சபாஷ், ஒற்றை எம்பி!

நைஷ்டிக பிரம்மச்சாரியான ஐயப்பனின் சன்னிதானத்துக்கு 10 முதல் 50 வயதுக்குட்பட்ட பெண்கள் செல்லக்கூடாது என்பது சபரிமலையில் காலம் காலமாக பின்பற்றப்பட்டுவந்த வழிமுறை. ஆனால், இது பாலின சமத்துவத்துக்கு எதிரானது என்று சொல்லி, சபரி மலை வழிபாட்டுக்கே சம்பந்தமில்லாத ஒரு வக்கீல்களின் குழு ஒன்று தொடர்ந்த வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட், சபரிமலைக்கு இளம்பெண்கள் செல்ல வழக்கத்தில் இருந்த தடையை நீக்கி 2018 செப்டம்பரில் தீர்ப்பளித்தது.

சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பு, இந்துக்களின் நம்பிக்கையை சிதைக்கும் செயல் என்பதால் அதை மறுபரிசீலனை செய்ய கேரள அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை ஐயப்ப பக்தர்களும் இந்து அமைப்புகளும் முன்வைத்தன. ஆனால், மேல்முறையீடு செய்ய கேரள அரசு மறுத்தது. இதனால் போராட்டம் வெடித்தது. லோக்சபா தேர்தல் நெருங்கும் நிலையில் இவ்வளவு அதிருப்தியை சந்திப்பது ஏன் என்று கம்யூனிஸ்ட் கட்சிக்குள்ளேயே கலகக்குரல் எழுந்தது.

ஆனால், இந்து அமைப்புகளின் போராட்டம் தீவிரமானால், இந்துக்கள் ஓட்டு காங்கிரசுக்கு போகாமல் பாஜவுக்கு பிரியும். எதிர்ப்பு ஓட்டுகளை காங்கிரசும் பாஜவும் பிரித்துக் கொண்டால் நம்முடைய பாரம்பரியமான ஓட்டுகள் நமக்கு கிடைக்கும்; எளிதாக வெற்றிபெற்றுவிடலாம் என்று கணக்கு போட்ட கம்யூனிஸ்ட் அரசு, சபரிமலை போராட்டத்தை அணையாமல் பார்த்துக் கொண்டது.

தீர்ப்பை அமல்படுத்துகிறேன் என்ற பெயரிலும், போராட்டக்காரர்களை ஒடுக்குகிறேன் என்ற பெயரிலும் ஐயப்ப பக்தர்களையும் இந்துக்களையும் எவ்வளவு இழிவுபடுத்த முடியுமோ அந்த அளவுக்கு இழிவுபடுத்தியது.

தேர்தல் முடிவுக்கு பிறகு கம்யூனிஸ்ட் கூட்டணியில் இருந்து வெற்றிபெற்றுள்ள ஒரே ஒரு எம்பியான பிரேமசந்திரன், 17வது லோக்சபாவின் முதல் தனிநபர் மசோதாவை கொண்டுவர நோட்டீஸ் கொடுத்திருக்கிறார்.

‘சபரிமலை ஸ்ரீதர்மசாஸ்தா கோயில் (சிறப்பு ஏற்பாடு) மசோதா 2019’ என்று பெயரிட்டுள்ள அந்த மசோதாவில் சபரிமலையின் பாரம்பரியம் காக்கப்பட வேண்டும்; 10 முதல் 50 வயதுக்குட்பட்ட பெண்கள் செல்வதற்கு வழக்கத்தில் இருந்த தடை தொடர வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
காலம் கடந்து வந்த ஞானமாக இருந்தாலும், செய்த தவறை உணர்ந்து அதற்கு பரிகாரமாக பார்லிமென்ட்டில் தீர்மானம் கொண்டுவந்த எம்பிக்கு பாராட்டுக்கள். இந்த தீர்மானத்தை எதிர்த்து ஓட்டளித்து தீர்மானம் நிறைவேறவிடாமல் தடுக்க அவர் சார்ந்த கூட்டணிக்கு லோக்சபாவிலும் ராஜ்யசபாவிலும் நாதியில்லை என்பது கூடுதல் ஆறுதல். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி சபரிமலை பிரச்னைக்கு புதிய சட்டத்தின் மூலம் நிரந்தர தீர்வு காண மத்திய அரசு முன்வர வேண்டும்.

நன்றி :கோபால் ஜி

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

அமித் ஷா தலைமையில் நேற்று நடைபெ ...

அமித் ஷா தலைமையில் நேற்று நடைபெற்ற பாதுகாப்பு பற்றிய உயர்மட்ட ஆய்வு கூட்டம் ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்பு நிலைமை குறித்த உயர்மட்ட ஆய்வுக் கூட்டம் ...

மக்களின் கோரிக்கைகளை நிறைவேறு ...

மக்களின் கோரிக்கைகளை நிறைவேறுங்கள், ஸ்டாலினை தாக்கிய அண்ணாமலை நேற்று கோவையில் திமுகவின் முப்பெரும் விழா வெகு விமர்சையாக ...

விவசாயிகளுக்கு 20,000 கோடி அள்ளிகொ ...

விவசாயிகளுக்கு 20,000 கோடி அள்ளிகொடுக்கும் மோடி மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நலன் மற்றும் ஊரகவளர்ச்சித் ...

100 நாளுக்கான செயல் திட்டத்தின் ம ...

100 நாளுக்கான செயல் திட்டத்தின் முக்கிய முன்முயற்சிகள் குறித்து மத்திய அமைச்சர் ஆய்வு மத்திய சமூகநீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சர் டாக்டர் ...

செங்கோடி 2024 பயிற்சியில் பங்கேற் ...

செங்கோடி 2024 பயிற்சியில் பங்கேற்ற இந்திய விமானப்படை ஜூன் 04 முதல் ஜூன் 14 வரை அமெரிக்க ...

பாதஹஸ்தாசனம் காணொளிக்காட்சிகள ...

பாதஹஸ்தாசனம் காணொளிக்காட்சிகளை மோடி பகிர்ந்துள்ளார் பாதஹஸ்தாசனம் அல்லது கைகளால் கால்களைத் தொடும் யோகா நிலை ...

மருத்துவ செய்திகள்

பாகற்காயின் மருத்துவக் குணம்

பாகற்காய் எளிதில் செரிமானமாகும். மலத்தைத் தூண்டும். பசியைத் தூண்டும். இருமல், வயிற்று உப்புசம், ...

தியானம் என்றால் என்ன?

தியானம் என்றால் எண்ணுதல் அல்லது நினைத்தல் என்று பொருளாகும். மனம் ஒரே பொருளின் மேலேயே ...

இரத்த அழுத்த நோய்

கல்யாணமுருங்கைக் கீரை, சீரகம் இரண்டையும் நெல்லிச்சாறு சேர்த்து அரைத்து தினமும் அதி காலையில் ...