லிபியாவில் அதிபர் கடாபிக்கு எதிராக மக்கள் புரட்சி நடத்தி வருகின்றனர். அவர்களை அடக்க ராணு வத்தை கடாபி ஏவி விட்டுள்ளார். அவர்கள் போராட்டத்தில் ஈடுபடும் பொது மக்களை கொன்று குவித்து வருகின்றனர். இருந்தும் ராணுவத்துடன் எதிர்ப்பாளர்கள் கடும் துப்பாக்கி சண்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.
பெங்காசி, ஜாவியா, ராஸ் வனுப் உள்ளிட்ட நகரங்கள் அவர்கள் வசம் இருந்தன. அவற்றை
மீட்கும் நடவடிக்கையில் கடாபியின் ராணுவமும், அவரது ஆதரவாளர்களும் ஈடுபட்டுள்ளனர். கடந்த வாரம் எதிர்ப்பாளர்களின் கட்டுப் பாட்டில் இருந்த ஜாவியா நகரை கடாபியின் ஆதரவாளர்கள் கைப்பற்றினர்.
நேற்று எதிர்பாளர்கள் வசம் உள்ள பிரகா நகரத்தையும் தங்கள் கட்டுப் பாட்டுக்குள் கொண்டு வர கடும் தாக்குதல் நடத்தினர். டாங்கிகள், மற்றும் எந்திர துப்பாக்கிகள் மூலம் சண்டையில் ஈடுபட்டனர். பின்னர் அந்நகரம் கடாபியின் ராணுவ கட்டுப்பாட்டில் வந்தது.
இதை தொடர்ந்து இழந்த பிரகாநகரத்தையும் அவர்கள் மீட்டனர்.அதற்கு அடுத்த படியாக எதிர்ப்பாளர்கள் வசமுள்ள பெங்காசி நகரத்தை மீண்டும் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வர தீவிரமாக உள்ளனர். இது தலைநகர் திரிபோலிக்கு அடுத்த படியாக லிபியாவின் 2-வது பெரிய நகரமாகும்.
தற்போது கடாபியின் ராணுவமும், அவரது ஆதரவாளர்கள் பெங்காசி நகரை நெருங்கிவிட்டனர். அந்த நகரமும் விரைவில் ராணுவம் வசம் விழும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தகவலை அல்ஜி சிரா டெலிவிஷன் அறிவித்துள்ளது.
இதற்கிடையே பெங்காசி நகரின் மீது ராணுவம் குண்டு வீச தடை விதிக்கும் படி ஆயிரக்கணக்கான பெண்கள் நேற்று பேரணி நடத்தினர். அதில், குழந்தைகள், முதியவர்கள், இளம் பெண்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கைகளில் எகிப்து கொடி ஏந்தி கடாபிக்கு எதிராக கோஷ மிட்டபடி சென்றனர். குண்டு வீசினால் நாங்கள் கொல்லப்படுவோம். எனவே எங்களுக்கு ஐ.நா. சபை உதவ வேண்டும் என கோஷமிட்டனர்.
ஆனால் அதை கடாபியின் ராணுவம் கண்டு கொள்ளவில்லை. பெங்காசியை நோக்கி தொடர்ந்து முன்னேறி செல்கிறது. லிபியாவில் கடாபி தன் மக்களுக்கு எதிராக எடுத்து வரும் ராணுவ நடவடிக்கைக்கு அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட உலக நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன. தொடர்ந்து தாக்குதல் நடத்தினால் பன்னாட்டு படைகள் மூலம் லிபியாவில் ராணுவ நடவடிக்கை மேற் கொள்ள திட்டமிடப்பட்டிருந்தது.
இழந்த நகரங்களை மீட்க கடாபியின் ராணுவம் தொடர்ந்து தாக்குதல் நடத்தி மக்களை கொன்று குவித்து வருகிறது. இதை தடுத்து நிறுத்த அமெரிக்கா தனது 2 போர்க்கப்பல்களை லிபியாவுக்கு அனுப்பியுள்ளது. அவை சூயஸ் கால்வாய் வழியாக லிபியா அருகே சென்றன.
அந்த போர்க்கப்பல்களில் இருந்தபடியே கடாபியின் ராணுவத்தை தாக்க அமெரிக்கா திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் மக்களை காப்பாற்றவும் நடவடிக்கை மேற் கொள்ளப்பட உள்ளது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கரிசலாங்கண்ணியானது பித்தநீர்ப் பெருக்கியாகவும் மலமகற்றியாகவும் செயல்படுகிறது. |
1. மஞ்சள் கரிசலாங்கன்னித் தழைகள் கைப்பிடி அளவு 2. புதினாத் தழைகள் இரண்டு கைப்பிடி ... |
நெல்லி இலைகளினால் விஷ்ணுவை அர்ச்சிப்பது மிகவும் விஷேசமானது .தேவலோகத்தில் இந்திரன் அமுதத்தை ... |
Leave a Reply
You must be logged in to post a comment.