மோடியின் செல்வாக்கை காங்கிரஸ் கட்சியால் சகித்துக் கொள்ள முடியவில்லை.

 "பிரதமர் மோடியின் செல்வாக்கை காங்கிரஸ் கட்சியால் சகித்துக் கொள்ள முடியவில்லை. அதனால் பாராளுமன்றத்தை முடக்கிவருகிறது." என்று மத்திய பாராளுமன்ற விவகாரத்துறை மந்திரி வெங்கையா நாயுடு குற்றம்சாட்டினார்.

பாராளுமன்றம் முடக்கம்

பாராளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. பாராளுமன்றத்தில் லலித்மோடி விவகாரம், 'வியாபம்' ஊழல் உள்ளிட்ட பிரச்சினைகளை கிளப்பி, இதுசம்பந்தமாக மத்திய வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ், ராஜஸ்தான் மாநில முதல்மந்திரி வசுந்தரா ராஜே, மத்திய பிரதேச மாநில முதல்–மந்திரி சிவராஜ் சவுகான் ஆகியோர் பதவி விலகக்கோரி காங்கிரசார் பாராளுமன்றத்தை முடக்கிவருகிறார்கள்.

இதுகுறித்து பாராளுமன்ற விவகாரத்துறை மந்திரி வெங்கையா நாயுடு நேற்று பெங்களூருவில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

பதவி விலகமாட்டார்

''சுஷ்மா சுவராஜ் விவகாரத்தில் பாரதீய ஜனதா கட்சி தெளிவாக இருக்கிறது. லலித் மோடிக்கு 'விசா' வழங்கப்பட்ட விவகாரத்தில் வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் சட்டத்திற்கு புறம்பாகவோ நீதிக்கு எதிராகவோ செயல்படவில்லை. மனிதாபிமான அடிப்படையிலேயே செயல்பட்டு உள்ளார். சிறப்பாக செயல்பட்டு வரும் மத்திய மந்திரிகளில் அவரும் ஒருவர். அவர் நாட்டிற்கும் இந்த அரசுக்கும் கிடைத்த மிகப்பெரிய சொத்து. அவர் பதவி விலகும் பேச்சுக்கே இடமில்லை.

தன்மீதான குற்றச்சாட்டிற்கு பதில் அளிக்க அவர் தயாராக இருக்கிறார். ஆனால் அதற்கு எதிர்க்கட்சிகள் தயாராக இல்லை. அவருக்கு எதிராக காங்கிரஸ் பொய்யான குற்றச்சாட்டுகளை கூறி வருகிறது. சுஷ்மா சுவராஜின் நடவடிக்கை குற்றச்செயல் என்று ராகுல் காந்தி கூறி இருக்கிறார். காங்கிரஸ் ஆட்சியில் போபால் விஷ வாயு சோகத்திற்கு காரணமான வாரென் ஆண்டர்சன், மும்பை குண்டு வெடிப்பு குற்றவாளி தாவூத் இப்ராகிம், போபர்ஸ் பீரங்கி பேர ஊழலில் தொடர்புடைய குவத்ரோச்சி ஆகியோரை வெளிநாட்டிற்கு தப்பவிட்டனர். பிரதமர் மீதும் மத்திய மந்திரிகள் மீதும் மலிவான குற்றச்சாட்டுகளை கூறுவது காங்கிரசுக்கு வாடிக்கையாகிவிட்டது.

நடவடிக்கை எடுக்காதது ஏன்?

இப்போது லலித் மோடிக்கு விசா வழங்கப்பட்டது தொடர்பாக பிரச்சினையை கிளப்பி வரும் காங்கிரஸ் கட்சி அவர்கள் ஆட்சியில் லலித் மோடியை வெளிநாடு செல்ல அனுமதித்தது ஏன்? அவரை திரும்பவும் இந்தியாவிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுத்திருக்கலாமே? அப்படி நடவடிக்கை எடுக்காதது ஏன்? நாங்கள் ஆட்சிக்கு வந்த பிறகு அமலாக்கத்துறை லலித் மோடிக்கு நோட்டீசு அனுப்பி இருக்கிறது.

தற்போது மத்தியில் நேர்மையான, ஒளிவுமறைவில்லாத ஆட்சி நடந்து வருகிறது. நாங்கள் எந்தவிதமான ஊழலிலும் ஈடுபடவில்லை. பாராளுமன்ற விவகாரத்துறை மந்திரி என்ற வகையில் பாராளுமன்றம் முடக்கப்படுவது எனக்கு மிகுந்த வேதனை அளிக்கிறது.

பின்வாங்கிய காங்கிரஸ்

பாராளுமன்றத்தை சுமூகமாக நடத்துவதற்காக கூட்டப்பட்ட அனைத்துக்கட்சி கூட்டத்தில் 28 கட்சிகள் கலந்து கொண்டன. இதில் 27 கட்சிகள் பாராளுமன்றத்தை சுமூகமாக நடத்த ஒத்துழைப்பதாக உறுதி அளித்தன. ஆனால் காங்கிரஸ் கட்சி அளித்த வாக்குறுதியில் இருந்து பின்வாங்கி இருக்கிறது.

டெல்லி மேல்–சபை எதிர்க்கட்சி தலைவர் குலாம்நபி ஆசாத் கூட்டத்தை நடத்தவிடமாட்டோம் என்று பாராளுமன்ற கூட்டம் தொடங்கப்படுவதற்கு முன்பே வெளிப்படையாக தெரிவித்தார். எனவே அவர்கள் திட்டமிட்டே பாராளுமன்றத்தை முடக்குவது தெளிவாகிறது. நூறு ஆண்டுகள் பாரம்பரியம் மிக்க காங்கிரஸ் கட்சியிடம் இருந்து நான் இதை எதிர்பார்க்கவில்லை. ஆனால் அப்போதைய காங்கிரசுக்கும் தற்போதைய காங்கிரசுக்கும் வேறுபாடுகள் உள்ளது என்பதும் ஒரு உண்மை. முதலில் ராஜினாமா பின்னர் விவாதம் என்கிறார்கள். இதுதான் முறையா?

மோடியின் செல்வாக்கு

பாராளுமன்றத்தில் விவாதம் நடத்த காங்கிரஸ் தயாராக இல்லை. அதற்கு காரணம் தோற்கடிக்கப்பட்டதை அவர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அதோடு உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் பிரதமர் மோடியின் செல்வாக்கு பெருகி வருவதை அவர்களால் சகித்துக்கொள்ள முடியவில்லை. அதனால் பிரதமர் மோடி மற்றும் மத்திய அரசையும் சிறுமைப்படுத்த முயற்சிக்கிறார்கள். மேலும் காங்கிரஸ் கட்சியினால், மோடி தலைமையிலான இந்த அரசு வெற்றிகரமாக செயல்படுவதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

இப்போது நிலம் கையகப்படுத்தப்படும் மசோதாவுக்கு எதிராக 'ஒரு அங்குல நிலத்தைக் கூட கையகப்படுத்த விடமாட்டோம்' என்று முழக்கமிட்டு வரும் ராகுல் காந்தி, அவரது கட்சி ஆட்சி நடைபெற்று கொண்டிருக்கும் மாநிலங்களில் பல ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு இருப்பது பற்றி என்ன சொல்கிறார்? அவரது ஒரு அங்குலம் என்பது என்ன கணக்கு என்பதை அவர் தெளிவுபடுத்த வேண்டும்.
ராகுல் காந்தி

காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வரும் கர்நாடக மாநிலத்தில் தற்கொலை செய்துள்ள விவசாயிகளின் குடும்பத்தினரை நேரில் சென்று பார்க்காமல், தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியின் ஆட்சி நடைபெற்று வரும் மாநிலமான ஆந்திராவிற்கு விவசாயிகளை நேரில் பார்வையிட சென்றது ஏன் என்று ராகுல் காந்தி இங்கு தெளிவுபடுத்த வேண்டும்.''

இவ்வாறு வெங்கையா நாயுடு கூறினார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

இது மோதலுக்கான நேரமல்ல மோடி கயா ...

இது மோதலுக்கான நேரமல்ல மோடி கயானாவில் பேச்சு கர்பியன் நாடான கயானா சென்றுள்ள பிரதமர் மோடி, நேற்று ...

இந்தியாவின் செயல்பாட்டிலும் ஜ ...

இந்தியாவின் செயல்பாட்டிலும் ஜனநாயகம் உள்ளது. – மோடி பெருமிதம் '' இந்தியாவின் டி.என்.ஏ.,விலும், செயல்பாட்டிலும் ஜனநாயகம் உள்ளது,'' என ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிக ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை அர்ப்பனிக்லக்கிறேன் – மோடி நெகிழ்ச்சி '140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப் ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை ஏற்படுத்த இந்தியா ஆர்வம் – மோடி பல்வேறு துறைகளில் கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியா ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அத ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிஷ்டம் – மோடி பெருமிதம் பிரதமர் ஆக கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிர்ஷ்டம்,'' ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென் ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென்ற முதல் இந்தியப் பிரதமர் மோடி பிரேசிலில் ஜி20 மாநாட்டை முடித்த பின், கயானா அதிபர் ...

மருத்துவ செய்திகள்

புற்றுநோயை குணபடுத்தும் ஒட்டக பால்

அரபு நாடுகளை சேர்ந்த விஞ்ஞானிகள் ஒட்டகப் பால் மற்றும் அதன் சிறுநீரில் இருந்து ...

வயிற்றில் உள்ள பூச்சிகள் கிருமிகள் அகல வேண்டுமானால்

குப்பைமேனி இலையைக் கசக்கிப்பிழிந்த சாற்றை வயதுக்கு ஏற்றவாறு கொடுக்க வேண்டும்.

குழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க

வயிற்றில் பூச்சியா - குழந்தையின் வயிற்றில் பூச்சி இருக்கிறது என்ற சந்தேகம் வந்தவுடனேயே ...