மாநிலங் களவையில் இடையூறு இன்றி மசோதாக்கள் நிறைவேறும் வகையில் சீர்திருத் தங்கள் கொண்டுவர வேண்டும்; அது குறித்து விவாதம் நடத்தப்பட வேண்டும் என மத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லி தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அமோக வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. பாஜக தனிப் பெரும்பான்மை பெற்று பிரதமரானார் நரேந்திர மோடி. தேர்தலின்போது பல்வேறு வாக்குறுதிகளை மோடி அளித்திருந்தார். மக்களவையில் பாஜவுக்கு போதிய உறுப்பினர்கள் இருந்தபோதிலும், மாநிலங்களவையில் போதுமான எம்பிக்கள் இல்லை. இதனால் முக்கிய மசோதாக்களை நிறைவேற்றுவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், மாநிலங்களவையில் மசோதாக்களை நிறைவேற்றும் தற்போதைய நடைமுறையில் சீர்திருத்தங்களை கொண்டுவர வேண்டும் என மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி கூறியுள்ளார்.'ஊழல் தடுப்பு சட்ட திருத்தம் உள்ளிட்ட மசோதாக்களை மாநிலங்களவையில் நிறைவேற்ற முடிவதில்லை. மசோதாக்களை நிறைவேற்றுவதில் சீர்திருத்தங்கள் கொண்டுவர வேண்டும். இதுகுறித்து விவாதம் நடத்தப்பட வேண்டும். இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் மசோதாக்களுக்கு ஒருமுறைதான் எதிர்ப்பு தெரிவிக்க முடியும். இரண்டாவது அல்லது 3வது முறை எதிர்ப்பு தெரிவிக்க முடியாது' என அருண் ஜெட்லி தெரிவித்தார்.
பல்வேறு காரணங்களினால் கல்லீரல் பாதிக்கப்பட்டு நோய் ஏற்படும். இவைகளில் முக்கியமானது வைரஸ் கிருமியால் ... |
கீரைகளில் உப்புச் சத்துக்களும், உலோகச் சத்துக்களும், வைட்டமின் என்னும் உயிர்ச் சத்துக்களும் உள்ளன. ... |
உயிர்வளியான ஆக்சிஜனை ரத்தத்தில் கடத்தி நம் உடலின் அனைத்து பாகங்களிலும் பரவச்செவது சிவப்பு ... |
Leave a Reply
You must be logged in to post a comment.