தனுஷ்கோடி கடற் கரையில் இருந்து இலங்கையின் தலை மன்னார் வரையில் கடலில் பாலம் அமைக்க திட்டமிடபட்டுள்ளது. ரூ.34 ஆயிரம் கோடி மதிப்பிலான இந்த திட்டத்திற்கான ஆய்வுப்பணிகள் நடந்து வருகிறது. கொல்கத்தா முதல் கன்னியாகுமரி வரையிலான கிழக்குகடற்கரை 4 வழிச் சாலை திட்டப் பணிகள் நடந்து வருகிறது.
மதுரையில் கப்பலூர் சுங்கச் சாவடி இ-டோலிங் முறையில் இணைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், அனைத்து சுங்கச் சாவடிளின் வசூல் தொடர்பான அனைத்து விவரங்களும் மத்திய அரசால் ஒருங்கிணைக்கபட்டு கண்காணிக்கப்படும்.
தமிழக சட்டப் பேரவைத் தேர்தலை தேசிய ஜனநாயக கூட்டணி தலைமையில் பாஜக எதிர்கொள்ளும். அன்பு மணியை முதல்வர் வேட்பாளராக ஏற்கவேண்டும் என, பாமக விரும்புகிறது. எல்லா கட்சிகளுமே தங்கள் கட்சியை சேர்ந்தவர்கள் தான் முதல்வராக வரவேண்டும் என விரும்புவது இயல்பு. இருப்பினும் கூட்டணி என்று வரும் போது சில மாற்றங்களை ஏற்றுக் கொள்ளகூடிய சூழ்நிலைகள் உருவாகும். தற்போதைய சூழலில் மதிமுகவை தவிர தே.மு.தி.க, பாமக உள்ளிட்ட மற்ற கட்சிகள் தேசியஜனநாயக கூட்டணியில் நீடிக்கின்றன.
மதுரையில் செய்தியாளர்களிடம் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் பேசியது.
ஜாதிக்காய், சுக்கு, துளசி விதை, கடுக்காய், இவைகளை ஒரே அளவாக எடுத்து உரலில் ... |
கோழையகற்றியாகவும், சிறுநீர் பெருக்கியாகவும், குடல் வாயு அகற்றியாகவும் செயல்படுகிறது. |
Leave a Reply
You must be logged in to post a comment.