ஆன்லைன் பண பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் வகையில், கட்டண சலுகை

 ஆன்லைன் பண பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் வகையில், கட்டண சலுகை மற்றும் வரிப் பலன்களை வழங்க நிதியமைச்சகம் பரிசீலித்து வருகிறது.

நாட்டில் கருப்புபணத்தை ஒழிக்கும் வகையில் ஆன்- லைன் பணப் பரிவர்த்தனை ஊக்குவிக்கப்படும் என மத்திய பட்ஜெட்டில் நிதிமந்திரி அருண்ஜெட்லி அறிவித்து இருந்தார். அதன்படி கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகள் மூலம் மேற்கொள்ளப்படும் பணப் பரிவர்த்தனைகளை அதிகரிக்க நடவடிக்கை எடுக் கப்படும் என அவர் கூறினார்.

இதைத் தொடர்ந்து இந்த மின்னணு-பரிவர்த்தனையை ஊக்குவிப்பதற்கான பரிந்துரை வரைவை நிதியமைச்சகம் உரு வாக்கியது. பின்னர் இந்த பரிவர்த்தனை தொடர்பாக பொது மக்களிடம் இருந்து கடந்த ஜூன் மாதம் முதல் இணைய தளம் வாயிலாக, நிதியமைச்சகம் கருத்துகளை கேட்டுவந்தது.

இவற்றின் அடிப்படையில் 30 கருத்துகள் அடங்கிய வரைவு ஒன்றை நிதிய மைச்சகம் உருவாக்கி உள்ளது. இதில் ரூ.1 லட்சம் வரையிலான பணப் பரிவர்த்தனையை ஆன்லைன் மூலம் நடத்துவோருக்கு பல்வேறு சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

அதன்படி ஆன்லைன்-பரிவர்த்தனையில் உள்ள பல்வேறு விதமான மறைமுக கட்டணங்களை நீக்குதல், செலுத்தும்பணத்தின் அடிப்படையில் ஊக்கத் தொகை வழங்குதல் போன்ற சலுகைகள் அந்த வரைவில் அறிவிக்கப்பட்டு உள்ளன.

மேலும் கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகள் மூலம் பணப் பரிவர்த்தனையில் ஈடுபடுவோருக்கு வருமான வரிப்பயன்கள் மற்றும் பெட்ரோல், சமையல் கியாஸ், ரெயில்டிக்கெட் போன்ற பயன்பாடுகளில் பரிவர்த்தனை கட்டண தள்ளுபடி போன்றவையும் வழங்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

இதைப்போல தங்கள் சரக்குகளுக்கு ஆன்-லைன் மூலம் பணம் பெற்றுக் கொள்ளும் வர்த்தகர்கள் மற்றும் வியாபாரிகளுக்கு ஊக்கத் தொகை வழங்கவும் வழிகள் அறிவிக்கப்பட்டு உள்ளன.

இந்த வரைவு பரிந்துரை அமைச்சகங்கள் மற்றும் பல்வேறு துறையினரின் கருத்துகள் மற்றும் பரிந்துரைகளை பெறுவதற்காக அனுப்பி வைக்கப் படுகிறது. அதைத்தொடர்ந்து மந்திரி சபையின் ஒப்புதலுக்காக சமர்ப்பிக்கப்படும் என நிதியமைச்சக வட்டாரங்கள் தெரிவித்தன.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

அம்ரித் பாரத் சீரமைக்கப்பட்ட ர� ...

அம்ரித் பாரத் சீரமைக்கப்பட்ட ரயில் நிலையங்களை மோடி மே 22-ல் திறந்து வைக்கிறார் 'அம்ரித் பாரத்' திட்டத்தில் சீரமைக்கப்பட்ட பரங்கிமலை, ஸ்ரீரங்கம் ...

உணவு சேமிப்பு கிடங்குகளை சீர்ப� ...

உணவு சேமிப்பு கிடங்குகளை சீர்படுத்த வேண்டும் தமிழகத்தில் உள்ள உணவு சேமிப்பு கிடங்குகளை சீர்படுத்த வேண்டும் ...

மின் கட்டணம் மாதக் கணக்கெடுப்ப� ...

மின் கட்டணம் மாதக் கணக்கெடுப்பு முறை வாக்குறுதி என்ன ஆனது: தி.மு.க.,வுக்கு நயினார் நகேந்திரன் கேள்வி மின் கட்டணம் மாதக் கணக்கெடுப்பு முறை வாக்குறுதி என்ன ...

பயங்கரவாதத்தை ஒழிப்பதில் உறுத� ...

பயங்கரவாதத்தை ஒழிப்பதில் உறுதி ஹோண்டூராசுக்கு ஜெய்சங்கர் பாராட்டு அனைத்து வடிவங்களிலும் பயங்கரவாதத்தை எதிர்ப்பதில் ஹோண்டூராஸ் உறுதியுடன் இருப்பதை, ...

மாலத்தீவு படகு சேவையை மேம்படுத� ...

மாலத்தீவு படகு சேவையை மேம்படுத்த இந்தியா உதவி அதிவிரைவு படகு சவாரியை மேம்படுத்தவும், கடல்சார் இணைப்பை விரிவுபடுத்தவும், ...

மெய்சிலிர்க்க வைத்த இந்திய ராண� ...

மெய்சிலிர்க்க வைத்த இந்திய ராணுவம் பாகிஸ்தானின் ஏவுகணைத் தாக்குதலில் இருந்து பொற்கோவிலை பாதுகாத்தது எப்படி ...

மருத்துவ செய்திகள்

தொண்டை சதை அழற்சி நோய் (Tonsillitis)

டான்சிலிட்டிஸ்' (Tonsillitis) என்பதன் பெயர்தான் தொண்டை அழற்சி நோய். இது. தொண்டையின் சதையை ...

பொடுதலையின் மருத்துவக் குணம்

பற்களுடைய இலைகளையும் மிகச்சிறிய வெண்ணிற மலர்களையும் உடைய தரையோடு படரும் சிறு செடி. ...

ஓமம் ஒப்பற்ற ஒரு மருந்தாகும்

குளிர்ச்சியின் காரணத்தால் ஏற்படும் சுரம், இருமல், அஜீரணத்தால் ஏற்படும் தொல்லைகள், வயிற்று உப்பிசம், ...