில் பெண்கள் கிறிஸ்தவ கல்லூரி தொடங்கி 100 ஆண்டுகள் ஆவதையொட்டி நூற்றாண்டுவிழா நேற்று நடைபெற்றது.
விழாவில் சிறப்புவிருந்தினராக மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்து கொண்டு நூற்றாண்டு விழாவை குத்துவிளக்கு ஏற்றி தொடங்கிவைத்தார். நூற்றாண்டு விழாவின் அடையாள சின்னத்தை (லோகோ) அறிமுகப்படுத்தி அவர் பேசியதாவது:-
தமிழ்நாடு எப்போதும் பெண்களுக்கு அதிகாரம் அளிப்பதில் முன்னணியில் உள்ளது. மேலும் பெண்களுக்கு அதிகாரம் அளிப்பதில் ஹால் மார்க் போன்ற முத்திரையுடன் விளங்குகிறது. அதில் நானும் பயன் அடைந்துள்ளேன். பெண்களுக்கு அதிகாரம் அளிப்பதில் பெண்கள் கிறிஸ்தவ கல்லூரியும் தன்பங்களிப்பை செவ்வனே செய்துள்ளது.
கல்வி நிறுனங்கள், மதிப்பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் அதே வேளையில், பெண்கள் மேம்பாட்டுக்கும் சிறந்த மனிதர்களை உருவாக்குவதற்கான முயற்சிகளிலும் ஈடுபட வேண்டும். அந்த வகையில், நூற்றாண்டைக் கடந்துள்ள மகளிர் கிறிஸ்தவக் கல்லூரி சிறந்த கல்விச் சூழலை மாணவிகளுக்கு உருவாக்கித் தருவதோடு, பெண்கள் மேம்பாட்டுக்கும் அடித்தளமிட்டு வருவது பாராட்டுக்குரியது
இந்தகல்லூரியில் படித்த பெண்கள் இந்தியாவிலும் மற்றும் வெளி நாடுகளிலும் சிறந்து விளங்குகிறார்கள். அதற்கு காரணம் இந்தகல்லூரியின் முன்னாள் முதல்வர்கள், முன்னாள் ஆசிரியர்கள் அளித்த அர்ப்பணிப்புதான் ஆகும். அவர்களை நினைத்துப் பார்க்கவேண்டும்.
இந்தவிழாவில் முன்னாள் முதல்வர்கள், முன்னாள் ஆசிரியர்கள், முன்னாள் மாணவிகள் பங்கேற்றுள்ளது பாராட்டுக்குரியது. அவர்களின் உணர்வுகளை மதிக்கிறேன். தரமான கல்வியை இந்தகல்லூரி அளித்து வருகிறது. நூற்றாண்டு விழா சிறக்க வாழ்த்துகிறேன்.
இவ்வாறு நிர்மலா சீதாராமன் பேசினார்.
முருங்கைக் காய் மலச்சிக்கலை சரி செய்யும் . வயிற்றுப் புண்ணை போக்கும் மேலும் ... |
30 வயதிற்குட்பட்ட தம்பதியினர் முறையே தாம்பத்திய உறவு வைத்திருந்தால், 6 மாதம் முதல் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.