பிரதமர் நரேந்திர மோடியை டெல்லி நாடாளுமன்ற வளாகத்தில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ சந்தித்துப்பேசினார். இந்த சந்திப்பின்போது, நிலம் கையகப்படுத்தும் சட்டத்தை ரத்துசெய்வது உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் குறித்து பிரதமருடன் அவர் ஆலோ சித்துள்ளார்.
மதியம் 12 மணியளவில் பிரதமரை சந்தித்த அவர் 20 நிமிடங்கள் அவருடன் உரையாடினார்.
இந்த சந்திப்புக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, "ஆட்சிப்பொறுப்யேற்ற 14 மாதங்களுக்கு பிறகு, பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துப்பேசினேன். விவசாயிகளுக்கு எதிரான நிலம் கையகப்படுத்தும் சட்டத்தை அடியோடு ரத்துசெய்ய வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தேன்.
ஆந்திராவில், செம்மரம் வெட்டியது தொடர்பாக 20 தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில் நீதி கிடைக்க பிரதமர் நடவடிக்கை எடுக்கவேண்டும் என வலியுறுத்தினேன். சி.பி.ஐ. விசாரணை நடத்தவேண்டும் என்றும் தெரிவித்தேன். இந்த சம்பவத்தில், உண்மையை குழி தோண்டி புதைக்க சந்திரபாபு நாயுடு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் குறித்தும் சுட்டிக்காட்டினேன்.
மேலும், நதிநீர் இணைப்பு திட்டத்தை அமல்படுத்த வேண்டும் எனக்கோரினேன். இதுதவிர பல்வேறு விஷயங்கள் குறித்தும் ஆலோசித்தோம். எனது கோரிக்கைகளை நிச்சயம் பரிசீலனைசெய்வதாக பிரதமர் தெரிவித்துள்ளார்" என்றார்.
இந்த சந்திப்பின் போது, ஆந்திராவில் 20 தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தில் நீதிகோரி பிரதமரிடம் வைகோ மனு கொடுத்தது குறிப்பிடத்தக்கது.
காய கல்ப மூலிகைகள் என்று போற்றப்படுபவைகளில் முக்கியமான இடத்தைப் பிடித்திருப்பது அருகம்புல்லாகும். இது ... |
வேலியோரங்களில் வளர்ந்து பக்கத்திலுள்ள செடி கொடிகளின் மீது படர்ந்து காணப்படும் சுசுக்கையை வைத்துக் ... |
கோவைக்கொடி இனத்தை சேர்ந்த இந்தமூலிகைக்கு பொதுவாக கருடன் கிழங்கு, பேய் சீந்தில், ... |
Leave a Reply
You must be logged in to post a comment.