போக்குவரத்து நெரிசலால் அவதிப்பட்டுவந்த 3-ம் வகுப்பு மாணவன், பிரதமர் நரேந்திரமோடிக்கு கடிதம் எழுதினான். அவனது கடிதத்துக்கு உடனடியாக பதில்அளித்த பிரதமர், கோரிக்கையை உடனடியாக நிறைவேற்றினார்.
பெங்களூரு வித்யாரண்யபுரா தொட்ட பொம்மசந்திரா பகுதியில் வசித்து வரும் 8 வயது சிறுவன் அபினவ், பள்ளிக்கு செல்லும் போது போக்குவரத்து நெருக்கடியில் சிக்கி, தினமும் அவதிபட்டு வந்தான். யஷ்வந்த புராவில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 3-ம் வகுப்பு படித்துவரும் அந்த சிறுவன், இந்தபிரச்னைக்கு என்ன தீர்வு என்று தனது தாத்தா விடம் கேட்டுள்ளான்.
அப்போது, அவனது தாத்தா, பிரதமருக்கு கடிதம் எழுதுமாறு ஆலோசனை கூறியுள்ளார். அதன் படி பிரதமர் நரேந்திர மோடிக்கு, அபினவ் கடிதம் எழுதினான். அதில், “கொரகுண்டே பாளையா வெளிப்புற சாலையில் ரயில்வே மேம்பால கட்டுமானபணிகள் பாதியிலேயே நின்று விட்டதால் அந்த சாலையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் உண்டாகிறது. இதனால் 3 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள பள்ளிக்கு நான் செல்ல 45 நிமிடங்களுக்கு மேல் ஆகிறது. இந்தப்பிரச்னைக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று குறிப்பிட்டு இருந்தான்.
உடனடியாக பிரதமரிடம் இருந்து அந்த சிறுவனுக்கு பதில்கடிதம் வந்தது. அதில், அந்த ரயில்வே மேம்பால பணிகளை விரைந்துமுடிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறப்பட்டு இருந்தது. மேலும் ரயில்வே மேம் பால கட்டுமான பணிகளை விரைவாக முடிக்கும்படி ரயில்வேதுறை அதிகாரிகளுக்கு நரேந்திர மோடி உத்தரவிட்டார்.
இதுபற்றி அபினவ் கூறுகையில், “நான் எழுதிய கடிதத்துக்கு பிரதமர் அலுவலகம் பதில்அனுப்பியது மகிழ்ச்சி அளிக்கிறது” என்றான்.
மனிதனின் உடலில் சிறுகுடல் மற்றும் பெருங்குடல் இணையும் இடத்தில் குடல்வால் எனும் ஒரு ... |
அகத்தை சுத்த படுத்துவதால் அகத்தி என பெயரை வைத்துள்ளனர்..சுமார் 50பது ஆண்டுகளுக்கு முன்பு ... |
ஒரு கைப்பிடியளவு இலந்தையின் கொழுந்து இலையை ஒரு புதுச்சட்டியில் போட்டு நன்றாக வதக்கிய ... |
Leave a Reply
You must be logged in to post a comment.