அமெரிக் காவிடம் ராணுவ ஹெலிகாப்டர்கள் வாங்க மத்திய மந்திரி சபை ஒப்புதல்

 சுமார் ரூ.16 ஆயிரம் கோடி மதிப்பில் அமெரிக் காவிடம் ராணுவ ஹெலிகாப்டர்கள் வாங்க மத்திய மந்திரி சபை ஒப்புதல் அளித்துள்ளது.

பிரதமர் நரேந்திரமோடி 7 நாள் பயணமாக அமெரிக்கா, அயர்லாந்து நாடுகளுக்கு இன்று புறப்பட்டார். ஐக்கிய நாடுகள்சபை பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்கும் அவர் பின்னர் அமெரிக்க அதிபர் ஒபாமாவை சந்திக்கிறார்.

அப்போது இந்தியா–அமெரிக்கா இடையே பாதுகாப்புதுறையை மேம்படுத்தும் வகையில் முக்கியத்துவம் வாய்ந்த ஒப்பந்தங்கள் கையெழுத்தாக இருக்கின்றன.

பிரதமரின் அமெரிக்கபயணத்துக்கு முன்னதாக டெல்லியில் மத்திய மந்திரி சபை கூட்டம் (பாதுகாப்பு துறை) நேற்று நடந்தது. இந்த கூட்டம் பிரதமர் நரேந்திரமோடி தலைமையில் நடைபெற்றது. மத்திய மந்திரிகள் ராஜ்நாத்சிங், அருண்ஜெட்லி, மனோகர் பாரிக்கர் உள்ளிட்டோர் இதில் பங்கேற்றனர்.

கூட்டத்தில் அமெரிக்காவிடம் இருந்து சுமார் ரூ.16 ஆயிரம்கோடி மதிப்பில் 22 அப்பாச்சி ஹெலிகாப்டர்கள், 15 சினூக் கனரக ஹெலிகாப்டர்கள் வாங்க ஒப்புதல் அளிக்கபட்டது. 2013–ம் ஆண்டு முதல் நிலுவையில் உள்ள இந்ததிட்டத்துக்கு தற்போது மத்திய மந்திரிசபை ஒப்புதல் வழங்கி இருக்கிறது.

நவீனரக போயிங் நிறுவனத்தின் அப்பாச்சி ஹெலிகாப்டர் எந்தவித கால சூழ்நிலையிலும், நள்ளிரவிலும் குறிப்பிட்ட இலக்குகளை தாக்க வல்லது. ஒரு நிமிடத்திற்குள் 128 இலக்குகளை குறிவைத்து இந்த ஹெலிகாப்டர் தாக்கும் வல்லமை கொண்டது.

இந்திய ராணுவத்தில் தற்போது பெரும்பாலும் ரஷிய தயாரிப்பு விமானங்கள், ஹெலிகாப்டர்களே பயன்படுத்தபட்டு வருகின்றன. இந்நிலையில் சர்வதேச நாடுகளுக்கு இணையாக இந்தியபாதுகாப்பு துறையை மேம்படுத்த அமெரிக்காவிடம் இந்த நவீனரக ஹெலி காப்டர்களை வாங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

மேலும் அமெரிக்காவிடம் இருந்து அதி நவீன ஏவுகணைகள், ராக்கெட்டுகள் உள்ளிட்டவற்றையும் இந்தியா விரைவில் வாங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

கர்ப்பிணிகளுக்கு DHA கூடிய பால் மாவு அவசியமா?

அதற்கு எந்த விதமான ஆதாரமும் இல்லை. நான் எந்த ஒரு ஊட்டச்சத்து மாவையும் ...

உயர் இரத்த அழுத்தம் உருவாக காரணம ?

இரத்த கொதிப்பு (உயர் இரத்த அழுத்தம்) சமீபகாலமாக நம்நாட்டு மக்களில் பெரும்பாலானவர்களை பாதித்து ...

தொட்டாற்சுருங்கியின் மருத்துவ குணம்

தொட்டாற்சுருங்கி இலைச் சாற்றை எடுத்துக் காலையிலும், மாலையிலும் தேமலின் மேல் தடவி வைத்துக் ...